இந்தியா – பாகிஸ்தான் இடையே டிரம்ப் தலையீடு குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் : திமுக வலியுறுத்தல்

பாகிஸ்தானுடன் போர் நிறுத்தத்தை எட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட பேச்சுவார்த்தை குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று மத்திய அரசை திமுக வலியுறுத்தியுள்ளது. டிரம்பின் மத்தியஸ்த முயற்சிகளை வரவேற்கும் அதே வேளையில், திங்கள்கிழமை இரவு தொலைக்காட்சி மூலம் பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் இதை குறிப்பிடவில்லை என்றும், டிரம்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் தன்மையை இந்திய அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் திமுக நிர்வாகி டி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தினார். பயங்கரவாதத்திற்கு எதிரான திமுக நிலைப்பாட்டை உறுதிப்படுத்திய … Read more

இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..13-05-2025

Live Updates 2025-05-13 04:22:27 13 May 2025 11:26 AM IST சாகும் வரை ஆயுள் தண்டனை கோரியுள்ளோம்: அரசு தரப்பு *பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 9 பேருக்கான தண்டனை விவரங்கள் நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளன. குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. *பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் தாமாக முன்வந்து வழக்கில் சாட்சி அளித்தனர் எனவும் ஒருவர் … Read more

விசா விதிகளை கடுமையாக்க இங்கிலாந்து அரசு முடிவு

லண்டன், இங்கிலாந்து அரசாங்கம் சட்டப்பூர்வமாக வேலைக்காக இங்கிலாந்துக்கு வருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விசா வழங்குவதை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. சட்டப்பூர்வமாக இங்கிலாந்துக்கு பணிக்காக வருபவர்கள் அங்கேயே குடியேறுகிறார்கள். இதை குறைப்பதற்காக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதையடுத்து இங்கிலாந்தில் குடியேறுபவர்களை குறைக்கும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெள்ளை அறிக்கையில் பல்வேறு விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக இங்கிலாந்துக்கு வருபவர்களுக்கு விசா வழங்கும் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து வருவதற்காக விசா கேட்டு விண்ணப்பிப்பவர்களில் திறமையான … Read more

கும்பம் குருப்பெயர்ச்சி பலன்கள்: விரக்தியும் தாழ்வு மனப்பான்மையும் விலகும்; பதவிகள் தேடிவரும்!

கும்பம் – குருப்பெயர்ச்சி பலன்கள் 1. குரு பகவான் 5-ம் இடத்தில் அமரவுள்ளதால், இனி பல்வேறு யோகங்களை அருளப் போகிறார். மன நிலை, குணநிலை, உடல்நிலை அனைத்து வகையிலும் சந்தோஷம்  உண்டு. பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். சொல்வாக்கு கூடும்.   2. கோர்ட் வழக்குகள் சாதகமாகும். சொத்துப் பிரச்னையில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தடைகள் நீங்கி, மகளின் கல்யாணம் சீரும் சிறப்புமாக நடைபெறும்.  3. வருமானம் உயரும். எதிர்பார்த்த … Read more

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி தீர்ப்பு வழங்கினார். 9 பேருக்குமான தண்டனை விவரம் நண்பகல் 12 மணியளவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தீர்ப்பை ஒட்டி கைதான 9 பேரும் இன்று (மே 13) காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும், தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு நீதிமன்றத்தில் நேற்று மாலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில் ஆஜராகும் சாட்சிகள், … Read more

தமிழகத்தில் பலமான தலைமை அவசியம்: பவன் கல்யாண் கருத்து

அமராவதி: ஆந்திர மாநில துணை முதல்வர் பவன்கல்யாண் கூறியதாவது: தமிழ் நாட்டின் பிரச்சனைகளை நான் அறிவேன். அவற்றை களைய ஜனசேனா கட்சி சார்பில் நான் எப்போதும் உதவ தயாராக உள்ளேன். மக்களுக்கு நன்மை நடக்க வேண்டுமெனில், நமக்கு பலமான தலைவர் தேவை. அப்போதுதான் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்கிற உணர்வு மக்களுக்கு வரும். ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இதனை மக்கள் உணர்ந்துள்ளனர். இதற்கு நமக்கும், நமது நாட்டுக்கும் கிடைத்துள்ள பலமான நாயகனே காரணம். இதனை உலக நாடுகளும் … Read more

CBSE Result 2025: மாணவர்களுக்கு கிரேஸ் மார்க் வழங்கப்படுமா? இதை தெரிந்து காெள்ளுங்கள்!

CBSE Result 2025 Grace Marks : மத்திய தேர்வு வாரியத்தின் 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கும் சமயத்தில், மாணவர்களுக்கு வழங்கப்படும் கிரேஸ் மார்க் குறித்த விவரத்தினை இங்கு பார்ப்போம்.  

பிக்பாஸ் முடிந்த நீண்ட நாட்களுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சித்!

அரசியல் என்பது பொழப்பு. இன்று அரசியல் என்பது வியாபாரம் ஆகிவிட்டது. சாதி மதத்தை விற்று பிழைப்பது என்று இருக்கிறது என்று நடிகர் ரஞ்சித் பேட்டி அளித்துள்ளார்.

பொள்ளாச்சி: நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கு: இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு! | Live

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வழக்கு நாட்டையே அதிரவைத்தது. இளம் பெண்கள், திருமணமான பெண்கள் என்று பலரை ஆசை வார்த்தை சொல்லி பழகி, பிறகு வீடியோ எடுத்து மிரட்டி, அடித்து கூட்டுப் பாலியலில் ஈடுபட்டது ஒரு வக்கிர கும்பல். “அண்ணா பெல்ட்டால அடிக்காதீங்க.” என்று கதறிய ஒரு பெண்ணின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு பொள்ளாச்சி பாலியல் வழக்கு இந்த வக்கிர கும்பலின் செல்போன்களில் இதுபோல ஏராளமான வீடியோக்கள் … Read more

அண்ணா மேம்பாலத்தில் இருந்து பேருந்து விழுந்த வழக்கு: ஓட்டுநரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சென்னை அண்ணா மேம்பாலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு அரசு மாநகரப் பேருந்து கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளான வழக்கில், அந்த பேருந்தை ஓட்டிய ஓட்டுநரை விடுதலை செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் 27 அன்று பிராட்வேயில் இருந்து வடபழனி நோக்கிச்சென்ற மாநகர அரசுப் பேருந்து அண்ணா மேம்பாலத்தில் உள்ள வளைவில் திரும்பும்போது தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 38 பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். … Read more