ஆப்கானிஸ்தானில் சதுரங்க விளையாட்டுக்கு தடை

காபூல், ஆப்கானிஸ்தானில் சதுரங்க விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து விளையாட்டு இயக்குநரக செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி கூறுகையில், “இஸ்லாமிய ஷரியாவின் கீழ் சதுரங்கம் சூதாட்டத்தின் ஒரு வழிமுறையாக கருதப்படுகிறது. இது நாட்டின் நன்மையை ஊக்குவித்தல் மற்றும் தீமையைத் தடுப்பதற்கான சட்டத்தின் படி தடைசெய்யப்பட்டுள்ளது. சதுரங்க விளையாட்டிற்கு மத ரீதியான ஆட்சேபனைகள் உள்ள நிலையில் அது தீர்க்கப்படும் வரை, ஆப்கானிஸ்தானில் இந்த விளையாட்டு நிறுத்தி வைக்கப்படும்.” இவ்வாறு அவர் கூறினார். இந்த முடிவு சதுரங்க ஆர்வலர்கள் … Read more

Kohli : '12 ஆண்டுகளுக்கு முன் நீ கொடுத்த அந்த கயிறு..!' – கோலியின் ஓய்வு குறித்து நெகிழும் சச்சின்

‘கோலி ஓய்வு!’ இந்திய அணியின் சீனியர் வீரரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார். விராட் கோலியின் ஓய்வு முடிவுக்கு சச்சின் ஒரு நெகிழ்ச்சியான வாழ்த்துச் செய்தியை பதிவிட்டிருக்கிறார். விராட் கோலி ‘சச்சின் நெகிழ்ச்சி!’ சச்சின் வெளியிட்டிருக்கும் பதிவில் கூறியிருப்பதாவது, ‘நீங்கள் இப்போது டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறீர்கள். இந்த சமயத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் செய்த ஒரு பக்குவமான செயலை நினைவுகூற விரும்புகிறேன். Virat Kohli : ‘புன்னகையுடன் விடைபெறுகிறேன்!’ – ஓய்வை அறிவித்த … Read more

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம் தொடங்கி வைப்பு

திருவள்ளூர்: மாநில அளவில் 12 மாவட்டங்களில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்ட விரிவாக்கத்தை திருவள்ளூர் அருகே திருப்பாச்சூரில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். “ஆரம்பகட்டத்திலேயே, புற்றுநோயை கண்டறிந்து தடுக்கும் வகையில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்று அமைச்சர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார். திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் துணை சுகாதாரம் நிலையத்தில், மாநில அளவில் 12 மாவட்டங்களில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்ட விரிவாக்கம் தொடக்க விழா இன்று (மே 12) … Read more

பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை!

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கப்பட்ட பிறகு, பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி கொடூர தாக்குதல் நடத்தி சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்திய ராணுவம் கடந்த 7-ம் தேதி … Read more

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தலிபான்கள் தடை!

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து, பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், அந்த அறிவிப்புக்கு மாறாகவே பல்வேறு சட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். மே-11 ஆம் தேதி இந்த … Read more

உடல் பருமன் குறைய தினம் அரை மணி நேர நடை போதும்… ஜப்பானியர்கள் டெக்னிக் இது தான்

நடைப்பயிற்சி என்பது எல்லோராலும் மேற்கொள்ள உகந்த எளிமையான பயிற்சி என்பதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கும் சிறந்த பயிற்சியாகவும் உள்ளது என்றால் மிகை இல்லை.

விராட் கோலியின் இடம் யாருக்கு…? போட்டிப்போடும் 5 வீரர்கள்!

Virat Kohli Retirement: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட உள்ளனர். இத்தொடர் ஜூன் 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணி இம்மாதம் இறுதியில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.  குறிப்பாக … Read more

இந்தியாவில் மூடப்பட்ட விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு

டெல்லி போர் பதற்றம் காரணமாக மூடப்பட்ட விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கடந்த 4 நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை … Read more

வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி

திருவனந்தபுரம், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள பனிக்கன்குடி கொம்புஒடிஞ்சான் பகுதியை சேர்ந்தவர் அனீஸ். அவருடைய மனைவி சுபா (வயது 44). இந்த தம்பதிக்கு அபிநந்து (10), அபினவ் (4) என்ற 2 மகன்கள் இருந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனீஸ் இறந்தார். அதன்பிறகு 2 மகன்களுடன் வசித்த சுபாவுக்கு ஆதரவாக, அவருடைய தாய் பொன்னம்மாள் (70) கொம்புஒடிஞ்சான் பகுதிக்கு வந்து சுபாவின் வீட்டிலேயே வசித்தார். இவர்கள் வசித்த வீட்டின் … Read more

வெளிநாட்டு வீரர்களை வற்புறுத்தி அழைக்கும் எண்ணம் இல்லை: ஐ.பி.எல். நிர்வாகம்

புதுடெல்லி, இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றத்தால் நாட்டில் அசாதாரணமான சூழல் நிலவியது. இதனால், 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒரு வாரம் நிறுத்தப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதையடுத்து பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்பினர். இன்னும் 12 லீக் மற்றும் இறுதிப்போட்டி உள்பட 4 பிளே-ஆப் சுற்று என மொத்தம் 16 ஆட்டங்களை நடத்த வேண்டி உள்ளது. சில தினங்களுக்கு முன்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டன. … Read more