கடும் வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா? – அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் என்ன?
அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. அதாவது மே 4-ம் தேதி தொடங்கி, மே 28-ம் தேதி வரை உள்ளது. அதற்குள்ளேயே, வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், ‘பள்ளிகள் திறப்பு தள்ளிப்போடப்படுகிறதா?’ என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இப்போது திருச்சி மாவட்டத்தில் கிட்டதட்ட 104 டிகிரி வந்துவிட்டது. இப்போதைக்குப் பள்ளி திறப்பு ஜூன் 2-ம் தேதி என்று அறிவித்து உள்ளோம். கோடை வெயில் அந்த சமயத்தில் … Read more