ANI:“இதை ஊடகங்களுக்குச் சொல்வது நீதிமன்றத்தின் கடமையல்ல" – விக்கிபீடியா வழக்கில் உச்ச நீதிமன்றம்!

விக்கிபீடியாவில் கடந்த ஆண்டு ANI செய்தி நிறுவனம் தொடர்பாக ஒரு கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரையில், ANI செய்தி நிறுவனத்தை ‘அரசின் ஒரு பிரசாரகர்’ என்பதுபோல சித்தரிக்கப்பட்டிருந்தது. இதற்கு ANI நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், அதில் இருக்கும் அந்தக் குறிப்பிட்ட கட்டுரையை நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது. அதற்கு விக்கிபீடியா மறுப்பு தெரிவித்த நிலையில், ANI நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், விக்கிபீடியாவுக்கு … Read more

சிந்தாதிரிப்பேட்டை நவீன மீன் அங்காடி கழிவுநீர் சுத்திகரிப்பு மையம்: அறிக்கை கோரும் ஐகோர்ட்

சென்னை: சிந்தாதிரிப்பேட்டை நவீன மீன் அங்காடியில் திடக்கழிவு, கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதா?, வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு, சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ரூ.2 கோடி 92 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய நவீன மீன் அங்காடியை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கடந்த 7-ம் தேதி திறந்து வைத்தார். 102 கடைகள் அமைக்க உள்ள … Read more

‘நேரடி பேச்சுவார்த்தைக்கான வழிகளை ஆராயவும்’ – ஜெய்சங்கரிடம் மார்கோ ரூபியோ வலியுறுத்தல்

புதுடெல்லி: இந்தியா பாகிஸ்தானிடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை அழைத்துப் பேசிய அமெரிக்க வெளியுறுவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, பதற்றத்தை தணித்து நேரடி பேச்சுவார்த்தைகளுக்கான வழிகளை ஆராயுமாறு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அமெரிக்க வெளியுறுத்துறை செய்தித் தொடர்பாளர் டாம்மி புரூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவறான புரிதல்களைத் தவிர்த்து இரண்டு தரப்பினரும் பதற்றத்தைத் தணித்து, நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். எதிர்கால சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காக பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார்” … Read more

‘இந்தியா தாக்குதலை நிறுத்தினால், நாங்களும் நிறுத்த தயார்’ – பாக். வெளியுறவு அமைச்சர்

இஸ்லாமாபாத்: இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் நிறுத்தத் தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் தெரிவித்துள்ளார். முன்னதாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க் ரூபியோ பாகிஸ்தான் துணை பிரதமர், வெளியுறவு அமைச்சர் இஷாக் தாருடன் பேசினார். அப்போது “இந்தியா, பாகிஸ்தான் இருதரப்பும் பதற்றத்தைத் தணிக்கும் வழிவகைகளை ஆராய வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார். அதற்கு, “இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் நிறுத்தத் தயாராக இருக்கிறோம்.” என்று இஷாக் தார் தெரிவித்துள்ளார். ‘சீண்டும் பாகிஸ்தான்’ – … Read more

இந்தியா பாக். எதிராக போர் பிரகடனம் அறிவிக்குமா… முந்தைய போர்களில் நடந்தது என்ன?

இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதல் உச்ச கட்டத்தை எட்டி வருகிறது. மத்திய அரசு, மக்கள் பாதுகாப்பை உறுதி படுத்த ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள பல நகரங்களில் பிளாக் அவுட் மற்றும் உயர் உஷார் நிலையை அறிவித்துள்ளது.

ஜிவி பிரகாஷ் – கயாடு லோஹர் நடிக்கும் புதிய படம்! இயக்குனர் யார் தெரியுமா?

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட ஜிவி பிரகாஷுன் “இம்மார்டல்” பட ஃபர்ஸ்ட் லுக். கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஐபிஎல்லை இங்க நடத்தலாம் வாங்க.. பிசிசிஐ-க்கு அழைப்பு விடுத்த நாடு!

18வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இத்தொடரில் இதுவரை 58 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் 12 லீக ஆட்டங்கள் மற்றும் 4 பிளே ஆஃப் சுற்றுகள் மட்டுமே எஞ்சி உள்ளன. இதற்கிடையில் தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளும் தங்களது தாக்குதலை தொடங்கி விட்டனர். இதனால் தர்மசாலாவில் நடந்த பஜ்சாப் … Read more

உங்களின் புதிய ரேஷன் கார்டு விண்ணப்ப நிலையில் ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி?

new ration card status Tamil Nadu : தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களுக்கான அரசின் சேவைகள் எளிதாக கிடைக்கும் வகையில் பெரும்பாலான துறைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிட்டன. அந்தவகையில் தமிழ்நாடு அரசின் குடும்ப அட்டை விநியோகிக்கும் துறையான உணவுப்பொருள் வழங்கல் துறையும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இந்த துறையால் செயல்படுத்தப்படும் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளையும் ஆன்லைனிலேயே பெற்றுக்கொள்ளலாம். புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம், ரேஷன் கார்டு விண்ணப்பத்தின் நிலை, ரேஷன் கார்டில் பெயர் … Read more

கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச் சந்தை

மும்பை போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது.    நேற்று இந்திய பங்குச் சந்தை சர்வதேச சூழ்நிலை, இந்தியா–பாகிஸ்தான் போர் பதற்றம் உள்பட பல்வேறு காரணங்களால் கடும் சரிவை சந்தித்தது. நேற்று 265 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 8 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.மேலும் 770 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 53 ஆயிரத்து 595 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதைப் ஓஒல் 478 புள்ளிகள் சரிந்த … Read more

பொதுமக்கள் மீதான தாக்குதலை ஏற்க முடியாது: இந்திய ராணுவம் எச்சரிக்கை

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. டிரோன் தாக்குதலை நடத்த பாகிஸ்தான் முயற்சிக்கும் நிலையில், இந்தியா அதை முறியடித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் மட்டும் இன்றி ராஜஸ்தான் உள்பட எல்லையோர மாநிலங்களிலும் பாகிஸ்தான் அத்துமீறி வருகிறது. இதற்கிடையே, எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் ஷெல் தாக்குதலையும் பாகிஸ்தான் தொடர்ந்துள்ளது. பொதுமக்கள் வசிக்கும் இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தும் நிலையில், இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் ராஜோரி மாவட்டத்தில் … Read more