ரசவாதி: அர்ஜுன் தாஸுக்கு `தாதா சாகேப் பால்கே' திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் விருது!

ரசவாதி திரைப்படத்துக்காக 15-வது தாதா சாகேப் பால்கே திரைப்படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுகிறார் நடிகர் அர்ஜுன் தாஸ். திரைப்படத் துறையினர் மற்றும் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட ரொமாண்டிக் – டிராமா திரைப்படம் ரசவாதி. இந்த படத்துக்காக அர்ஜுன் தாஸ் பெறும் 3-வது விருது இதுவாகும். ரசவாதி இந்த விருது குறித்த செய்தியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் சாந்த குமார், “ரசவாதி திரைப்படத்தில் சதாசிவம் பாத்திரத்துக்காக தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான … Read more

இமாசல பிரதேசம்: அரசு அலுவலகங்களில் நாளை குண்டு வெடிக்கும் என மிரட்டல்

குல்லு, இமாசல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்து இன்று மாலை இ-மெயில் வந்துள்ளது. இதன்படி, அடுத்த 24 மணிநேரத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடப்பட்டு உள்ளது என குல்லு மாவட்ட பேரிடர் மேலாண் கழக தலைவர் தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து, போலீசார் உள்பட அனைத்து அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டனர். குல்லு முழுவதும் வெடிகுண்டு செயலிழப்பு … Read more

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை கைப்பற்ற வேண்டும்: வங்காளதேச முன்னாள் ராணுவ தலைவர் சொல்கிறார்

டாக்கா, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் வங்காளதேசத்தில் செயல்பட்டு வரும் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸுக்கு நெருக்கமானவரும் வங்கதேச ராணுவ ரைபிள்ஸ் படையின் முன்னாள் தலைவருமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஏ.எல்.எம். பஸ்லுர் ரஹ்மான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார். பஸ்லூர் ரஹ்மான் கூறுகையில், “பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், இந்தியாவின் 7 வடகிழக்கு மாநிலங்களையும் வங்கதேசம் ஆக்கிரமிக்க … Read more

மருத்துவமனை இணைப்பு கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ.119 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை

தமிழகத்தில் ஒருங்கிணைந்த சுகாதார ஆய்வகங்கள், மருத்துவமனை இணைப்புக் கட்டிங்கள் கட்ட ரூ.119 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அரசாணைகளில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இணைப்புக் கட்டிடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநர் ஆய்வு செய்து அரசுக்கு சில பரிந்துரைகளை அனுப்பியிருந்தார். அதன்படி, அதில் 7 மருத்துவமனைகள் ஊரக வளர்ச்சி இயக்குநரகத்துக்கு கீழும், 11 மருத்துவமனைகள் நகராட்சி ஆணையரகத்தின் கீழும் வருகின்றன. அங்கு பொதுப்பணித்துறை மூலம் … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுலுக்கு நோட்டீஸ்: குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கடந்த 1937-ம் ஆண்டில் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஐர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் (ஏஜேஎல்) சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியிடப்பட்டு வந்தது. இதில் 5,000-க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். கடந்த 2008-ம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு மூடப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு ஏஜேஎல் நிறுவனம் ரூ.90 கோடி கடன்பட்டிருந்தது. இந்த சூழலில் சோனியா … Read more

Retro: “சித்தா பாட்டு கேட்டு என் மகளை நினைச்சு அழுதேன்'' – எமோஷனலான சூர்யா!

சூர்யாவின் Retro திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களி வரவேற்பைப் பெற்றுவருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, கருணாகரன், நாசர், ஸ்வாசிகா, பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை முன்னிட்டு யூடியூபில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் நாராயணன் உரையாடும் வீடியோவெளியிடப்பட்டது. Santhosh Narayanan அதில் சந்தோஷ் நாராயணன் இசை பற்றி பேசிய சூர்யா, சித்தா படத்தில் வரும் பாடலைக் கேட்டு கண்ணீர் சிந்திய நினைவைப் பகிர்ந்துள்ளார். … Read more

அங்கன்வாடி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை : தமிழக அமைச்சர் கீதா ஜீவன்

சென்னை தமிழக அமைச்சர் கீதா ஜீவன் விடுமுறை அற்ற நாட்களில் போராட்டம் நடத்தும் அங்கன்வாடி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் “தமிழக அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், அங்கன்வாடி ஊழியர்களுக்கான கோடை விடுமுறையை மே மாதம் முழுவதும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து எவ்வித முன்னறிவிப்புமின்றி அனைத்து மாவட்ட அலுவலகங்கள் முன்பாக மே 2′ … Read more

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: தேர்தல் மற்றும் கட்சிப்பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, ஆளும் திமுக கடந்தாண்டு முதலே தேர்தல்களத்தில் பயணிக்க தொடங்கிவிட்டது. தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைத்து, அவர்கள் மாவட்டங்கள் வாரியாக அணிகளின் நிர்வாகிகளை அழைத்து பேசி, பல்வேறு பரிந்துரைகளை கட்சி … Read more

விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தால் கேரளாவுக்கும் நாட்டுக்கும் பொருளாதார ஸ்திரத்தன்மை: பிரதமர் மோடி நம்பிக்கை

நாட்டின் முதலாவது தானியங்கி துறைமுகமான விழிஞ்சம் துறைமுகம் கேரளாவுக்கும் நாட்டுக்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் பகுதியில் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகம் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்ட துறைமுகத்தின் கட்டுமான பணிகள் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கின. விழிஞ்சம் துறைமுகத்தில் முதற்கட்ட பணிகள் முடிவுற்ற நிலையில் நேற்று நடைபெற்ற விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. திறப்பு … Read more

“அவர் சந்தித்த அவமானங்களை என் கிட்ட சொல்லி இருக்காரு..'' – கிரேஸி மோகன் குறித்து கே.எஸ் ரவிக்குமார்

தமிழ் நாடக மற்றும் திரைப்பட உலகில் தனது நகைச்சுவை வசனங்களுக்கும், நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதற்கும் புகழ்பெற்றவர் கிரேஸி மோகன். மறைந்த நடிகரும், எழுத்தாளருமான கிரேஸி மோகன் எழுதிய 25 புத்தகங்கள் வெளியீட்டு விழா நேற்று (மே1) நடைபெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசன், கே.எஸ் ரவிக்குமார், ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டனர். கிரேஸி மோகன் இந்த நிகழ்வில் பேசிய  கே.எஸ் ரவிக்குமார், “ கிரேஸி மோகன் சார் என்னிடம் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.  அவரது ஆரம்ப காலங்களில் அவர் … Read more