Golden Temple: 54 வருடங்களுக்கு பிறகு அணைக்கப்பட்ட பொற்கோயிலின் விளக்குகள்: காரணம் கூறும் நிர்வாகி!

அமிர்தசரஸ் பொற்கோயில் (Sri Harmandir Sahib) பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் அமைந்துள்ள சீக்கியர்களின் மிக முக்கியமான புனிதத் தலமாகும். இக்கோயில், “பொற்கோயில்” எனப் பொதுவாக அழைக்கப்படுகிறது. இது 1577-ம் ஆண்டில் சீக்கிய நான்காவது குருவான குரு ராம் தாஸ் அவர்களால் நிறுவப்பட்டது. Golden Temple தற்போது சிறப்பு உயர் தொழில்நுட்ப விளக்கு அமைப்புடன் கூடிய பொற்கோயிலில் நிரந்தர ஒளிரும் விளக்குகள் உலகளவில் போற்றப்படுகின்றன. இந்தக் கோயில் உருவாக்கப்பட்டத்திலிருந்து விதிவிலக்கான சூழ்நிலைகளைத் தவிர, ஒருபோதும் விளக்குகள் அணையாமல் … Read more

‘காலனி’ சொல் நீக்கம்: முதல்வருக்கு ஆதிதிராவிடர் ஆணையம் பாராட்டு

சென்னை: பொது பயன்பாடு மற்றும் அரசு ஆவணங்களில் இருந்தும் ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படுவதாக அறிவித்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆணையத்தின் தலைவர் நீதிபதி தமிழ்வாணன், துணை தலைவர் இமயம், உறுப்பினர்கள் ஆனந்தராஜா, ரேகா பிரியதர்ஷினி, செல்வக்குமார், பொன்தோஸ், இளஞ்செழியன் ஆகியோர் அனுப்பிய கடிதத்தில், ‘பொது பயன்பாடு மற்றும் அரசு ஆவணங்களில் இருந்து காலனி என்ற சொல் நீக்கப்படும் என அறிவித்திருப்பதன் மூலம் … Read more

பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் முயற்சிகளை முறியடித்த இந்தியா – விடிய விடிய நடந்தது என்ன?

புதுடெல்லி: இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்ததன் தொடர்ச்சியாக, வியாழக்கிழமை இரவும் பாகிஸ்தானின் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வெற்றிகரமாக வீழ்த்தியது இந்திய பாதுகாப்புப் படை. ஜம்மு விமான நிலையம், பஞ்சாபின் பதன்கோட் விமான நிலையம், ராஜஸ்தானின் நல், பலோடி, உத்தர்லை ஆகிய 3 இடங்களில் உள்ள விமானப்படை தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன்கள் வியாழக்கிழமை இரவு திடீர் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. இந்திய விமானப் படை அனைத்து ட்ரோன்களையும் … Read more

லாகூர் வான்பரப்பை மூடியது பாகிஸ்தான்

வணிக விமானங்கள் பறப்பதை தடை செய்யும் வகையில் தங்களது வான்பரப்பை மூட பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் கூறுகையில், “ லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் வகையில் வான்பரப்பு மூடப்பட்டுள்ளது. இருப்பினும் கராச்சி விமான நிலையம் மட்டும் செயல்பாட்டில் இருக்கும்” என்று தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து இந்திய … Read more

இந்தியா பாகிஸ்தான் போர்: வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம், நொடிகளில் நொறுங்கிய ட்ரோன்

India Pakistan War: ஆபரேஷன் சிந்தூரால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், குஜராத் மற்றும் ராஜஸ்தானின் ஆகிய மாநிலங்களில் எல்லை நகரங்களை குறிவைக்க முயற்சித்து வருகிறது. 

IPL 2025 : தரம்சாலாவில் பயத்தில் தவிக்கும் கிரிக்கெட் வீரர்கள், மிகப்பெரிய குட்நியூஸ் கொடுத்த மத்திய அரசு

இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏறத்தாழ ஆரம்பக்கட்ட போர் மூண்டுவிட்டது. பாகிஸ்தான் தொடர்ச்சியாக அத்துமீறி தாக்குதல்களை தொடர்ந்து வருவதால் இந்தியா தக்க பதலடி கொடுத்து வருகிறது. வியாழக்கிழமை மாலை திடீரென பாகிஸ்தான் எல்லையில் பல்வேறு இடங்களில் வரிசையாக தாக்குதல்களை நடத்தியது. இதனால், தரம்சாலாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி திடீரென பாதியிலேயே நிறுத்தப்பட்டது. எல்லையோர பகுதிகளில் பிளாக்அவுட் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியதால் இப்போட்டியை கட்டாயம் நிறுத்த வேண்டியதாக … Read more

போர் பதற்றம் : பஞ்சாப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சண்டிகர் போர் பதற்றம்  காரணமாக பஞ்சாப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, … Read more

பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்

புதுடெல்லி, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் காரணமாக நிலை குலைந்து காணப்படும் பாகிஸ்தான், காஷ்மீரில் தற்கொலைப்படை டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதன்படி பாகிஸ்தானில் இருந்து பதன்கோட் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் நோக்கி வந்த எப் 16 மற்றும் ஜேஎப். 17 ரகத்தை சேர்ந்த 2 போர் விமானங்களை நடுவழியில் மறித்து … Read more

தென் ஆப்பிரிக்க மந்திரி இங்கிலாந்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு

கேப்டவுன், தென் ஆப்பிரிக்காவின் பிரதான எதிர்க்கட்சியான பொருளாதார சுதந்திர கட்சி மந்திரி ஜூலியஸ் மலேமா (வயது 44). இவர் மேலை நாடுகளின் ஏகாதிபத்தியத்தை கடுமையாக எதிர்த்து வருகிறார். மேலும் நாட்டில் ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமான நிலங்கள் அனைத்தையும் தேசியமயமாக்கவேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இந்தநிலையில் லண்டனில் அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நாளை (சனிக்கிழமை) மாநாடு நடைபெற உள்ளது. இதில் தென் ஆப்பிரிக்கா சார்பில் ஜூலியஸ் மலேமா மந்திரி கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்தார். ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் … Read more

India – Pakistan Conflict: “எங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை" – அமெரிக்க துணை அதிபர் பேட்டி

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் வகையில், இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் இந்தியாவின் ஜம்மு, பதான்கோட் உள்ளிட்ட சில நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலை இந்திய ராணுவம் திறம்பட முறியடித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். Operation Sindoor – ஆபரேஷன் சிந்தூர் அப்போது அவரிடம் இந்தியா – பாகிஸ்தான் … Read more