முதல்வர் பதவி: `இன்னும் காத்துக்கொண்டுதான் இருக்கிறேன்; எனக்கு யோகமில்லை’ – அஜித் பவார் வருத்தம்

மகாராஷ்டிராவில் அதிக நாட்கள் துணை முதல்வராக இருந்தவர் என்ற பெருமை அஜித் பவாரை தான் போய் சேரும். எப்படியாவது முதல்வராகிவிடவேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கும் அஜித்பவாரால் அப்பதவிக்கு வரமுடியவில்லை. மும்பையில் தற்போதைய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னாள் முதல்வர்கள் நாராயண் ரானே, அசோக் சவான் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் அஜித் பவாரும் கலந்து கொண்டார். அதிர்ஷ்டம் இல்லை இக்கூட்டத்தில் பேசிய அஜித் பவார், `முதல்வராக வேண்டும் என்பது தனது ஆசை’ என்றும், `ஆனால் … Read more

எண்ணூர் விரிவாக்க மின்திட்டப் பணிகளுக்கு நிலக்கரி தர மத்திய அரசு மறுப்பு: மின்வாரியமே செயல்படுத்த முடிவு

சென்னை: எண்ணூர் விரிவாக்க மின்திட்டப் பணிகளை பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியின் கீழ், தொடங்கினால் நிலக்கரி விநியோகம் செய்ய முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, மின்வாரியமே இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. சென்னையை அடுத்த எண்ணூரில் தலா 660 மெகாவாட் திறனில் எண்ணூர் விரிவாக்க அனல்மின் நிலையத்தை மின்வாரியம் அமைக்கிறது. இதனுடன், எண்ணூர் சிறப்பு 1,320 மெகாவாட், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி 1,320 மெகாவாட் திறன் உடைய அனல்மின் திட்டங்களுக்கு, பொதுத் துறையைச் … Read more

மாணவர்கள், பணிபுரிவோருக்காக இலவச AI படிப்புகள்: சென்னை ஐஐடி அறிமுகம்

சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், 5 செயற்கை நுண்ணறிவுப் படிப்புகளை இலவசமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இப்படிப்புகள் இணையவழியில் வழங்கப்படுகின்றன. மாணவர்கள், ஆசிரியர்கள், பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கு ஏற்ற வகையில் இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), ஸ்வயம் பிளஸ் மூலம் 5 செயற்கை நுண்ணறிவுப் படிப்புகளை இலவசமாக அறிமுகப்படுத்தியுள்ளது. 25 முதல் 45 மணி நேரம் வரை கொண்ட இப்படிப்புகள் இணைய … Read more

அமெரிக்காவில் வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

வாஷிங்டன்: வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு அமெரிக்காவில் 100 சதவித கட்டண வரியை அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப். அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்கள் தேசிய பாதுகாப்பு மற்றும் பிரச்சார பாணியில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க திரைப்படத் துறையை மீட்டெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளி்யாகியுள்ளது. இந்த செயல்முறையை தொடங்க வர்த்தகத் துறை மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிக்கு அவர் அங்கீகாரம் அளித்துள்ளார். இது தொடர்பாக தனக்கு சொந்தமான ‘ட்ரூத்’ சமூக … Read more

வக்ஃபு திருத்தச் சட்டம் | இடைக்கால தடை தொடருமா? இல்லையா? உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?

Waqf Amendment Act Vs Supreme Court: வக்பு வாரிய திருத்த சட்ட த்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. 

முருகனால் மகேஷுக்கு ஏறும் BP.. துளசி தான் என்னுடைய மனைவி, வெற்றி எடுக்கும் சபதம் – கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

Kettimelam Today’s Episode Update: வெற்றி வீட்டில் ஒரு பக்கம் வெற்றி வீட்டில் நிச்சயம் ஏற்பாடு மறுபக்கம் துளசிக்கு நிச்சயதார்த்த ஏற்பாடு என நடைபெற்ற நிலையில் இன்று நடக்கப் பகுதி என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

'மிகப்பெரிய சந்தேகம்' போலீசார் விளக்கத்திற்கு மறுப்பு – மதுரை ஆதீனம் சொல்வது என்ன?

Madurai Adheenam: கார் விபத்து குறித்து கள்ளக்குறிச்சி காவல்துறை அளித்த விளக்கம் முன்னுக்கு பின் முரணாக இருப்பதாக மதுரை ஆதீனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஜாகிர் கான் – ஜஸ்டின் லாங்கர் இடையே சண்டையா? லக்னோ டீமில் என்ன நடக்கிறது? போட்டுடைத்த முகமது கைஃப்!

2025 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிதான் மிகமோசமாக உள்ளது. அந்த அணி கடைசி இடத்தில்தான் தொடரை நிறைவு செய்யும் உள்ளிட்ட பல விமர்சனங்கள் அந்த அணி மீது வைக்கப்பட்டது. ஆனால் அந்த அணி தொடரின் முதல் பாதியில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு நுழையும் முனைப்புடன் இருந்தது. இச்சுழலில் கடைசி மூன்று போட்டிகளாக கடுமையாக செளதப்பி தோல்விகளை பெற்று வருகிறது.  தற்போது அந்த அணி விளையாடிய 11 போட்டிகளில் … Read more

`மனைவியிடம் செலவுக்கு பணம் வாங்குவது கவுண்டமணி சார் சென்டிமென்ட்.!’ – மேனேஜர் மதுரை செல்வம்

தமிழ் சினிமாவின் நகைச்சுவை சக்கரவர்த்தியான கவுண்டமணியின் மனைவி சாந்தி, உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். குடும்ப வாழ்க்கை தனி, சினிமா வாழ்க்கை தனி என்று வாழ்ந்து வரும் கவுண்டமணி அவரது மனைவி மற்றும் குழந்தைகளை தனது நெருங்கிய உறவினர்களின் வீட்டு விசேஷங்கள் தவிர வேறு எந்த இடத்திற்கும் அழைத்து வந்ததில்லை. அவரின் பட பூஜைகளுக்கு கூட, சிங்கிள் மேன் ஆர்மியாகத்தான் வந்திருக்கிறார். கடந்த சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த சாந்தி, இன்று காலை காலமானார். … Read more

தேசிய கல்விக் கொள்கை  என்பது சமஸ்கிருதத்துக்கு மணி கட்டி அனுப்புவது : அன்பில் மகேஷ்

சென்னை தமிழ்க அமைச்சர் அன்பில் மகேஷ் தேசிய கல்விக் கொள்கை எனந்து சமஸ்கிருதத்துக்கு மணி கட்டி அனுப்புவது எனக் கூறி உள்ளார். நேற்று டெல்லியில்  நடந்த ஒரு விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா “காலனித்துவ ஆட்சிக்கு முன்பே சம்ஸ்கிருதத்தின் வீழ்ச்சி தொடங்கியது. பிரதமா் மோடியின் தலைமையிலான ஆட்சியில் சம்ஸ்கிருதத்தின் மறுமலா்ச்சிக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது.  சமஸ்கிருத மொழியை ஊக்குவிப்பது அதன் மறுமலா்ச்சிக்கானது மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கானது.  .மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய … Read more