ஏமன் விமான நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் – 3 பேர் பலி

சனா, இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர். ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, … Read more

கேரளா: கோயில் வளாகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்; தட்டிக் கேட்ட சிறுவனைக் கொன்ற இளைஞருக்கு ஆயுள்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த காட்டாக்கடை அருகே உள்ள பூவச்சல் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஷீபா கேரளா தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் ஆதிசேகர்(15) 10-ம்.வகுப்பு படித்து வந்தார். கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி ஆதிசேகர் அவரது நண்பர் ஒருவருடன் பூளிக்கோடு கோயில் அருகே விளையாடிவிட்டு, மாலை 5 மணியளவில் சைக்கிளில் வீட்டுக்குப் புறப்பட்டார். அப்போது ஆதிசேகர் மீது அதே பகுதியைச் சேர்ந்த … Read more

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக் கோயிலில் விற்பனை பிரசாதத்தில் பாம்பு: பக்தர்கள் அதிர்ச்சி

ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் விற்பனை பிரசாதத்தில் உயிரிழந்த குட்டி பாம்பு இருந்ததைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓசூர் தேர்ப்பேட்டை பகுதியில் உள்ள மலை மீது மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் வளாகத்தில் பிரசாதம் விற்பனை கடை உள்ளது. இங்கு புளியோதரை, தயிர்சாதம் உள்ளிட்ட பிரசாதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூவைச் சேர்ந்த … Read more

இடஒதுக்கீடு ரயில் பெட்டியை போல மாறிவிட்டது: உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் கருத்து

புதுடெல்லி: சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு என்பது ரயில் பெட்டியைப் போல மாறிவிட்டது. இந்த பெட்டியில் இடம் கிடைத்து ஏறியவர்கள் அடுத்தவரை ஏறுவதற்கு அனுமதிப்பதில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணையின்போது அவர் இந்த கருத்தை கூறியுள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள பி.ஆர். கவாய்க்கு பிறகு இந்த ஆண்டின் இறுதியில் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பொறுப்பேற்க உள்ளார். மகாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தல் கடந்த … Read more

Operation Sindoor: புகுந்து அடித்த இந்தியா…. பதற்றத்தில் பாகிஸ்தான், அச்சத்தில் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சி

India Pakistan War: அமைதியை விரும்பும் நாடாக இருந்தாலும், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது, எதிரி நாட்டிற்குள் புகுந்து அடிக்க இந்தியா தயக்கம் காட்டாது என்பதை இன்று காலை நடத்தப்பட்ட தாக்குதல் மூலம் இந்தியா மீண்டும் ஒருமுறை உலகுக்கு எடுத்துக்கூறியுள்ளது.

மாமன்: "ஒரு தோல்விப் படத்துக்குப் பிறகு என்ன கடலுக்கு அடியில் பொதச்சுட்டாங்க; ஆனா…" – பிரசாந்த்

வெற்றிமாறனின் `விடுதலை’ படத்தில் கதை நாயகனாகச் சூரிக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, `கொட்டுக்காளி’, `கருடன்’ எனத் தொடர்ந்து ஹிட் கொடுத்தார் நடிகர் சூரி. இதையடுத்து பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடித்த ‘மாமன்’ திரைப்படம் வரும் மே 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகக் காத்திருக்கிறது. இயக்குநர் பாண்டியராஜி உதவி இயக்குநராக இருந்தவர் பிரசாந்த் பாண்டிராஜ். தாய்மாமனின் கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி குடும்பங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதன் வெளியீட்டையொட்டி இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் … Read more

ஆபரேஷன் சிந்தூர் : பாகிஸ்தான் மீது தாக்குதலை தொடங்கிய இந்திய ராணுவம்

டெல்லி இந்திய ராணுவம்  ஆபரேஷன் சிந்தூர் என்னும் பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடங்கி உள்ளது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்தற்கு உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கணடனம் தெரிவித்தனர். இந்த தாக்குதலை அடுத்துபாகிஸ்தானுடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. அதாவது வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய … Read more

இந்தியா அதிரடி தாக்குதல்: பாகிஸ்தானில் 8 பேர் பலி

டெல்லி, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று … Read more

பாகிஸ்தான்: ராணுவ வாகனத்தை குறிவைத்து கண்ணிவெடி தாக்குதல்; 7 வீரர்கள் பலி

லாகூர், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த கிளர்ச்சி அமைப்பை பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்த அமைப்பு பாகிஸ்தான் போலீசார், ராணுவம் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, இந்த கிளர்ச்சி அமைப்பை குறிவைத்து பாதுகாப்புப்படையினரும் அவ்வபோது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பலூசிஸ்தான் மாகாணம் குச்சி மாவட்டம் மச் பகுதியில் ராணுவ வாகனம் இன்று சென்றுகொண்டிருந்தது. இந்த வானத்தை குறிவைத்து பலூசிஸ்தான் கிளர்ச்சி … Read more

Operation Sindoor: "மோடியின் பயணத்தை ரத்து செய்தவர்கள் சுற்றுலாப் பயணிகளைக் காக்கவில்லை" – கார்கே

ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22-ம் தேதி, பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின்போது, சவுதி சென்றிருந்த பிரதமர் மோடி, உடனடியாக அந்தப் பயணத்தை ரத்து செய்துவிட்டு இந்தியா திரும்பினார். மோடி அதேசமயம், உளவுத்துறை தோல்வியால்தான் இவ்வளவு பெரிய உயிரிழப்பு ஏற்பட்டது என மத்திய அரசு மீது குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசும் ஒப்புக்கொண்டது. தற்போது, … Read more