இந்தியா – பாக். போர் பதற்றம்: பாதுகாப்பு செயலாளருடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனை

புதுடெல்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில், பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் இன்று பிரதமர் நரேந்திர மோடி தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். எண்.7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்தும், எல்லையில் நடைபெற்று வரும் முன்னேற்றங்கள் குறித்தும் பிரதமர் மோடி ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. விமானப்படை தளபதி ஏர் சீஃப் … Read more

போர் பதற்றம்! அவசரக் கூட்டத்தை கூட்டிய பாகிஸ்தான்… பிரதமர் மோடி திடீர் ஆலோசனை!

India vs Pakistan War Tension: பிரதமர் மோடி பாதுகாப்பு செயலாளருடன் முக்கிய பாதுகாப்பு கூட்டத்தை நடத்துகிறார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி அவசர ஆலோசனை.

இளைஞர்களின் திரைத்துறை கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் குறும்பட திருவிழா

குறும்படங்கள் தற்போது சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக தேசிய விருது பெற்ற பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் கோவையில் தெரிவித்துள்ளார்.

'யார் அந்த முட்டாள்? ஸ்டாலின் போல் உளற வேண்டாம்' ஹெச்.ராஜா தாக்கு – என்ன மேட்டர்?

Tamil Nadu News: நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதற்கு, ‘யார் அந்த முட்டாள்’ என ஹெச். ராஜா அவரை விமர்சித்துள்ளார்.

வன்ஷ் பேடிக்கு காயம்… CSK-வில் அப்போ இந்த வீரருக்கு வாய்ப்பு வேணும்!

IPL 2025, Chennai Super Kings: நடப்பு 18வது சீசன்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக மோசமான சீசன் எனலாம். 2020, 2022, 2024 ஆகிய சீசன்களிலும் சிஎஸ்கே பிளே ஆப் வந்ததில்லை என்றாலும், இந்தளவிற்கு படுதோல்விகளை சிஎஸ்கே எப்போதும் சந்தித்ததில்லை. நடப்பு தொடரில் சிஎஸ்கே (CSK) சேப்பாக்கத்தில் 6 போட்டிகளை விளையாடி உள்ளது. இதில் முதல் போட்டியை தவிர்த்து அடுத்து 5 போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியடைந்திருக்கிறது சிஎஸ்கே. அதாவது இந்த சீசனுக்கு முன் வரை … Read more

'அண்ணனுக்கு எல்லாமே அவுங்கதான்…' – கவுண்டமணி மனைவி மறைவுக்கு சத்யராஜ், நிழல்கள் ரவி இரங்கல்

நடிகர் கவுண்டமணியின்  மனைவி சாந்தி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 67. திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சத்யராஜும், நிழல்கள் ரவியும் நேரில் சென்று  கவுண்டமணியின்  மனைவிக்கு அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர். சத்யராஜ் அஞ்சலி செலுத்தியப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சத்யராஜ், “கவுண்டமணி அண்ணனுக்கும், எனக்கும் இருக்கின்ற நட்பு பற்றி உங்களுக்கே தெரியும். மிகவும் நெருக்கமான நட்பு. கவுண்டமணி- சத்யராஜ் நிறையப் படங்களில் அவருடன் இணைந்து நடித்திருக்கிறேன். … Read more

PF தொகையை ஆன்லைனில் க்ளெய்ம் செய்வது எப்படி? முழு செயல்முறை இதோ

EPFO Online Claim Process: ஏப்ரல் 1, 2025 முதல், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பல மாற்றங்களை அறிமுகப்படுத்தியது. இந்த மாற்றங்களின் மூலம்,  இபிஎஃப் க்ளெய்ம் செயல்முறை எளிமையாக்கப்பட்டது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, இபிஎஃப் கணக்குகளை நிர்வகிக்கின்றது. இதில் ஊழியர்கள் மாதா மாதம் 12% தொகையை டெபாசிட் செய்கிறார்கள். நிறுவனமும் அதே அளவு தொகையை டெபாசிட் செய்கின்றது. EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு நிதி பொதுவாக இபிஎஃப் … Read more

பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் : இந்தியாவுக்கு புதின் ஆதரவு

டெல்லி ரஷ்ய அதிபர் புதின் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு தனது ஆதரவை தெரிவ்த்துள்ளார். இன்று பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் புதின் தொலைபேசி வாயிலாக பேசிய போது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக புதின், மோடியிடம் ஆலோசனை நடத்தினார். மேலும் பஹல்காம் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த புதின், உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். பிரதமர்  மோடியிடம்  ரஷ்ய அதிபர் புதின், ”பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும். ந்தியா எடுக்கும் … Read more

Jeep Wrangler Willys ‘41 Special Edition | இந்தியாவுக்கு வெறும் 30 யூனிட்டுகள் மட்டுமே வழங்கப்பட்ட ஜீப் ஸ்பெஷல் எடிசன்..!

ஜீப் இந்தியா சார்பாக வெளியிடப்பட்டுள்ள சிறப்பு ரேங்குலர் வில்லிஸ் 41 ஸ்பெஷல் எடிசனின் விலை ரூ.73.16 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகம் செய்யப்பட்டு சிறப்பு 41 பச்சை என்ற நிறத்தை பெற்தாக இந்தியாவிற்கு வெறும் 30 யூனிட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ரூபிகான் வேரியண்டின் அடிப்படையில் ரூ.1.51 லட்சம் கூடுதலாக விலை அதிகரிக்கப்பட்டிருப்பதுடன், மேலும் சிறப்பு Willys ‘41 Special Edition ஆக்செரீஸ் பேக் ஆனது ரூ.4.56 லட்சத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ரேங்குலரில் தொடர்ந்து 270 hp பவர் வெளிப்படுத்துகின்ற 2.0 … Read more

முதல்வர் பதவி: `இன்னும் காத்துக்கொண்டுதான் இருக்கிறேன்; எனக்கு யோகமில்லை’ – அஜித் பவார் வருத்தம்

மகாராஷ்டிராவில் அதிக நாட்கள் துணை முதல்வராக இருந்தவர் என்ற பெருமை அஜித் பவாரை தான் போய் சேரும். எப்படியாவது முதல்வராகிவிடவேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கும் அஜித்பவாரால் அப்பதவிக்கு வரமுடியவில்லை. மும்பையில் தற்போதைய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னாள் முதல்வர்கள் நாராயண் ரானே, அசோக் சவான் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் அஜித் பவாரும் கலந்து கொண்டார். அதிர்ஷ்டம் இல்லை இக்கூட்டத்தில் பேசிய அஜித் பவார், `முதல்வராக வேண்டும் என்பது தனது ஆசை’ என்றும், `ஆனால் … Read more