நீலகிரியில் மீண்டும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் மழையின் தாக்கம் குறைந்திருந்த நிலையில், நேற்று மீண்டும் கனமழை பெய்தது. அவலாஞ்சியில் 4-ம் நாளாக 100 மி.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்கா மட்டுமே திறந்திருந்ததால், அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீலகிரி மாவட்டத்தில் சூறாவளிக் காற்றுடன் கடந்த 5 நாட்களாக மழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. 80 சதவீதம் சுற்றுலா பயணிகள் சொந்த ஊர் திரும்பி விட்டனர். மேலும் … Read more

தென்மேற்கு டெல்லி பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 92 வங்கதேச நாட்டவர் கைது

புதுடெல்லி: தென்மேற்கு டெல்லி பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 92 வங்கதேச நாட்டவரை போலீஸார் கைது செய்துள்ளனர். டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வங்கதேச நாட்டைச் சேர்ந்த பலர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் முதல் போலீஸார் விசாரணை நடத்தி சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்கதேச நாட்டைச் சேர்ந்த நபர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் சட்டவிரோதமாத தங்கியிருக்கும் வங்கதேச மக்களை கைது செய்வதற்காக, போலீஸார் 10 நாட்கள் சிறப்பு தேடுதல் வேட்டையை … Read more

இங்கிலாந்தில் ஆரம்பப் போட்டிகளில் சும்மான் கில் இல்லை? கேப்டன்சி பொறுப்பு யாருக்கு?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில் சுப்மான் கில் புதிய டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வரும் ஜூன் 6-ம் தேதி பயிற்சி போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் சுப்மான் கில் … Read more

மதுபானத்திற்கு ‘திரிகால்’ என்று பெயரிடப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து பொங்கிய சமூக வலைதள வாசிகள்…

இந்தியாவின் முக்கிய மதுபான உற்பத்தியாளரான ராடிகோ கைதான் (Radico Khaitan) ‘திரிகால்’ (Trikal) என்ற பெயரில் பிரிமியம் விஸ்கியை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் கசிந்தது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த பிரிமியம் விஸ்கி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக முக்காலமும் அறிந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டனர். இந்து மதக் கடவுளான சிவபெருமானுடன் நெருக்கமாக தொடர்புடைய ‘திரிகால்’ என்ற பெயர், மதக் குழுக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களை பொங்கி எழச் செய்தது. தேவபூமி அல்லது “கடவுள்களின் நிலம்” என்று குறிப்பிடப்படும் உத்தரகண்ட் போன்ற … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; அல்காரஸ் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், ஹங்கேரி வீரர் பேபியன் மரோஸ்ஸான் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய அல்காரஸ் 6-1,4-6, 6-1,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 1 More update தினத்தந்தி Related Tags : பிரெஞ்சு … Read more

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை ராஜஸ்தானுக்கு இடம் மாற்ற கொலீஜியம் பரிந்துரை

சென்னை: சென்னை தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அடுத்த 4 மாதங்களில் ஓய்வு பெறவிருந்த நிலையில், அவரை ராஜஸ்தானுக்கு இடமாற்றம் செய்யவும், ராஜஸ்தான் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவாவை சென்னைக்கு இடமாற்றம் செய்யவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் 9 புதிய நீதிபதிகள் நியமனமும் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகித்த கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம் (கே.ஆர்.ஸ்ரீராம்), சென்னை உயர் நீதிமன்ற தலைமை … Read more

“கமல்ஹாசன் கன்னடர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” – கர்நாடக பாஜக

பெங்களூரு: கன்னட மக்களிடம் நடிகர் கமல்ஹான் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார். ‘தமிழில் இருந்துதான் கன்னட மொழி பிறந்தது’ என கமல் கூறியிருந்த நிலையில், அதற்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அம்மாநில பாஜக தலைவரும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனுமான விஜயேந்திர எடியூரப்பாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள … Read more

மாநிலங்களவையில் கமல் குரல் ஓங்கி ஒலிக்கும் : உதயநிதி ஸ்டாலின்

சென்னை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் குரல் மாநிலங்களவையில் ஓங்கிலிக்கும் என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் இன்று  தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், கழக அணி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கலைஞானி கமல்ஹாசன் சாருக்கு என் அன்பு வாழ்த்துகள். இத்தேர்தலில் வென்று, தமிழ்நாட்டின் உரிமைக்காகவும், இந்திய அரசியலமைப்பை – பன்முகத்தன்மையை பாதுகாக்கவும், கமல் சாரின் குரல் மாநிலங்களைவையில் ஓங்கி … Read more

உ.பி.: 5 வயது சிறுமிகள் 2 பேர் வெவ்வேறு இடங்களில் பலாத்காரம்; குற்றவாளிகள் என்கவுன்டரில் சுட்டு பிடிப்பு

லக்னோ, உத்தர பிரதேசத்தில் 2 வெவ்வேறு சம்பவங்களில் 5 வயது சிறுமிகள் 2 பேர் வேறு வேறு இடங்களில் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் போலீசாரின் என்கவுன்டரில் சுட்டு பிடிக்கப்பட்டனர். உத்தர பிரதேசத்தின் சீதாப்பூர் மாவட்டத்தில் காமியாபூர் பகுதியை சேர்ந்தவர் கமல் கிஷோர் என்ற பட்டார். அணை அருகே குடிசை பகுதியில் வசித்து வரும் இவர், நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில், 5 வயது சிறுமியை புதருக்குள் தூக்கி சென்று பலாத்காரம் செய்துள்ளார். … Read more