‘மோடிக்கு ஆதரவாக பேசுவதில் பாஜகவின் சூப்பர் செய்தித் தொடர்பாளர் சசி தரூர்’ – காங். விமர்சனம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாகப் பேசுவதில், பாஜகவின் சூப்பர் செய்தித் தொடர்பாளராக சசி தரூர் திகழ்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ் விமர்சித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தை அம்பலப்படுத்தும் நோக்கில் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் நாடாளுமன்றக் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையிலான குழு, அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் பயணம் மேற்கொண்டு வருகிறது. சசி தரூர் தலைமையிலான குழுவில், … Read more

குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது! ஞானசேகரனுக்கு என்ன தண்டனை தெரியுமா?

கடந்த ஏப்ரல் மாதம் சாட்சிகள் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஞானசேகரன் மீது குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் காவல்துறை தரப்பில் 75 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

வெளிநாட்டு பொருட்களை தவிர்த்து உள்நாட்டு பொருட்களை வாங்க மோடி வலியுறுத்தல்

டெல்லி பிரதமர் மோடி வெளிநாட்டில் இருது இறக்குமதியாகும் பொருட்களை தவிர்த்து உள்நாட்டு பொருட்களை வாங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். பெரும்பாலும் சீனாவிலிருந்து குறைந்த விலையில் அலங்கார விளக்குகள், பட்டாசுகள், பொம்மைகள் மற்றும் கடவுள் சிலைகள் போன்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. சமீப காலமாக திருவிழா விற்பனையில் இவை ஆதிக்கம் செலுத்துவதால் உள்ளூர் கைவினைஞர்கள் மற்றும் உற்பத்தியாளர்களைப் பாதிக்கிறது. பிரதமர் மோடி இது குறித்து குஜராத்தில் பொதுமக்களிடையே உரையாற்றிய போது “கணேஷ் சிலைகள் கூட வெளிநாட்டிலிருந்து வருகின்றன. … Read more

ரெயில் முன் பாய்ந்து சிறுமி உள்பட 2 பேர் தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்

திருவனந்தபுரம், கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செருந்தனா பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித் (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே ஸ்ரீஜித்திற்கும் நடுவட்டம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த ஸ்ரீஜித்தின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று கோர்ட்டில் விவாகரத்துகோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விவாகரத்து தொடர்பாக கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஸ்ரீஜித்தும் அவருடன் பழகி வந்த 17 வயது … Read more

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் அடுத்த கேப்டன் யார்? என்று அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் எதிர்பார்த்தபடி … Read more

புறாக்களுக்கு உணவளித்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு ரூ. 80 ஆயிரம் அபராதம்

சிங்கப்பூர், சிங்கப்பூர் நாட்டின் தோ பாயோ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சண்முகானந்தம் ஷியாமலா (வயது 70) என்ற பெண் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020ம் ஆண்டு தனது வீட்டிற்கு அருகே புறாக்களுக்கு உணவு அளித்துள்ளார். சிங்கப்பூரில் பொதுவெளியில் பறவைகள், விலங்களுகளுக்கு உணவு அளிக்க வேண்டுமென்றால் வனவிலங்குகள் மேலாண்மை அதிகாரியிடமிருந்து அனுமதி சான்றிதழ் பெற வேண்டும். ஆனால், ஷியாமலா எந்த வித அனுமதியுமின்றி வீட்டில் புறாக்களுக்கு உணவு அளித்துள்ளார். இது தொடர்பாக … Read more

Anakaputhur : 'எங்க சாபம் உங்களை சும்மா விடாது' – கண்ணீரில் அனகாபுத்தூர் மக்கள்! | Spot Report

“நீதிமன்ற தீர்ப்பின்படி அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம்” என்று சென்னை அனகாபுத்தூர் பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களின் வீடுகளை இடித்து அப்புறப்படுத்திவிட்டு அவர்களை வேறு இடத்திற்கு குடியமர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளது தமிழக அரசு. அனகாபுத்தூரில் வீடுகள் இடிக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் நகர், மூகாம்பிகை நகர், ஸ்டாலின் நகர், காயிதே மில்லத் நகர், சாந்தி நகர் மக்கள் கண்ணீரில் தத்தளிக்கின்றனர். Source link

“நீதிமன்ற நடவடிக்கைக்கும் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறீர்களே?” – ஸ்டாலின் மீது பழனிசாமி விமர்சனம்

சென்னை: “அதிமுக திட்டங்களுக்குதான் ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்கள் என்றால், நீதிமன்ற நடவடிக்கைக்கும் கொஞ்சமும் கூச்சமின்றி ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறீர்களே?” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளதை அடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்தை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தான் ஒரு பொம்மை முதல்வர் என்பதை மணிக்கு … Read more

மாதபி புச் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றவை: லோக்பால் அமைப்பு

புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்னாள் செபி தலைவர் மாதபி புரி புச் முறைகேடாக முதலீடு செய்து ஆதாயம் பெற்றதாக குற்றம்சாட்டியிருந்தது. இது தொடர்பாக லோக்பால் அமைப்பிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், லோக்பால் அமைப்பு மாதபி புச் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என கூறியுள்ளது. தொழிலதிபர் அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய நிறுவனங்களில், செபியின் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்தனர் என்று குற்றம் சாட்டியது. ஆனால், தன் மீதான … Read more

கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. இல்லையென்றால்! கமலுக்கு கெடு விதித்த கர்நாடகா!

kamal haasan karnataka clash: தமிழில் இருந்துதான் கன்னடம் உருவானது என கமல்ஹாசன் கூறிய நிலையில், கர்நாடகா பாஜக தலைவர் பி. ஒய். விஜயேந்திரா எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.