மாநிலங்களவை எம்பி ஆகும் கமல்ஹாசன்! தக் லைப் தான் கடைசி படமா?

Kamalhaasan: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது திமுக கட்சி. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

AV Cinema Awards: `நீங்களும் பங்கேற்கலாம்' அந்த அரிய வாய்ப்புக்கு செய்யவேண்டியது!

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் பல முக்கியமான திரைப்படங்கள் வெளியாகி முத்திரை பதித்திருக்கின்றன. பல கலைஞர்கள் மதிப்புமிக்க படைப்புகளைக் கொடுத்திருக்கின்றனர். நம் கோலிவுட்டுக்கு திறமையான பல புதிய இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அறிமுகமாகியிருக்கின்றனர். இதுபோன்ற திறமையான பல திரைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நடைபெறுகிறது. அதுபோல, இந்தாண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் வருகிற ஜூன் 13-ம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. Ananda Vikatan Cinema Awards 2024 சிறந்த நடிகர், … Read more

பக்ரீத் பண்டிகை ஜூன் 7ம் தேதி கொண்டாடப்படும்…

ஜூன் 7ல் தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, சென்னையில் இன்று துல் ஹஜ் பிறை காணப்பட்டதை அடுத்து நாளை துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் வரும் ஜூன் 7ம் தேதி பக்ரீத் கொண்டாடப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் புனித … Read more

ஜனாதிபதியுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சந்திப்பு

புதுடெல்லி, டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று நேரில் சந்தித்து பேசினார். இதுபற்றிய புகைப்படம் ஒன்றை ஜனாதிபதி அலுவலகம் எக்ஸ் சமூக ஊடக பதிவில் வெளியிட்டு உள்ளது. அந்த பதிவில், மத்திய உள்விவகாரம் மற்றும் கூட்டுறவு துறை மந்திரி அமித்ஷா, டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, நேரில் சந்தித்து பேசினார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 13-ந்தேதி, டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; ஜெசிகா, கோகோ காப் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), ரொமானியாவின் அன்கா டோடோனி உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட ஜெசிகா பெகுலா 6-2 , 6-4 என்ற நேர் செட் கணக்கில் அன்கா டோடோனியை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். இதே பிரிவில் நடைபெற்ற … Read more

வெளிநாட்டு மாணவர் விசா நேர்காணல்களுக்கு தற்காலிக தடை: அமெரிக்கா தடாலடி நடவடிக்கை

நியூயார்க், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். அமெரிக்காவில் மீண்டும் பொற்காலம் ஏற்பட செய்வேன் என கூறி வருகிறார். இந்நிலையில், குடியேற்றம் மற்றும் விசா தொடர்பாக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். இந்த சூழலில், வெளிநாட்டு மாணவர்களுக்கு டிரம்ப் நிர்வாகம் நேற்று புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. வகுப்புகளை பாதியில் நிறுத்துதல் அல்லது வகுப்புகளுக்கு செல்லாமல் தவிர்த்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால், அந்த மாணவரின் விசா ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இந்த … Read more

‘யார் அந்த சார்’ ஆதாரங்களை நீதிமன்றத்தில் கொடுக்காதது ஏன்? – பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கேள்வி

சென்னை: “அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், திமுக அரசின் கீழ் செயல்படும் காவல் துறையால் தான் ஐந்தே மாதத்தில் விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றம் ஞானசேகரனை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது என்று சொன்னால் எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் எரிகிறது?” என்று அமைச்சர் ரகுபதி சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டரீதியான நடைமுறையோ விசாரணை நடைமுறையோ தெரியாத எடப்பாடி பழனிசாமி தாம் ஒரு அரைவேக்காடு என்பதை அவரே அம்பலப்படுத்திக்கொள்கிறார். உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு … Read more

‘கன்னடத்தின் பண்டைய வரலாறு கமல்ஹாசனுக்கு தெரியாது’ – முதல்வர் சித்தராமையா

பெங்களூரு: கன்னட மொழிக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. நடிகர் கமல்ஹாசனுக்கு அது தெரியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது’ என்று கூறி இருந்தார். கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பல்வேறு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, “கன்னட மொழிக்கு மிக … Read more

DMK : எஸ்ஆர் சிவலிங்கம் முதல் கவிஞர் சல்மா வரை… திமுக வேட்பாளர்கள் பின்னணி என்ன?

DMK Rajya Sabha Candidates: மாநிலங்களவை தேர்தலுக்காக திமுக தேர்வு செய்துள்ள வில்சன், எஸ்ஆர் சிவிலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோரின் பின்னணி என்ன? என்பதை பார்க்கலாம்.