"பந்து வீச்சாளரை அவமானப்படுத்தி விட்டார்.." ரிஷப் பண்ட்டை கிழித்தெறிந்த அஸ்வின்!

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டம் நேற்று (மே 27) லக்னோவில் நடைபெற்றது. இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 227 ரன்களை குவித்தது. அந்த அணியின் கேப்டன் சதம் விளாசி தனது ஃபார்மை மீட்டெடுத்தார். இதனைத் தொடர்ந்து 228 என்ற இலக்கை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி துரத்தியது.  அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். இதனால் பெங்களூரு அணியும் இலக்கை நோக்கு வேகமாக … Read more

Shobana: 'இந்தப் பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்'- ஷோபனா நெகிழ்ச்சி

மத்திய அரசு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் மத்திய அரசு 139 பத்ம விருதுகளை அறிவித்தது, இதில் ஏழு பத்ம விபூஷன், 19 பத்ம பூஷன் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் அடங்கும். முதல்கட்டமாக 71 பிரபலங்களுக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி ஏற்கெனவே வழங்கிய நிலையில், நேற்று (மே 27) 2வது கட்டமாக 68 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பத்ம பூஷன் விருது பெற்ற ஷோபனா … Read more

ஹமாஸ் தலைவரை கொன்று விட்டோம்: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

ஹமாஸ் தலைவரை கொன்று விட்டோம்: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் முகமது சின்வர் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் தினமும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லபட்டு வருகின்றனர். இதனால் காசாவில் சிக்கியுள்ள 20 லட்சம் பாலஸ்தீனியர்களின் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருகிறது. இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் முகமது சின்வரை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதையடுத்து … Read more

சிறுமி கோவிலுக்குள் பலாத்காரம்; குற்றவாளியை விடுவித்த போலீசார் – உ.பி.யில் அவலம்

ஆக்ரா, உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் வீடு அருகே 5 வயது சிறுமி விளையாடியபடி இருந்துள்ளாள். அந்த வீட்டின் அருகே கோவில் ஒன்று இருந்துள்ளது. அப்போது, வாலிபர் ஒருவர் சிறுமியை கோவிலுக்குள் வரும்படி கூறி, அழைத்து சென்றுள்ளார். இதன்பின்பு சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி கத்தி கூச்சலிட்டதும், சத்தம் கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து ஓடியுள்ளனர். சிறுமியின் பாட்டி ஓடி வந்தபோது, அந்த வாலிபர் அவரை தள்ளி விட்டு, விட்டு தப்பியோடி விட்டார். ஆனால், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் … Read more

ஸ்பெயினில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து; 4 பேர் பலி

மாட்ரிட் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அகதிகள் ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்துள்ளனர். இதற்காக படகு மூலம் மத்திய தரைக்கடல் வழியாக அகதிகள் … Read more

’இது திமுக தலைமையின் தனி கணக்கு’ – மாநிலங்களவை வேட்பாளர் தேர்வும் பின்னணியும்!

தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை எம்.பி பதவிக்கு வரும் ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே திமுக தரப்பில் உள்ள நான்கு இடங்களுக்கு நிர்வாகிகள் முட்டி மோதத் தொடங்கிவிட்டார்கள். ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களைத் தாண்டி கூட்டணிக் கட்சியில் இருக்கும் சிலரும் முயற்சி செய்தனர். கடைசியில் யார் அந்த நான்கு பேர் என்ற பட்டியலை வெளியிட்டுவிட்டது திமுக தலைமை. தேர்தல் அறிவிப்பு தற்போது … Read more

ஊட்டி – கூடலூர் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு அபாயம்: இரவு போக்குவரத்துக்கு தடை

உதகை: ஊட்டி – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், இச்சாலையில் இரவு நேரப் போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “நீலகிரி மாவட்டத்தில் அடுத்த இரு நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், அரசு தாவரவியல் பூங்கா உட்பட ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படுகின்றன. ஊட்டி – கூடலூர் தேசிய … Read more

குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில் புதிய அரசு அமைக்க பாஜக எம்எல்ஏக்கள் முயற்சி – நடப்பது என்ன?

இம்பால்: மணிப்பூரில் புதிய அரசை அமைக்கும் முயற்சியாக பாஜக எம்எல்ஏ தோக்சோம் ராதேஷ்யாம் சிங் உள்பட 10 எம்எல்ஏக்கள், ஆளுநர் அஜய் குமார் பல்லாவைச் சந்தித்து, புதிய அரசு அமைக்க 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவாக இருப்பதாக தெரிவித்தனர். மெய்த்தி – குக்கி எனும் இரு பிரிவு மக்களிடையே மே 2023-இல் வெடித்த மோதல் காரணமாக மாநிலத்தில் அமைதியற்ற நிலை நீடித்தது. மணிப்பூர் முதல்வராக இருந்த பாஜக தலைவர் பிரேன் சிங் தலைமையிலான அரசு, இந்த மோதல்களை … Read more

தேஜா சஜ்ஜா நடிப்பில் மிராய் பட டீசர் வெளியாகியுள்ளது

சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும், பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் மிராய் டீசர் வெளியாகியுள்ளது, இப்படம் செப்டம்பர் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!

ஞானசேகரனுக்கு தண்டனை.. ஸ்டாலின் சுயதம்பட்டம் அடித்துக்கொள்கிறார்.. தவெக விஜய் காட்டம்!

Vijay slams MK Stalin: தி.மு.க. நிர்வாகியான ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.