திருச்செந்தூர்: பனங்கிழங்கின் பீலியை நீக்கிவிட்டு உண்ணும் தெய்வானை; ஆச்சரியத்தில் பக்தர்கள்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி  திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் விசேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். இக்கோயிலில், தெய்வானை என்ற 26 வயதான பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. பனங்கிழங்கு வழங்கும் பக்தர்கள் திருக்கோயில் நிர்வாக நிதி மட்டுமின்றி, கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள யானை பராமரிப்பு உண்டியல்கள் மூலம் கிடைக்கப் பெறும் பக்தர்களின் … Read more

புதுச்சேரி | திருட்டு வழக்கு விசாரணை விவகாரம்: 3 போலீஸார் ஆயுதப்படைக்கு மாற்றம்

புதுச்சேரி: திருட்டு வழக்கில் பெண் மீதான விசாரணை விவகாரப் புகார்கள் மற்றும் போராட்டத்தால் பெண் எஸ்ஐ உட்பட 3 போலீஸார் ஆயுதப்படைக்கு இன்று மாற்றப்பட்டனர். தவளக்குப்பம் பகுதி பூர்ணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் அர்ஜூன். இவரது மனைவி கலையரசி. அப்பகுதி தனியார் விடுதியில் சில ஆண்டுகளாக பணிபுரிந்துவருகிறார். சில நாட்களுக்கு முன்பு விடுதியில் தங்கியிருந்தவர் மோதிரம் காணவில்லை என கூறப்படுகிறது. அதுகுறித்து தவளக்குப்பம் போலீஸார் கலையரசியிடம் விசாரித்துள்ளனர். அப்போது கலையரசியை விதிமுறைக்கு மாறாக தாக்கியதால் மனைவி மீது காவல் நிலையத்தில் … Read more

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.69 உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: 2025-26 ஆம் ஆண்டுக்கான நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.69 அதிகரித்து ரூ.2,369 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “2025-26 ஆம் ஆண்டுக்கான காரீஃப் பருவத்திற்கான நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) 3% உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, … Read more

2 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government : 2 முதல் 5 வயதுக்குட்பட்ட  குழந்தைகளை குழந்தைகள் மையங்களில் சேர்த்திடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள்.

Kamal Haasan: "கன்னட மொழியின் வரலாறு தெரியாம பேசுறாரு…" – கமல் ஹாசனிற்கு கர்நாடக முதல்வர் கண்டனம்

கன்னட மொழி குறித்த கமலின் கருத்திற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கும் நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா கமல் ஹாசனுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறார். சென்னையில்  நடைபெற்ற ‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழாவுக்குக் கன்னட நடிகர் சிவராஜ்குமார் வருகை தந்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் சிவராஜ்குமாரைப் பாராட்டிப் பேசிய கமல்ஹாசன், உங்க பாஷை தமிழில் இருந்து வந்தது என்று கூறியிருந்தார். Kamal Haasan – Sivarajkumar இதற்குக் கர்நாடகா மாநிலத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கன்னட அமைப்புகள் … Read more

ஓடிடியில் ஒரு நாள் முன்பே ரிலீசாகும் ரெட்ரோ

சென்னை சூர்யா நடிக்கும் ரெட்ரோ படம் ஓடிடியில் அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒரு நாள் முன்பே வெளியாகிறது நடிகர் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த … Read more

2025 கேடிஎம் RC200ல் TFT கிளஸ்ட்டருடன் மாற்றங்கள் என்ன.! | Automobile Tamilan

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஃபேரிங் ரக ஸ்டைல் பெற்ற கேடிஎம் RC200 மாடலில் 2025 ஆம் ஆண்டில் TFT கிளஸ்ட்டருடன் கூடுதலாக மேட் கிரே நிறத்தை பெற்றதாக விற்பனைக்கு ரூ.2,54,028 எக்ஸ்-ஷோரூம் விலையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி, அடிப்படையான டிசைன் உட்பட எஞ்சின் சார்ந்தவற்றில் எந்த மாற்றமும் இல்லாமல் அமைந்துள்ளது. ஆர்சி200 மோட்டார்சைக்கிளில் தொடர்ந்து 25 hp பவரை வெளிப்படுத்தும் 199cc எஞ்சின் பொருத்தப்பட்டு 19.2 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் … Read more

தங்க நகைக்கடன் கட்டுப்பாடு: "அதிக வட்டி வசூலிக்கும் நிறுவனங்களை நோக்கி மக்களைத் தள்ளும்" – ஸ்டாலின்

கடந்த வாரம், இந்திய ரிசர்வ் வங்கி தங்க நகைக்கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வரைவுகளை வெளியிட்டது. அந்த வரைவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்… “விவசாயிகளின் 2 லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க் கடன்களுக்குத் தங்க நகைகளை ஈடாக ஏற்றுக்கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தமிழ்நாடு அரசின் கடுமையான கவலை குறித்துத் … Read more

நகைக் கடன் விதிகள் மீது மறுபரிசீலனை: ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்த நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: தங்க நகைக்கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யக்கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், விவசாயிகளின் 2 லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன்களுக்கு தங்க நகைகளை ஈடாக ஏற்றுக்கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தமிழக அரசின் கடுமையான கவலை குறித்து தெரிவிக்கவே நான் … Read more

ஜூன் மாதம் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்: திரிணமூல் கோரிக்கை

புதுடெல்லி: மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக ஆபரேஷன் சிந்தூர் குறித்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜுலை மாதத்தில் நடைபெறும். இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை துணைத் தலைவர் சகாிகா கோஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “பஹல்காம் தாக்குதலுக்கு பின்பும், ஆபரேஷன் சிந்தூரின் போதும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அரசுக்கு ஆதரவாக நின்றது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க அனுப்பப்பட்டிருக்கும் … Read more