தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் புதிய தலைவராக ‘ரா’ முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி நியமனம்

புதுடெல்லி: பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் (என்எஸ்ஏபி) நேற்று மாற்றியமைக்கப்பட்டது. இதன் புதிய தலைவராக ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (ரா) முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த வாரியத்தில், முப்படைகளில் இருந்து ஓய்வுபெற்ற 3 பேர், 2 ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் இந்திய வெளியுறவு பணியிலிருந்து (ஐஎப்எஸ்) ஓய்வு பெற்ற ஒருவர் என 6 … Read more

HBD Ajith Kumar: `பைக் மெக்கானிக் டு பத்ம பூஷன்' – சினிமாவை தாண்டி அஜித் செய்த ஓஜி சம்பவங்கள்!

நடிகர் அஜித்துக்கு 54-வது பிறந்தநாள் இன்று. எப்போதும் இல்லாததைவிட இந்த வருட பிறந்தநாள் அஜித்துக்கு ரொம்பவே ஸ்பெஷல். ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றிப் பேச்சு குறைவதற்குள், பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற ஸ்பா ஃபிரான்கோர்சாம்ஸ் கார் பந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்திருந்தார். இப்படி அஜித் தொட்ட இடங்களிலெல்லாம் சமீபத்தில் அதிரடி காட்டியிருந்தார். இதோ, இத்தகைய வெற்றிகள் கொடுத்த மகிழ்ச்சி குறைவதற்குள் கடந்த திங்கட்கிழமை ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து பத்ம பூஷன் … Read more

இன்றுமுதல் அமலுக்கு வருகிறது ஏடிஎம் கட்டணம் உயர்வு – புதிய வருமானவரி – ரெப்போ ரேட் குறைப்பு…

சென்னை: மே 1ம் தேதி  இன்று தொடங்கும் நிலையில் ஏடிஎம் கட்டணம் உள்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் அமலுக்க வந்துள்ளன. 2024-25 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2025-26) வருமான வரி அறிக்கை (ITR)  இன்றுமுதல் அமலுக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஏடிஎம் சேவைகளை வழங்குவதற்கான கட்டணம் உயர்வு மற்றும் ரெப்போ வட்டி குறைவால், கடனுக்கான வட்டி குறைவு உள்பட பல்வேறு வங்கி சேவைகள் இன்றுமுதல் அமலுக்கு வருகின்றன. பொதுவாக ஜூலை 31ம் தேதி … Read more

ஆந்திர பிரதேசம்: வீடு மீது கார் மோதல்; மருத்துவ மாணவர்கள் உள்பட 6 பேர் பலி

நெல்லூர், ஆந்திர பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் பொத்திரெட்டிபாளையம் பகுதியில் கார் ஒன்று விரைவாக சென்றது. அது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வீடு ஒன்றின் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதுபற்றி பொத்திரெட்டிபாளையம் காவல் நிலையத்தின் ஆய்வாளர் சுதாகர் ரெட்டி கூறும்போது, இந்த விபத்தில், 6 பேர் உயிரிழந்தனர். அவர்களில், 5 பேர் நாராயணா மருத்துவ கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என தெரிய வந்துள்ளது என்றார். இந்த விபத்தில் பலியான மற்றொரு நபர், கார் விபத்து ஏற்படுத்தியபோது, … Read more

ஐ.பி.எல்.: பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை, 10 அணிகள் இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரின் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் ஷேக் ரஷீத் 11 ரன்கள், ஆயுஷ் … Read more

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்; 35 பேர் பலி

காசா சிட்டி, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், … Read more

திமுகவுக்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும்: நயினார் நாகேந்திரன் கருத்து

தூத்துக்குடி; திமுகவுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் சேர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராக அனைவரும் ஓர் அணியில் சேர்ந்தால்தான், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும். டெல்லியில் கட்சித் தலைவர்கள், பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அப்போது, கட்சி மற்றும் பூத் கமிட்டிகளை பலப்படுத்தி, கூட்டணியை சுமூகமான சூழலில் கொண்டு செல்ல வேண்டும் என அவர்கள் ஆலோசனை வழங்கினர். … Read more

நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் மத்திய அமைச்சரவை

புதுடெல்லி: நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான பணிகள் 2020 ஏப்ரல் மாதத்தில் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், கரோனா பெருந்தொற்று பரவியதையடுத்து, இந்த பணி தள்ளிவைக்கப்பட்டது. அதன் பிறகு மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் மீண்டும் … Read more

காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்! சாதிவாரி கணக்கெடுப்பை வரவேற்பதாக ராகுல் காந்தி தகவல்…

டெல்லி:  மத்தியஅரசின்  சாதிவாரி கணக்கெடுப்பு முடிவை வரவேற்பதாக தெரிவித்துள்ள  மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி,  காங்கிரஸ் கட்சியின் கொள்கையை மத்திய பாஜக அரசு ஏற்றுள்ளது என்றும், ஆனால்,  அதற்கான காலக்கெடு குறித்தும் தெரிவிக்க வேண்டும் என்றும்  கூறியுள்ளார். மத்திய கேபினட் அமைச்சரவை சாதிவாரி கணக்கெடுப்புக்கு அனுமதி வழங்கி உள்ளது. மக்கள் தொகை பொதுக்கணக்கெடுப்பின்போது சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். “இந்திய அரசியலமைப்பின் படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு … Read more