லக்னோவை பந்தாடிய ஜிதேஷ் சர்மா.. குவாலிஃபையர் 1 சுற்றுக்கு தகுதி பெற்ற ஆர்சிபி!

RCB vs LSG: ஐபிஎல் தொடரின் 70வது லீக் ஆட்டம் அல்லது கடைசி லீக் ஆட்டம் இன்று லக்னோ ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஜிதேஷ் சர்மா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், அதனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி லக்னோ அணி பேட்டிங் … Read more

ராமர் “புராண மற்றும் கற்பனை கதாபாத்திரம்” என்று பேசியதற்காக ராகுல் காந்தி மீதான புகாரை வாரணாசி நீதிமன்றம் நிராகரித்தது

அமெரிக்காவில் கடந்த மாதம் ‘ராமர் கற்பனை’ என்று பேசிய ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரிய புகாரை வாரணாசியில் உள்ள உத்தரப் பிரதேச எம்.பி-எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்ததாக வழக்கறிஞர் ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். ரேபரேலியைச் சேர்ந்த எம்.பி. ராகுல் காந்திக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மக்களவை சபாநாயகரின் அனுமதி இல்லாததால், இந்த மனுவை ஏற்கமுடியாது என்று கூறி கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி நீரஜ் குமார் திரிபாதி புகாரை நிராகரித்தார். ராமரை “புராண … Read more

நீர் வீழ்ச்சியில் குளியல் போட்டபோது மரம் விழுந்து 2 பேர் பலியான சோகம்

டேராடூன், உத்தரகாண்டின் டேராடூன் மாவட்டத்தில் சக்ரதா பகுதியில் நீர் வீழ்ச்சி ஒன்று உள்ளது. புலியருவி என்ற பெயரிலான அந்த நீர் வீழ்ச்சியில் குளிப்பதற்காக, டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் இருந்தும் சுற்றுலாவாசிகள் வந்து செல்கின்றனர். கோடை காலத்தில் வெப்பம் தணிவதற்காகவும், உடல்நலனுக்கும் அது பயனளிக்கும் என்ற வகையிலும், அருவி குளியலில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், டெல்லி சுற்றுலாவாசி உள்பட 2 பேர் நேற்று மாலை புலியருவியில் குளித்து கொண்டிருந்தபோது, மரம் ஒன்று திடீரென அருவியில் இருந்து நீர் வழியே … Read more

ரிஷப் பண்ட் அதிரடி சதம்… பெங்களூருவுக்கு 228 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னோ

லக்னோ, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைய உள்ளது. அதன்படி லக்னோவில் இன்று இரவு நடைபெற்று வரும் கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பெங்களூரு முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து லக்னோவின் தொடக்க வீரர்களாக பிரீட்ஸ்கே மற்றும் … Read more

இங்கிலாந்து: கால்பந்து வெற்றி பேரணியில் புகுந்த கார்; 50 பேர் காயம்

லண்டன், இங்கிலாந்து நாட்டில் கால்பந்து பிரீமியர் லீக் போட்டியில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று மாலை வெற்றி கொண்டாட்டத்திற்காக லிவர்பூல் நகரத்தின் பல்வேறு தெருக்களில் லட்சக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் பலரும் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் பேரணியாக திரண்டு சென்றனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கார் ஒன்று மக்கள் கூட்டத்திற்குள் திடீரென புகுந்தது. இதில், 4 குழந்தைகள் உள்பட 50 பேர் காயம் … Read more

சென்னை: பாதியில் நின்ற தனியார் தீம் பார்க் ராட்டினம்; தவித்த மக்கள்- பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை

சென்னையை சேர்ந்த தனியார் தீம் பார்க் ஒன்றில் இன்று மாலை ராட்டினம் பாதியிலேயே தொழில்நுட்ப கோளாறால் நின்றுவிட்டது. இதனால், 30-க்கும் மேற்பட்டோர் அந்தரத்தில் மாட்டிக்கொண்டனர். கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாக தவித்த இவர்களை, தற்போது தீயணைப்பு துறையினர் மீட்டு உள்ளனர். முதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீட்கப்பட்டனர். அடுத்ததாக, ஆண்கள்‌. இப்படியாக, 30 பேரையும் வெற்றிகரமாக தீயணைப்பு துறையினர் மீட்டு உள்ளனர்.இந்த மீட்பு பணியில் ராட்சத கிரேன் பயன்படுத்தப்பட்டுள்ளது. மீட்பு படங்கள் இதோ… கிரேன் மீட்பு படங்கள் … Read more

சென்னை அருகே பொழுதுபோக்கு பூங்கா ராட்டினத்தில் கோளாறு – அந்தரத்தில் தவித்தவர்கள் பத்திரமாக மீட்பு

சென்னை: செசென்னை – கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக அதில் சிக்கியவர்களை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர் சுமார் 30 பேர் விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள டாப்கான் என்ற ராட்டினத்தில் ரைடு சென்றுள்ளனர். அப்போது ராட்டினத்தை இயக்கும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதில் பயணித்தவர்கள் அந்தரத்தில் அப்படியே சிக்கி இருந்தனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். முதலில் ராட்டினத்தில் சிக்கியவர்களை மீட்க விஜிபி … Read more

“ஊழலை ஒழிக்க ரூ.500 நோட்டுகளையும் திரும்பப் பெறுக” – சந்திரபாபு நாயுடு

கடப்பா: “ஊழலை ஒழிக்க ரூ.500 நோட்டுகளையும் திரும்பப் பெற வேண்டும்” என தெலுங்கு தேசம் கட்சியின் மாநாட்டுக் கூட்டத்தில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார். . மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட போது பிரதமர் மோடி வசம் தேசத்தின் டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பாக அறிக்கை ஒன்றை வழங்கியிருந்தார் சந்திரபாபு நாயுடு. அப்போது ரூ.500, ரூ.1,000 மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தி இருந்தார் … Read more

கொரோனா பாதிப்பு : ஜூன் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் தொகுதிகளில் கோவிட் பாதிப்பு உள்ளவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம்

கொரோனா வைரஸின் புதிய திரிபு தற்போது பரவலாக பரவி வரும் நிலையில் இதுகுறித்து புதிதாக அச்சப்பட ஏதுமில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் வரும் ஜூன் 19ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் கோவிட் பாதிப்பு உள்ளவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 60 இன் பிரிவு (e) இன் விதிகளின்படி, இந்தியத் தேர்தல் ஆணையம் இதன் மூலம் கோவிட்-19 சந்தேக … Read more

திருப்பதி மலையில் சிறுத்தைகள் நடமாட்டம்; பக்தர்களை பாதுகாக்க தேவஸ்தான நிர்வாகம் புதிய முடிவு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து திருப்பதிக்கு செல்லும் முதலாவது மலைப்பாதையில் விநாயகர் கோயில் அருகே சாலையோர தடுப்பு சுவர் மீது ஏறி நின்று சாலையை கடந்து சென்றது. சிறுத்தையைக் கண்ட பக்தர்கள் காரில் சென்றபடி வீடியோ எடுத்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியை ஆய்வு செய்தனர். சிறுத்தை அந்த பகுதியில் சுற்றி வருவதால் பைக்கில் செல்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறும், பஸ், கார்களில் செல்பவர்கள் ஜன்னல் கண்ணாடிகளை … Read more