ரூ.53 லட்சத்தில் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் GTi வெளியானது | Automobile Tamilan

சிறந்த பெர்ஃபாமென்ஸ் உடன் பல்வேறு ஸ்டைலிங் அம்சங்களை கொண்டுள்ள ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் GTi Mk 8.5 விலை ரூ.52.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு துவங்கியுள்ளது. ஏற்கனவே, முதற்கட்டமாக துவங்கப்பட்ட முன்பதிவு 150 யூனிட்டுகளுக்கான பதிவு நிறைவடைந்துள்ளது. இனி அடுத்தகட்ட முன்பதிவு மேலும் 100 யூனிட்டுகளுக்கு விரைவில் துவங்கப்படலாம். கோல்ஃப் GTI காரில் உள்ள 265hp பவர் மற்றும் 370Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் TSI பெட்ரோல் பொருத்தப்பட்டு 7 வேக டூயல் கிளட்ச் … Read more

Lilo & Stitch Review: மழலை அன்புடன் சேரும் ஏலியன்! கோடைக் கால எண்டர்டெயினராக குழந்தைகளை ஈர்க்கிறதா?

தாய் – தந்தை அரவணைப்பின்றி லிலோவும் (மையா கெலோஹா) அவருடைய சகோதரி நானியும் (சிட்னி எலிசபெத்) தனித்து வாழ்ந்து வருகின்றனர். வேற்று கிரகத்தில் வாழும் ஏலியன் ஆராய்ச்சியாளர் ஜும்பா, ‘626’ என்ற ஏலியனை உருவாக்குகிறார். அந்த 626 ஏலியன் உண்டாக்கும் அபாயத்தை அறிந்து, ஏலியன் கூட்டமைப்பு 626 ஏலியனையும் ஆராய்ச்சியாளரையும் சிறைப்படுத்துகிறது. அங்கிருந்து அந்த 626 ஏலியன் பூமிக்குத் தப்பி ஓடுகிறது. அந்த ஏலியனைப் பிடித்து வர, அதை உருவாக்கிய ஆராய்ச்சியாளருக்கு உத்தரவிடப்படுகிறது. Lilo & Stitch … Read more

சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் டிஜிட்டல் முறையில் கருத்து கேட்கும் வசதி அறிமுகம்

சென்னை: சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், முழு உடல் பரிசோதனை மையத்தின் சேவையை மேம்படுத்த டிஜிட்டல் முறையில் கருத்து கேட்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.10 கோடியில் முழு உடல் பரிசோதனை மையம் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கோல்டு (ரூ.1,000), டைமண்ட் (ரூ.2,000), பிளாட்டினம் (ரூ.3,000), பிளாட்டினம் பிளஸ் (ரூ.4,000) என 4 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முழு ரத்த பரிசோதனை, … Read more

இந்தியாவை வெறுப்பதுதான் பாகிஸ்தானின் ஒரே நோக்கம்: பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

தாஹோத்: இந்தியாவை வெறுப்பதும் அதற்கு தீங்கு விளைவிக்கும் வழிகளைப் பற்றி யோசிப்பதும்தான் பாகிஸ்தானின் ஒரே நோக்கமாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக குஜராத் மாநிலத்துக்கு நேற்று வருகை தந்தார். இந்நிலையில் தாஹோத் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியதாவது: கடந்த 2014-ம் ஆண்டு இதே தினத்தில் (2014, மே26) முதல் முறையாக பிரதமராக பதவியேற்றேன். அப்போது முதல் நாட்டின் வளர்ச்சி ஒன்றை குறிக்கோளாகக் … Read more

விஜய் ஆண்டனி – இயக்குநர் சசி! மீண்டும் இணையும் 'பிச்சைக்காரன்' வெற்றிக் கூட்டணி!

சசி இயக்க உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் திரைப்படத்தில் விஜய் ஆண்டனியும் அவரது தங்கை மகன் அஜய் திஷானும் நாயகர்களாக நடிக்கிறார்கள்.

Ayushman Vay Vandana Card: ஆயுஷ்மான் செயலியை பதிவிறக்கி ரூ.5 லட்சம் பெறுவது எப்படி?

Ayushman Vay Vandana Yojana: மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்குவதற்காக, ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (AB PM-JAY) திட்டத்தின் நீட்டிப்பு திட்டமான ஆயுஷ்மான் வய வந்தனா யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2024 அக்டோபரில் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ், ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும், அவர்களின் சமூக-பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், ரூ.5 லட்சம் இலவச … Read more

ஜவஹர்லால் நேரு 61வது நினைவு நாள்: சாந்தி வனத்திலுள்ள நேரு சமாதியில் சோனியா காந்தி உள்பட தலைவர்கள் மரியாதை…வீடியோ

டெல்லி: இந்தியாவின் முதல்பிரதமரான மறைந்த ஜவாஹர்லால் நேரு நினைவு நாளையொட்டி, டெல்லி சாந்தி வனத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, ஜவஹர்லால் நேருவின் 61வது நினைவு நாளில் அவருக்கு  அஞ்சலி செலுத்தும் வகையில் தனது எக்ஸ் தளத்தில், “அவரது கொள்கைகள் எப்போதும் நம்மை வழிநடத்தும்” என பதிவிட்டுள்ளார். இந்தியாவின் முதல் பிரதமரான மறைந்த பன்டிட்   ஜவஹர்லால் நேருவின் நினைவு நாள் … Read more

2025 ஜூபிடர் 125 அறிமுகத்தை உறுதி செய்த டிவிஎஸ் மோட்டார் | Automobile Tamilan

டிவிஎஸ் மோட்டாரின் அதிகம் விற்பனையாகின்ற பிரசத்தி பெற்ற ஜூபிடர் ஸ்கூட்டர் வரிசையில் உள்ள 125சிசி எஞ்சின் பெற்ற மாடலை விரைவில் பல்வேறு புதுப்பிக்கப்பட்ட வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக வெளியான ஜூபிடர் 110 பல்வேறு ஸ்டைலிங் மாற்றங்களுடன் அதிகப்படியான பூட்ஸ்பேஸ் கொண்ட மாடலாக ஜூபிடர் 125 போல அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து அமோக ஆதரவினை பெற்று தற்பொழுது இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படுகின்ற இரண்டாவது ஸ்கூட்டர் பிராண்ட் மாடலாக உள்ளது. … Read more

Doctor Vikatan: வெறும் வயிற்றில் வெந்நீரில் நெய் கலந்து குடிப்பது வெயிட்லாஸுக்கு உதவுமா?

Doctor Vikatan: உடல் எடையைக் குறைப்பவர்கள் சிலர் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரில் நெய் கலந்து குடிக்கிறார்கள். வேறு சிலரோ நெய்யை முழுமையாகத் தவிர்க்கிறார்கள். நெய் நல்லதா, கெட்டதா? அந்தக் காலத்தில் நெய் காய்ச்சும்போது அதில் முருங்கைக்கீரை சேர்த்து பொரித்துக் கொடுப்பார்கள். அது இந்தக் காலத்துக்கும் ஏற்றதா? பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன் ஸ்ரீமதி வெங்கட்ராமன் ஆயுர்வேத மருத்துவத்தில் பல மருந்துகளையும் ‘க்ருதம்’ என்ற பெயரில் நெய்யில் தயாரித்துக் கொடுப்பது வழக்கம். … Read more

துபாயில் இருந்து 326 பயணிகளுடன் சென்னை வந்த விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு

சென்னை: துபாயில் இருந்து 326 பயணிகளுடன் சென்னை வந்த விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. துபாயில் இருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் 326 பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தது. சென்னை விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக, விமானம் பறக்கும் உயரத்தை படிப்படியாக குறைத்து, தாழ்வாகப் பறந்து வந்தது. அப்போது, பரங்கிமலை பகுதியிலிருந்து பச்சை நிறத்தில் சக்தி வாய்ந்த லேசர் லைட் விமானத்தின் மீது அடிக்கப்பட்டது. சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு … Read more