கோவா கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு; 30+ பேர் காயம்

பனாஜி: கோவா மாநில கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துயரச் சம்பவம் சனிக்கிழமை (மே 3) அதிகாலை நடந்துள்ளது. கோவா மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகோ பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ லைராய் தேவி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜாத்ரா திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழாவில் மக்கள் அதிகம் திரண்ட நிலையில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் கோவா மருத்துவக் … Read more

“பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசம் ஆக்கிரமிக்க வேண்டும்” – யூனுஸ் உதவியாளர்

டாக்கா: பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களை வங்கதேசம் ஆக்கிரமிக்க வேண்டும் என வங்கதேசத்தின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸின் உதவியாளரான ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் ஃபஸ்லுர் ரஹ்மான் கூறியுள்ளார். இதை பேஸ்புக் பக்கத்தில் வங்காள மொழியில் அவர் பதிவிட்டுள்ளார். “பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் மேற்கொண்டால் வட கிழக்கு இந்தியாவில் உள்ள 7 மாநிலங்களை வங்கதேசம் ஆக்கிரமிக்க வேண்டும். இது குறித்து சீனா உடன் கூட்டு ராணுவ … Read more

பெண் குழந்தைளுக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்..!! உடனே விண்ணப்பிக்கவும்

Tamil Nadu government : முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 18 வயது நிரம்பியவர்கள் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. 

'காழ்ப்பு வன்மம் இல்லாத மனிதர்; அவருடன் இருந்த நாள்கள் எல்லாம்..!' – கிரேஸி மோகன் குறித்து கமல்

தமிழ் நாடக மற்றும் திரைப்பட உலகில் தனது நகைச்சுவை வசனங்களுக்கும், நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதற்கும் புகழ்பெற்றவர் கிரேஸி மோகன். மறைந்த நடிகரும், எழுத்தாளருமான கிரேஸி மோகன் எழுதிய 25 புத்தகங்கள் வெளியீட்டு விழா நேற்று(மே1)நடைபெற்றது. இதில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டார். அந்த நிகழச்சியில் பேசிய கமல்ஹாசன், “கிரேஸி மோகன் மிகவும் சிறந்த மனிதர். காழ்ப்பு வன்மம் இல்லாத மனிதர் கிரேஸி மோகன் அவர்கள். அவருக்கு … Read more

அதிமுக செயற்குழு கூட்டத்தில், பாஜக கூட்டணி, திமுக அரசை வீழ்த்துவது உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை: அதிமுக செயற்குழு கூட்டத்தில் பாஜககூட்டணி, திமுக அரசை வீழ்த்துவது  உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதி​முக செயற்​குழு கூட்​டம், அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி மற்​றும் அவைத்​தலை​வர் அ.தமிழ்​மகன் உசேன் தலை​மை​யில் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இந்த கூட்​டத்​தில் மொத்​தம் 16 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன. பொது எதிரி​யான மக்​கள் விரோத … Read more

டெல்லி: 120 ஆண்டுகளில் இல்லாத 2-வது அதிக மழைப்பொழிவு பதிவு

புதுடெல்லி, டெல்லியில் கடும் வெப்பம் மக்களை வாட்டி வந்த நிலையில், நேற்று (வெள்ளி கிழமை) காலை 8.30 மணி முதல் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இதில், 78 மில்லி மீட்டர் அளவுக்கு மழைப்பொழிவு பதிவானது. இது 1901-ம் ஆண்டில் இருந்து இதுவரை, 24 மணிநேரத்தில் பெய்த 2-வது மிக அதிக மழைப்பொழிவு ஆகும். இதற்கு முன்பு, 2021-ம் ஆண்டு மே 20-ந்தேதி 119.3 மில்லி மீட்டர் அளவுக்கு மழைப்பொழிவு பதிவாகி இருந்தது. இதனை இந்திய வானிலை … Read more

சுப்மன் கில், பட்லர் அரைசதம்… ஐதராபாத்துக்கு 225 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்

அகமதாபாத், 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 50 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்று வரும் 51-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்சும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஐதராபாத் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து குஜராத்தின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் … Read more

காசா: 16 பேர், நிவாரண உதவி பொருட்களுடன் சென்ற கப்பல் மீது வெடிகுண்டு தாக்குதல்

காசா நகரம், காசா பகுதியில், ஓராண்டை கடந்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில், காசாவில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிக்கான பொருட்களை வழங்குவதற்காக 16 பேருடன் கப்பல் ஒன்று சென்றுள்ளது. அதனை மனித உரிமைகள் குழுவினர் இயக்கினர். இந்நிலையில், மால்டா கடற்கரை பகுதியில் நேற்று அந்த கப்பல் மீது வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் … Read more

ரூ.68,322 விலையில் 2025 டிவிஎஸ் ஸ்போர்ட் ES+ விற்பனைக்கு வெளியானது | Automobile Tamilan

டிவிஎஸ் மோட்டாரின் புதிய ஸ்போர்ட் 110cc பைக்கில் கூடுதலாக செல்ஃப் ஸ்டார்ட் ES+ என்ற வேரியண்டில் ஸ்டைலிஷான பாடி கிராபிக்ஸ் உட்பட யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட அம்சங்களுடன் அலாய் வீல் பெற்று ரூ.67,322 முதல் ரூ.72,365 (எக்ஸ்-ஷோரூம்) வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடர்நது அதிக மைலேஜ் தருகின்ற பைக் மாடல்களில் ஒன்றாக விளங்குகின்ற ஸ்போர்ட் 110 பைக்கில் 09.7 சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் ஸ்போர்ட்டின் பவர் அதிகபட்சமாக 7,350rpm- 8.17bhp மற்றும் … Read more

Doctor Vikatan: வெயிலில் சென்றால் தலைவலி; அலைச்சலைத் தவிர்க்க முடியாதவர்களுக்கு என்ன தீர்வு?

Doctor Vikatan: என் வயது 32. தினமும் 15 கிலோ மீட்டர் பயணம் செய்துதான் வேலைக்குச் செல்கிறேன். டூ வீலரில் செல்கிறேன். அலுவலகத்தை அடைந்ததும் தலைவலி மண்டையைப் பிளக்கிறது. தவிர, எப்போதுமே வெயிலில் அலைந்துவிட்டு வந்தாலே எனக்கு தலைவலிக்கிறது. இதற்கு என்ன காரணம்… தவிர்ப்பது எப்படி? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி  குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி வெயிலில் அலைந்துவிட்டு இருப்பிடம் திரும்பும்போது சில விஷயங்கள் நடக்கும். ஒரு பக்கம் வெளிச்சூழலின்  வெப்பநிலை அதிகரிக்கும், … Read more