இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ஏவுகணை வீச்சு… இந்தியாவை மேலும் ஆத்திரமூட்டும் செயலில் இறங்கியதால் போர் தீவிரமடைய வாய்ப்பு… வீடியோ

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லையோர பகுதிகளில் இன்று மாலை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள்சூழ்ந்து காணப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜம்மு, அக்னூர், பதான்கோட், உதம்பூர் மற்றும் ஜெய்சல்மர் ஆகிய இடங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணைகளை வீசியது. இதில் இந்தியா எட்டு ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது. தவிர, ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தவும் பாகிஸ்தான் முயன்றது. இந்த முயற்சியையும் இந்தியா முறியடித்துள்ளதுடன் பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. … Read more

“பூமியில் உள்ள உயிர்கள் எல்லாம் இதனால் அழியப்போகிறது..” – எலான் மஸ்க் எச்சரிப்பது என்ன?

ஸ்பேஸ் எக்ஸின் நிறுவனர் எலோன் மஸ்க், சூரியனால் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் அழிக்கப்படும் என்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். சூரியனின் வெப்பத்தால் பூமி அழியலாம், எனவே செவ்வாய்கிரகத்தில் மனிதன் குடியேறுவதற்கான திட்டங்களை இப்போதிலிருந்தே செயல்படுத்த வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் FOX NEWS சேனலுக்கு அளித்த பேட்டி, இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ”சில நூறு மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியன் பூமியின் வளிமண்டலத்தை அகற்றி, பெருங்கடல்களை கொதிக்க வைக்கும். அதுவே … Read more

தமிழக மக்களை பாதுகாக்க வலியுறுத்தி ஜூன் 11 முதல் 20 வரை மார்க்சிஸ்ட் தொடர் போராட்டம்

ராஜபாளையம்: “தமிழக மக்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜூன் 11 முதல் 20-ம் தேதி வரை 10 நாட்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளது” என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியது: “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில குழு கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழல், மக்கள் பிரச்சினை … Read more

தொடரும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ – பாகிஸ்தானே பதற்றத்தை அதிகரிப்பதாக சாடி இந்தியா எச்சரிக்கை!

புதுடெல்லி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கம் அளித்துள்ள இந்திய அரசு, பதற்றத்தை அதிகரிக்க பாகிஸ்தான் மென்மேலும் முயற்சி செய்தால், அதற்கு களத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக புதன்கிழமை அதிகாலை பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ஏவுகணைகளை … Read more

ஜம்மு ஏர்போர்டை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி… மீண்டும் முறியடித்த இந்தியா!

India Pakistan War Tension: ஜம்மு காஷ்மீர் விமான நிலையத்தில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் தொடுத்த நிலையில், இந்தியா அதனை முறியடித்துள்ளது. 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

9 Foot Tall Statue Of Actor Nadigar Thilakam Sivaji Ganesan: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 9 அடி உயர சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

ஆபரேஷன் சிந்தூர்: பீகார் பெற்றோர் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ மற்றும் ‘சிந்தூரி’ என்று பெயரிட்டனர்

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) ஒன்பது பயங்கரவாத மறைவிடங்களை இந்திய ராணுவம் குறிவைத்து நடத்திய ஆபரேஷன் சிந்தூரின் வெற்றி, பீகார் முழுவதும் தேசபக்தி உணர்வைத் தூண்டியுள்ளது. தேசிய பெருமையின் அசாதாரண வெளிப்பாடாக, இராணுவ நடவடிக்கையால் ஈர்க்கப்பட்ட குடும்பங்களால் 13 புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ மற்றும் ‘சிந்தூரி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. முசாபர்பூரில், ஒரு தனியார் முதியோர் இல்லத்தில், ஒரு குடும்பம் தங்கள் பிறந்த குழந்தைக்கு ‘சிந்தூர்’ என்று பெயரிட்டது. போச்சாஹா தொகுதியில் உள்ள கன்ஹாராவில் … Read more

தொடரும் அட்டாக்.. பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையுங்கள் -அமெரிக்கா திடீர் உத்தரவு

Drone Attack News In Tamil: பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையுங்கள் அல்லது அமெரிக்க அரசை சார்ந்திருக்காமல் தன்னுடைய சொந்த திட்டங்கள் மூலம் பாதுகாப்பாக இருங்கள் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஆவடி: பைக் திருட்டு வழக்கு; புகாரளித்த பெண்ணை விடுதிக்கு அழைத்த காவலர்.. சிக்கிய பின்னணி

சென்னையை அடுத்த பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், வேலை நிமித்தமாக ஆவடி செக்போஸ்ட் பகுதிக்கு தன்னுடைய டூவிலரில் வந்திருக்கிறார். அந்தப்பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு சென்றவர், பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கைக் காணவில்லை. அதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், ஆவடி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தன்னுடைய பைக்கைக் காணவில்லை என புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி அந்தப் பெண்ணின் டூவிலரைக் கண்டுபிடித்தனர். பின்னர் அந்தப் பைக்கை பெண்ணிடம் ஒப்படைக்க ஆவடி குற்றப்பிரிவு போலீஸார் முடிவு … Read more

புதிய குற்றவியல் சட்டங்கள்: தொழில்நுட்பம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த புதுச்சேரி ஆளுநர் உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்த தேவையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த காவல் துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார். மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை புதுச்சேரியில் நடைமுறை படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. புதிய குற்றவியல் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடையும் நிலையில் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் வரும் 13-ம் … Read more