இந்தியாவின் வடமேற்கு பகுதி ரயில்கள் ரத்து

ஜெய்ப்பூர் போர் பதற்றம் காரணமாக இந்தியாவின் வடமேற்கு பகுதியில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பஹல்காமில் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையொட்டி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காஷ்மீரில் பொதுமக்கள் 16 பேர் பலியானார்கள்.  பாகிஸ்தான் இந்தியாவின் எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தி … Read more

எச்சரிக்கை சைரன் தொடர்ந்து ஒலிப்பதால் பதற்றம்.. ரெட் அலர்ட்டில் அமிர்தசரஸ்

அமிர்தசரஸ், இந்தியாவை நோக்கி நேற்று 3-வது நாளாக டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 26 நகரங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த டிரோன்களை இந்திய ராணுவம் நடுவானில் அழித்து வந்தது. முக்கியமான வான்பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்தியது. இந்தநிலையில் நள்ளிரவில் இந்தியாவும் திருப்பி அடிக்கத்தொடங்கியது. பாகிஸ்தான் நாட்டின் உணவு மற்றும் வேளாண் உற்பத்தியில் முக்கியமாக திகழும் கரியான் மற்றும் ஜலால்பூர் ஜெட்டா நகரில் இந்திய டிரோன்கள் … Read more

ஐ.பி.எல். தொடர் விரைவில் மீண்டும் தொடங்கும் – கங்குலி

புதுடெல்லி, 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இந்த தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுவதால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஒருவாரம் நிறுத்தி வைப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று பிற்பகலில் அறிவித்தது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஐ.பி.எல். நிறுத்தப்பட்டது குறித்து தனது கருத்துகளை கூறியுள்ளார். இது … Read more

போர் பதற்றத்தை தணிக்க சீனா, கத்தார் உதவியை நாடிய பாகிஸ்தான்

ஸ்ரீநகர், பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காஷ்மீரில் பொதுமக்கள் 16 பேர் பலியானார்கள்.பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக மத்திய அரசு முக்கிய ஆலோசனை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக இந்திய ராணுவம் பதிலடி தாக்குதலை தொடங்கியது. இந்தியாவை நோக்கி … Read more

India – Pakistan : `பாகிஸ்தானின் சீக்கிய தலம் மீது தாக்குதலா?’ – மறுத்த இந்திய அரசு | Fact check

பாகிஸ்தானில் உள்ள சீக்கிய புனித தலமான நான்கனா சாஹிப் குருத்வாரா மீது இந்தியா ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள், 26 பேரை சுட்டுக்கொன்ற பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக “ஆப்ரேஷன் சிந்தூரி” என்னும் பெயரில் மே 7ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து மே 8 மற்றும் மே 9 தேதியின் இடைப்பட்ட இரவில் திடீரென பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டபோது … Read more

நோய் பாதிப்புகள் அதிகரிக்கும் வடசென்னை எரிஉலை திட்டத்தை செயல்படுத்த கூடாது: ஹைதராபாத் ஆலையை ஆய்வு செய்த குழு வலியுறுத்தல்

சென்னை: வட சென்னையில் எரி உலை அமைக்கும் திட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று, ஹைதராபாத்தில் எரிஉலை திட்டத்தை நேரில் ஆய்வு செய்த குழு வலியுறுத்தியுள்ளது. வட சென்னை குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டி.கே.சண்முகம், மாநகராட்சி கவுன்சிலர் ஜெயராமன், மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஹைதராபாத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் இணைந்து, ஹைதராபாத்தில் ஜவஹர் நகர் பகுதியில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை திட்ட பகுதிகளைச் சுற்றி கடந்த மே 7-ம் … Read more

‘இன்று காலையும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் பாக். ஈடுபட்டது’ – வெளியுறவுச் செயலர் மிஸ்ரி

புதுடெல்லி: இன்று காலையும் ஆத்திரமூட்டும் தீவிர தாக்குதல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு புதுடெல்லியில் இன்று(மே 10) நடைபெற்றது. இதில், வழக்கம்போல் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் பங்கேற்றனர். வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், “பாகிஸ்தானின் நடவடிக்கைகள் ஆத்திரமூட்டக் கூடியதாகவும், பதற்றத்தைத் தீவிரப்படுத்தக் கூடியதாகவும் … Read more

‘பதற்றத்தை தணிக்க முயற்சிக்கவும்’ – பாக். ராணுவத் தளபதிக்கு அமெரிக்கா அறிவுரை

வாஷிங்டன்: போர்ப் பதற்றத்தை தணிக்கும் முயற்சிகளை செய்யுமாறும், ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை இந்தியாவுடன் தொடங்க மத்தியஸ்தம் செய்யத் தயாரக இருப்பதாகவும் பாகிஸ்தான் ராணுவத் தளபதியிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இன்று (சனிக்கிழமை) தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அவர், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தைத் தணிக்க முயற்சிக்குமாறு வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், … Read more

S400 ஏவுகணை அமைப்பு தகர்க்கப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் தவறானது-விக்ரம் மிஸ்ரி

India Pakistan War Situation Press Briefing : இந்தியா-பாகிஸ்தான் பாகிஸ்தான் இடையேயான போர் பதற்ற சூழல் குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில், இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோஃபியா குரேஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.  

டெஸ்ட் கிரிக்கெட்டில் கவாஸ்கர், சச்சின், விராட் கோலியால் முறியடிக்கப்படாத இந்திய பேட்ஸ்மேனின் சாதனை..!

Dilip Vengsarkar Unbreakable Lords Record : கிரிக்கெட் என்று வந்துவிட்டால் அதுவும் பேட்டிங் சாதனை என்றால் நிச்சயமாக இந்திய கிரிக்கெட் பிளேயர்கள் கவாஸ்கர், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ராகுல் டிராவிட் உள்ளிட்ட இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன்களின் பெயர்கள் இருக்கும். ஆனால், இவர்கள் யாரும் செய்யாத மற்றும் தகர்க்க முடியாத ஒரு பேட்டிங் சாதனையை இந்திய முன்னாள் கிரிக்கெட் பிளேயர் பெயரில் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய சாதனையை இன்னும் எந்த இந்திய … Read more