படித்த இளைஞர்களுக்கு ரூ.15 லட்சம் வரை மானியத்துடன் கடன் உதவி! எப்படி விண்ணப்பிப்பது?

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் முனைவோரை ஆதரிக்கவும், இளைஞர்களிடையே தன்னம்பிக்கையை ஊக்குவிக்கவும் பல்வேறு திட்டங்கள் மற்றும் முயற்சிகள் தொடங்கப்பட்டு வருகின்றன.

அடுத்த ஆண்டு சிஎஸ்கேவிற்கு யார் கேப்டன்? தோனி சொன்ன முக்கிய தகவல்!

CSK captain IPL 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் 2025 ஒரு மறக்க வேண்டிய ஆண்டாக அமைந்துள்ளது. ஏலம் முடிந்த பிறகு பார்ப்பதற்கு ஒரு நல்ல அணியாக இருந்த போதிலும் மைதானத்தில் அவ்வளவு சிறப்பாக யாருமே விளையாடவில்லை. குறிப்பாக சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் பேட்டிங் படும் மோசமாக இருந்தது. அதனை சரி செய்வதற்குள் இந்த சீசன் முடிந்து விட்டது. இதற்கு இடையில் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக … Read more

 தொடர் கனமழையால் கோவை ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு

கோவை கடந்த 3 நாட்களாக கோவையில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர்வரத்து அதிகரித்து உள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிதீவிரமாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருவதுடன் … Read more

மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளில் போலீஸாரை மீட்க தொடர்பு எண்களை வெளியிட்டார் டிஜிபி

சென்னை: பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிய போலீஸாரை மீட்கும் வகையில் அவர்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களை டிஜிபி வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: போலீஸாரின் மன நலனை உறுதி செய்யும் விதமாக தமிழக காவல்துறையில் ‘மகிழ்ச்சி’ என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் மூலம் மன அழுத்தம், தற்கொலை எண்ணம், மதுபழக்கம், ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாதல், மன அழுத்தம் மற்றும் பதற்றம், துக்கம், குடும்பம் மற்றும் திருமண முரண்பாடு, அதீத கோப … Read more

நாட்டின் முதலாவது 9,000 எச்.பி. திறன் கொண்ட ரயில் இன்ஜின் – பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

நாட்டின் முதலாவது 9 ஆயிரம் எச்.பி. திறன் கொண்ட ரயில்வே இன்ஜின் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். குஜராத் மாநிலம் தாஹோத் நகரில் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரயில்வே இன்ஜின் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் 9 ஆயிரம் எச்.பி(குதிரை சக்தி) திறன் கொண்ட ரயில்வே இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலை மூலம் தயாரித்த முதலாவது 9 ஆயிரம் எச்.பி. … Read more

நீலகிரி, கோவையில் இன்றும் அதிகனமழை வாய்ப்பு: 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

தமிழகம் மற்றும் கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று அதிகனமழையும், தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் கரையைக் கடந்து, வட கர்நாடகத்தின் உள்பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது. பிறகு கிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்ககூடும். மத்திய மேற்கு … Read more

அமித் ஷாவை விமர்சித்த வழக்கில் ராகுலுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட்: ஜார்க்கண்ட் நீதிமன்றம் உத்தரவு

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு எதிராக ஜார்க்கண்டில் உள்ள சாய்பாசா எம்.பி. – எம்.எல்.ஏ நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டை பிறப்பித்துள்ளது. மேலும், வரும் ஜூன் 26-ம் தேதி ராகுல் காந்தி நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தி, அப்போதைய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குறித்து தெரிவித்த … Read more

ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு எப்போது..? – மனம் திறந்த தோனி

அகமதாபாத், அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற 67-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி முதலாவதாக களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய குஜராத் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக … Read more

கடந்த 4 ஆண்டுகளில் ரூ.251 கோடியில் 67,200 பேருக்கு திறன் பயிற்சி: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தகவல்

கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்துடன் கடந்த 4 ஆண்டுகளில் 67,200 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தீன்தயாள் உபாத்யாய கிராமப்புறத் திறன் பயிற்சித் திட்டத்தின் கூடுதல் இயக்குநர் ஆர்.சங்கர் தெரிவித்துள்ளார். கிராமப்புற இளைஞர்கள், குறிப்பாக வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களில் உள்ள இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்துடன் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக தீன்தயாள் உபாத்யாய கிராமப்புறத் திறன் பயிற்சித் … Read more