விபத்தில் சிக்கிய கப்பலில் கிடைத்த கைக்கடிகாரம்; 165 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்துக்கு அனுப்பி வைப்பு

லண்டன், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாண ஏரியில் கடந்த 1860-ம் ஆண்டு லேடி என்ஜின் என்ற நீராவிக்கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது புயலில் சிக்கி மற்றொரு கப்பல் மீது நீராவி கப்பல் மோதி ஏரியில் மூழ்கியது. அந்த கப்பலில் இருந்த 300 பேர் பலியாகினர். விபத்துக்குள்ளான அந்த பகுதியில் கப்பலின் உடைந்த பாகங்களைக் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் கண்டெடுக்கப்படும் பொருட்கள் அங்குள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஹெர்பர்ட் இங்க்ராம் … Read more

Ooty: `ரெட் அலர்ட்' விடப்பட்ட ஊட்டி, தொடரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள்..

நீலகிரி மவட்டத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஊட்டி, நஞ்சநாடு முத்தொரை பகுதியில் பெய்த கன மழையால், சாகுபடி செய்யப்பட்டிருந்த மலைப் பயிர் வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்தது. ஊட்டி முத்தோரை பாலாடா பகுதியில் கன மழையையும் பொருட்படுத்தாமல் தாெழிலாளர்கள் கேரட் அறுவடைப் பணியில் ஈடுபட்டனர். ஊட்டி, நஞ்சநாடு முத்தொரை பகுதியில் பெய்த கன மழையால், சாகுபடி செய்யப்பட்டிருந்த மலைப் பயிர் வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்தது. ஊட்டி முத்தோரை பாலாடா பகுதியில் கன … Read more

அவலாஞ்சியில் கொட்டித்தீர்த்த 215 மி.மீ கனமழை: கோவை நொய்யல் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் 

ஊட்டி / கோவை: நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. ஆபத்தான பகுதிகளில் யாரும் நடமாட வேண்டாம் எனவும், சுற்றுலா பயணிகள் மாலை 4 மணிக்குள் தங்கும் விடுதிகளுக்கு திரும்ப வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், இன்று நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. மதியம் 1 மணிக்கு பைக்காரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டாவது மைல் என்ற இடத்தில் மரம் முறிந்து … Read more

உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக மாறியது இந்தியா: நிதி ஆயோக் சிஇஓ தகவல்!

புதுடெல்லி: இந்தியா தற்போது ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாகியுள்ளது. இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளில் ஜெர்மனியை முந்தி மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்று நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். 10வது நிதி ஆயோக் நிர்வாகக்குழு கூட்டத்துக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரமணியம் கூறியதாவது: நான் பேசிக்கொண்டிருக்கும் போது நாம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடு. நாம் இப்போது 4 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைந்துள்ளோம். … Read more

'பாலியல் தொழிலாளி போல்' உலக அழகி போட்டியில் இருந்து விலகிய முதல் பெண் – ஷாக் கருத்து!

Milla Magee: இந்தியாவில் நடைபெறும் உலக அழகி போட்டியில் இருந்து இங்கிலாந்து அழகி மில்லா மேகி திடீரென விலகியதற்கு பல்வேறு பகீர் காரணங்களை தெரிவித்துள்ளார்.

வரும் 28 அன்று அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு

சென்னை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் வரும் 28 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதிச ென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இரவு, அதே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அங்கிருந்து விரட்டி விட்டு மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். ஒரு மாணவி பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி … Read more

கட்சியில் இருந்து மகன் தேஜ் பிரதாபை நீக்கிய லாலு பிரசாத்

பாட்னா, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத். பீகார் முன்னாள் முதல்-மந்திரியான லாலு பிரசாதின் மூத்த மகன் தேஜ் பிரதாப் (வயது 37). இவர் பீகார் முன்னாள் மந்திரி ஆவார். இதனிடையே, தேஜ் பிரதாபிற்கு 2018ம் ஆண்டு ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. ஐஸ்வர்யா பீகார் முன்னாள் முதல்-மந்திரி தரகா ராயின் பேத்தி ஆவார். ஆனால், திருமணமான சில மாதங்களில் தேஜ் பிரதாபை ஐஸ்வர்யா பிரிந்தார். தேஜ் பிரதாப் மற்றும் அவரது குடும்பத்தினர் … Read more

ஐ.பி.எல்.: டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு

டெல்லி, நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 68வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லியில் நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுட்டப்பட்டது. இதில், டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 1 More update தினத்தந்தி Related Tags : … Read more

'அன்னாபெல்' பேய் பொம்மை மாயமாகிவிட்டதா? அச்சத்தில் உள்ளூர் மக்கள்

வாஷிங்டன், அமெரிக்க எழுத்தாளர் ஜானி குருயெல், கடந்த 1915-ம் ஆண்டு ‘ராகெடி ஆன்’ என்ற பொம்மை கதாபாத்திரத்தை உருவாக்கினார். தொடர்ந்து 1918-ம் ஆண்டு அவர் எழுதிய ‘ராகெடி ஆன் ஸ்டோரீஸ்’ என்ற புத்தகத்துடன் ‘ராகெடி ஆன்’ பொம்மை பொதுமக்களிடம் விளம்பரப்படுத்தப்பட்டது. கந்தல் துணிகளால் செய்யப்பட்ட அந்த பொம்மை, சிவப்பு நிற தலைமுடி, முக்கோண வடிவிலான மூக்கு மற்றும் பட்டன்களால் செய்யப்பட்ட கண்களை கொண்டிருந்தது. அந்த பொம்மை குழந்தைகளை மிகவும் கவர்ந்த நிலையில், ‘ராகெடி ஆன்’ பொம்மையின் விற்பனை … Read more