India Attack Pakistan: விமானங்கள் இயங்காது! பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

Indian pakistan war: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

மே 13ஆம் தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை – அக்னி வெயில் தாக்கம் குறைய வாய்ப்பு…

சென்னை: நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை மே 13ஆம் தேதி தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அக்னி வெயில் தாக்கம் குறைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. தென்மேற்கு பருவமழை காலம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் ஒரு மழைக்காலமாகும். இந்த பருவமழை இந்திய துணைக்கண்டத்தின் பல பகுதிகளில், குறிப்பாக தென்னிந்தியாவில் அதிக அளவில் மழையை கொண்டுவருகிறது.  ஆனால், இந்த ஆண்டு  முன்கூட்டியே, அதாவது மே மாதம் … Read more

Hardik Pandya : 'நாங்கள் செய்திருப்பது ஒரு க்ரைம்!' – தோல்வி பற்றி ஹர்திக் பாண்ட்யா

‘மும்பை தோல்வி!’ மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி வான்கடேவில் நடந்து முடிந்திருக்கிறது. மழைக்கு நடுவே பல ட்விஸ்ட்களோடு நடந்து முடிந்த இந்தப் போட்டியை குஜராத் அணி DLS முறைப்படி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. தோல்விக்குப் பிறகு மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார். Mumbai Indians ‘இது ஒரு க்ரைம்!’ – ஹர்திக் ஹர்திக் பாண்ட்யா பேசியதாவது, “சின்னச்சின்ன வித்தியாசங்களில்தான் நாங்கள் தோற்றிருக்கிறோம். ஆனாலும் நாங்கள் … Read more

ஜே.பி.நட்டா பயணித்த குண்டு துளைக்காத வாகனம் பழுதடைந்தது ஏன்? – டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

சென்னை: தமிழகம் வந்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவின் குண்டு துளைக்காத வாகனம் திடீரென பழுதடைந்தது ஏன் என டிஜிபி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா மத்திய பாதுகாப்பு படையினருடன் கூடிய இசட் பிளஸ் (z+) பாதுகாப்பு பிரிவு உடையவர். அவர் 2-ம் தேதி சென்னைக்கு வருகிறார் என்ற தகவல் அறிந்ததும் அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டன. அதன்படி அவருக்காக குண்டு … Read more

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரம் இணையத்தில் வெளியீடு

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற நீதிபதிகளின் சொத்து விவரம் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தற்போது 33 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 21 பேரின் சொத்து விவரத்தை உச்ச நீதிமன்றம் அதன் இணைய தளத்தில் நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. உச்ச நீதிமன்றத்தில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொலீஜியத்தில் இடம்பெற்றுள்ள 5 நீதிபதிகளும் தங்கள் சொத்து விவரத்தை தெரிவித்துள்ளனர். … Read more

“சரியான நேரத்தில் தக்க பதிலடி தரப்படும்” – பாகிஸ்தான் ராணுவம்

இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் விரும்பும் நேரத்திலும், இடத்திலும் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் என்று அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் அகமது ஷரீப் சவுத்ரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஆபரேஷன் … Read more

ஆபரேஷன் சிந்தூர்: பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் மறைவிடங்களில் தாக்குதல்! என்ன நடந்தது?

India Pakistan War News In Tamil: மூன்று படைகளும் சேர்ந்து இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் ஜெய்ஷ்-ஹபீஸ் சயீத்தின் மறைவிடங்களை தாக்கி அழித்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தின் கீழ், இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை கூட்டு நடவடிக்கை

தமிழ்நாட்டிலும் போர்கால முன்னெச்சரிக்கை ஒத்திகை… சென்னையில் 3 முக்கிய இடங்களில் ஒத்திகை…

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்ற சூழல் நிலவுகிறது. இதையடுத்து நாளை நாடு முழுவதும் போர்கால முன்னெச்சரிக்கை ஒத்திகையை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 54 ஆண்டுகள் கழித்து (இதற்கு முன்னர் 1971ல் நடந்தது) இந்தியாவில் நாளை (மே 7) போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 4 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடத்தப்படுகிறது. கல்பாக்கம், மீனம்பாக்கம், ஆவடி, மணலி … Read more

Operation Sindoor: 'பாகிஸ்தானில் இறங்கி அட்டாக் செய்த இந்திய இராணுவம்' – வெளியான முக்கிய தகவல்

‘ஆப்பரேஷன் சிந்தூர்!’ காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப்பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. #PahalgamTerrorAttack Justice is Served. Jai Hind! pic.twitter.com/Aruatj6OfA — ADG PI – INDIAN ARMY (@adgpi) May 6, 2025 இந்நிலையில், இந்திய இராணுவம் ‘ஆப்பரேஷன் சிந்தூர்!’ என்ற மிஷனைக் கையிலெடுத்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களின் மீது அதிரடி … Read more

சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை: பின்னணி என்ன?

ஓய்வுபெற்ற அரசு அதிகாரி, தொழிலதிபர்களின் வீடுகள் உட்பட சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழகத்தில் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை செயல்படுவதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கும் தடையில்லா சான்றிதழ் மிக முக்கியமானது. இந்த சான்றிதழ் கிடைத்த பின்னர்தான், தொழில் நிறுவனங்கள் முறைப்படி இயங்க முடியும். இந்நிலையில், சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதில் முறைக்கேட்டில் ஈடுபட்டதாக தற்போது ஓய்வு பெற்ற மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பாண்டியனுக்கு சொந்தமான இடங்களில் கடந்த … Read more