விவசாயிகளை வலியில் இருந்து விடுவிப்பது என்னுடைய தலையாய கடமை: துணை ஜனாதிபதி பேச்சு

புதுடெல்லி, மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார் கலந்து கொண்டார். அவர் மாணவர்களிடையே பேசும்போது, விவசாயிகளின் வலியை பற்றி பேசுவது அல்லது அவர்களுடைய வாழ்க்கை மேம்பாட்டுக்கான வழிகளை பற்றி பேசுவது என்பது என்னுடைய தலையாய கடமையாகும். அவர்களுடைய கவலைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வது என்பது அவசியம் ஆகும் என்றார். இந்த பேச்சின்போது, விவசாயிகள் வேளாண் தொழில்முனைவோர்களாக உருவாக வேண்டும் என கூறிய தன்கார், அவர்களுடைய … Read more

இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

ஜெருசலேம், இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர். ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, … Read more

பொதுமக்கள் கேள்வி கேட்டால் பொய் வழக்கு பதிவு செய்வதா? – தமிழக அரசுக்கு பாஜக கண்​டனம்

சென்னை: மத்திய அரசின் திட்டங்களில் நடக்கும் முறைகேடுகளை பொதுமக்கள் கேள்வி கேட்டால் அவர்கள் மீதே பொய் வழக்கு பதிவு செய்வதா? என தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக மாநில செயலாளர் அஷ்வத்தாமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களில் பயனாளிகளை தேர்வு செய்கிற நோடல் ஏஜென்சியாக மாநில அரசு உள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகளும், ஊழல்களும் தமிழகத்தில் நடக்கிறது. குறிப்பாக, வீடு ஒதுக்கீடு செய்வதற்கு … Read more

ம.பி போலீஸாரிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்ற பாலியல் குற்றவாளிக்கு குண்டு காயம்

போலீஸாரிடம் இருந்து துப்பாக்கிய பறிக்க முயன்ற பாலியல் குற்றவாளிக்கு காலில் குண்டு காயம் ஏற்பட்டது. மத்தியப் பிரதேசம் போபாலில் இளைஞர்கள் சிலர் கல்லூரி மாணவிகளிடம் நட்பாக பழகி, பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். அவர்களை செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து பிளாக்மெயில் செய்துள்ளனர். இதர மாணவிகளை தங்களிடம் அழைத்து வரும்படி வற்புறுத்தியுள்ளனர். இது குறித்து மாணவிகள் அளித்த புகாரின் பேரில் பர்ஹான் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். இந்த குற்றத்தில் தொடர்புடைய அப்ரார் என்பவரை கைது செய்வதற்காக … Read more

Vikatan Weekly Quiz: கட்டாய கடன் வசூல் தடுப்பு மசோதா டு `The One' சூர்யவன்ஷி; இந்த வார கேள்விகள்!

கட்டாய கடன் வசூலுக்கெதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் திருமண முன்பணம் தொகை உயர்வு, தாதே சாகேப் பால்கே விருது என இந்த வாரத்தில் நிகழ்ந்த பல நிகழ்வுகளின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் கலந்துகொண்டு சரியான பதில்களை அளித்து முக்கிய நிகழ்வுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். `விகடன் App வழியே இந்த Quiz-ல் பங்கேற்கப் பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.’ https://forms.gle/sSX5kcNAQGNk7AsY6?appredirect=website Loading… Junior … Read more

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக இன்று ஆர்ப்பாட்டம்

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கூறியதாவது: நீட் விவகாரத்தில் அரசியல் செய்வதை எல்லாம் பொருட்படுத்தாமல் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி எதிர்காலத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றனர். அவர்கள் ஆட்சிக்கு வந்து தற்போது 5-வது நீட் தேர்வு … Read more

இந்தியா – பாகிஸ்தான் பதற்றத்துக்கு இடையே விமானப்படை தளபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை – பின்னணி என்ன?

புதுடெல்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில், விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங்கை பிரதமர் மோடி நேற்று தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தி 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு காரணமானவர்கள் மீது கற்பனைக்கும் எட்டாத வகையில் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார். சிந்து … Read more

கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 5) முதல் 7-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும், 8, 9 தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான … Read more

பாகிஸ்தான் தோல்வி அடைந்த நாடு; இந்தியாவை ஒருபோதும் வாழ விடாது: ஒவைசி சாடல்

ஹைதராபாத்: ‘‘பாகிஸ்தான் தோல்வி அடைந்த நாடு. இந்தியாவை ஒருபோதும் அமைதியாக வாழ விடாது. எனவே, அந்நாட்டின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசதுதீன் ஒவைசி வலியுறுத்தி உள்ளார். காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தாக்குதலை ஒவைசி கடுமையாக கண்டித்து வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒவைசி பேசியதாவது: பாகிஸ்தான் ஒரு தோல்வி அடைந்த நாடு. அந்த நாடு இந்தியாவை அமைதியாக வாழவிடாது. எனவே, பஹல்காம் தாக்குதலுக்கு … Read more