பஹல்காம் தாக்குதல் எதிரொலி! பாகிஸ்தான் நடிகர்களுக்கு எதிராக இந்தியா எடுத்த முடிவு..

India Bans Pakistan Celebrities Instagram Accounts : நாட்டையே உலுக்கிய பஹல்காம் தாக்குதல் நிகழ்ந்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரபலங்களுக்கு எதிராக இந்தியா, அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.  

ஜெயலலிதா அம்மா தனி ஆளாக நீட் தேர்வை ரத்து செய்ய வைத்தார் – ஆர்.பி.உதயகுமார்!

நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்ட 23 மாணவர்கள் உயிருக்கு உதயநிதி ஸ்டாலின் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு.

ஐபிஎல் 2025 உடன் தோனி ஓய்வு உறுதி! இந்த சீசன் விளையாடுவதற்கே இதுதான் காரணம்!

இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி பல்வேறு சாதனைகளை செய்துள்ளார், அதேபோல ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து இதுவரை 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். 2024 ஆம் ஆண்டு தனது கேப்டன்சி பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாடிடம் ஒப்படைத்தார். அதிலிருந்து ஒரு வீரராக மட்டுமே சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஆண்டு ருதுராஜ்க்கு கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர் முழுவதும் இருந்து விலகியதால் தோனி … Read more

Retro: "சூர்யாவின் சூப்பர் ஃபர்பாமென்ஸ்; கடைசி 40 நிமிடங்கள்…" – ரெட்ரோ குறித்து ரஜினிகாந்த்

நடிகர் சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ரெட்ரோ. ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ள ரெட்ரோ படத்துக்கு பல தரப்புகளிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. நடிகர் ரஜினிகாந்த் ரெட்ரோ திரைப்படம் பார்த்து வாழ்த்தியது குறித்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். Retro ரஜிகாந்த்தின் பேட்ட திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜின் 9வது திரைப்படம் ரெட்ரோ. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ், நாசர், ஜெயராம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். … Read more

தொற்றுநோயைத் தூண்டும் திறன் கொண்ட ஆராய்ச்சிகளுக்கு நிதி உதவி நிறுத்தம்… அமெரிக்க அதிபர் டிரம்ப் கறார் அறிவிப்பு…

“இரட்டை-பயன்பாட்டு” ஆராய்ச்சி எனப்படும் சர்ச்சைக்குரிய அறிவியல் ஆராய்ச்சிகளுக்கான நிதியை கட்டுப்படுத்தும் நிர்வாக உத்தரவை அமெரிக்க அதிபர் டிரம்ப் திங்களன்று பிறப்பித்தார். “செயல்பாட்டின் ஆதாயம்” அல்லது “இரட்டை-பயன்பாட்டு” ஆராய்ச்சி என்று அழைக்கப்படும் இந்த ஆராய்ச்சி, தொற்றுநோயைத் தூண்டும் திறன் கொண்ட வைரஸ்கள் மற்றும் பிற நோய்க்கிருமிகளுடன் பரிசோதனை செய்வதை உள்ளடக்கியது. தொற்று முகவர்கள் எவ்வாறு அதிகமாக பரவக்கூடும் அல்லது மக்களை நோய்வாய்ப்படுத்தக்கூடும் என்பதை அந்த ஆய்வுகள் மூலம் கண்டறிய முடியும். விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வகத்தில் மிகவும் ஆபத்தான நோய்க்கிருமியை … Read more

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கை ஓவர்டேக் செய்த உ.பி. விவசாயி

லக்னோ, உத்தர பிரதேச் மாநிலம் ஹத்ராஸ் பகுதியை சேர்ந்த விவசாயி அஜித் என்பவரின் வங்கிக்கணக்கில் 36 இலக்கங்களுடன் ரூ.1,00,13,56,00,00,01,39,54,21,00,23,56,00,00,01,39,542 என்று பணத்தின் இருப்பு காட்டி உள்ளது. இது குறித்து ஜம்மு காஷ்மீரில் உள்ள வங்கி கிளையை கண்காணித்தபோது, அது கணிணி மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு என்று தகவல் தெரியவந்தது. இதனால் சிறிது நேரம் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கை உ.பி. விவசாயி ஓவர்டேக் செய்துள்ளார். உலகின் பெரும் பணக்காரர், எலான் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு … Read more

மும்பையின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுமா குஜராத்..? – இன்று மோதல்

மும்பை, 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இந்த தொடரில் இதுவரை 55 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு, பஞ்சாப், மும்பை, குஜராத் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெறும் 56வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. 5 … Read more

அமெரிக்க பாடகி லேடி காகாவின் இசை நிகழ்ச்சிக்கு வெடிகுண்டு மிரட்டல் – இருவர் கைது

பிரேசிலியா, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கோபகபானா கடற்கரையில் பிரபல பாப் பாடகி லேடி காகா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கண்டுகளிப்பதற்காக அவரது ரசிகர்கள் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர். அப்போது ஆடல், பாடல் என தங்களது மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினர். இதற்கிடையே அந்த இசை நிகழ்ச்சிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதேசமயம் கையில் … Read more

'கோலியை அப்படி சொல்லாதீங்க; ஆர்சிபி அணியின் Mr. Safety அவர்தான்' – கோலி குறித்து ஏபி டிவில்லியர்ஸ்

பெங்களூரு அணிக்காக கோலி ஒவ்வொரு சீசனிலுமே சிறப்பாக ஆடி வருகிறார். ஆனாலுமே தொடர்ந்து அவர் மீது அவர் மெதுவாக ஆடுகிறார் என்கிற விமர்சனம் உண்டு. விராட் கோலி அதற்கு பதிலளிக்கும் வகையில் பெங்களூரு அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் இப்போது கோலிக்கு ஆதரவாக பேசியிருக்கிறார் “விராட் எப்போதும் ஆர்சிபி-க்காக இருக்கிறார். அவர்தான் ஆர்சிபி அணியின் Mr. Safety. விராட் இருக்கும்போது நீங்கள் எதற்கும் பயப்பட தேவையில்லை. நான் பத்திரிகை நண்பர்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். உங்களை எனக்கு … Read more

ஜிஎஸ்டியால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால் சிங்கப்பூரை போல் ஒரே மாதிரியான வரி: அன்புமணி கோரிக்கை

சென்னை: ஜிஎஸ்டியால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால், சிங்கப்பூரை போல் ஒரே மாதிரியான வரி இருக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது: ஜிஎஸ்டியால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது 5, 12 ,18 மற்றும் 28% என நான்கு ஸ்லாப்புகளில் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக சிங்கப்பூரில் இருப்பது போல ஒரே … Read more