‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையும், இந்திய அரசின் நகர்வுகளும் – ஒரு பார்வை

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களின் மீது இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. 25 நிமிடங்களில் 24 ஏவுகணைகள் மூலம் நடத்தி முடிக்கப்பட்ட இந்தத் தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், பாகிஸ்தான் தாக்குதலில் இறங்கினால், மீண்டும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராக … Read more

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் பிரதமரின் 3 முரண்பாடான கருத்துகள்… குழப்பமான பேச்சு!

Shehbaz Sharif: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் ஆற்றிய உரையில் உள்ள முரண்பாடுகள் மற்றும் குழப்பங்களை இங்கு காணலாம்.

நடப்பு சாம்பியன் KKR-ஐ நாக் அவுட் செய்தது CSK… தோனிக்கு ஆறுதல் வெற்றி!

KKR vs CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி இன்று (மே 7) கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இன்று வழக்கத்திற்கு மாறாக இந்திய தேசிய கீதத்துடன் போட்டி தொடங்கியது. KKR vs CSK: சிஎஸ்கேவில் 3 மாற்றங்கள் முன்னதாக டாஸ் வென்றிருந்த ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆடுகளம் போட்டி போக போக மெதுவாக மாறும் என்பதை எண்ணி ரஹானே இந்த முடிவை எடுத்தார். சிஎஸ்கே அணியை … Read more

RETRO: " 'ரெட்ரோ' படத்தின் லாபத்தில் அகரம் பவுண்டேஷனுக்கு ரூ. 10 கோடி" – சூர்யா நெகிழ்ச்சி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44 படமான ‘ரெட்ரோ’ கடந்த வாரம் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. பூஜா ஹெக்டே, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர், ‘டாணாக்காரன்’ தமிழ் எனப் பலரும் இதில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாரயணின் இசையில் ‘love laughter war’ காதலும், கோபமுமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் பாடல்கள், பின்னணி இசை அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் … Read more

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 40

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 40 பா. தேவிமயில் குமார் இதுதான் வேண்டும் இப்போது *ஞாபக முடிச்சுகளின் தொடரில் நிறைய மனிதர்கள் நினைவில் வேண்டும்….. *அறைக்குள்ளி ருந்து உலகை காணும் அவலம் மாற வேண்டும் . *தேற்றிடும் சில உறவுகள் வேண்டும், கடை கோடி மனிதருக்கும் *ஆரோக்கிய உரையாடல் அனுதினமும் வேண்டும் அனைவருக்கும். *ஒவ்வொரு அனுபவத்தையும் அணிகலனாக எண்ணிட வேண்டும் *மனிதர்களைப் படித்திடும் புது மொழியை கண்டுபிடிக்க வேண்டும் *மூளைக்குள் பொருத்தும் எலானின் சிப்பை … Read more

"ரூ.10,000 லஞ்சம் கொடுத்தால்தான் மின் இணைப்பு"-மின்வாரிய அதிகாரிகளை காத்திருந்து கைதுசெய்த போலீஸார்

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை அடுத்த படியூரில் சாமிநாதன் என்பவர் புதிதாக கடைகள் கட்டியுள்ளார். இந்தக் கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி, மின்வாரிய உதவி பொறியாளர் வெங்கடேஷிடம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மனு அளித்துள்ளார். ஆனால், மின் இணைப்பு வழங்காமல் வெங்கடேஷ் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உதவிப் பொறியாளர் வெங்கடேஷையும், போர்மேன் நந்தகோபாலையும் நேரில் சந்தித்து மின் இணைப்பு வழங்குமாறு சாமிநாதன் வலியுறுத்தி உள்ளார். அதற்கு லஞ்சமாக ரூ.10 ஆயிரம் வெங்கடேஷ் … Read more

“உதயநிதி மட்டும்தான் முதல்வராக வர முடியுமா?” – ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி

கோவை: “அரசியலுக்கு புதிதாக வருபவர்கள் எல்லாம் முதல்வர் கனவில் இருப்பதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அவரது மகன் மட்டும்தான் முதல்வராக வர முடியுமா? யார் வேண்டுமானாலும் அந்தப் பதவியை அடைய முடியும்” என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் இன்று (மே 7) செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ராணுவ வீரர்களின் துணிச்சலான நடவடிக்கைக்கு பாராட்டு. தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு நாடே துணை நிற்கிறது. காஷ்மீரில் தீவிரவாதம் … Read more

“இந்திய தாக்குதலில் என் குடும்பத்தினர் 10 பேர் பலி… வருத்தம், விரக்தி இல்லை’ – ஜெய்ஷ்-இ-முகம்மது தலைவர் மசூத் அசார்

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ வான்வழி தாக்குதலில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் 4 உதவியாளர்கள் கொல்லப்பட்டதாக ஜெய்ஷ்-இ-முகம்மது தலைவர் மவுலானா மசூத் அசார் தெரிவித்துள்ளார். மசூத் அசார் வெளியிட்டதாக கூறப்படும் அறிக்கையில், பஹவான்பூரில் உள்ள ஜாமியா மஸ்ஜித் சுபஹான் அல்லா ஜெய்ஷ்-இ-முகம்மது தலைமையகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் அசாரின் அக்கா, அவரது கணவர், மருமகன் அவரது மனைவி, மருமகள் மற்றும் ஐந்து குழந்தைகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மவுலான மசூத் … Read more

1971 பாகிஸ்தான் போர்… தாஜ்மஹாலை மொத்தமாக மூடிமறைத்த இந்தியா… அது எப்படி…?

Taj Mahal: 1971 போரின் போது தாஜ்மஹாலை பாகிஸ்தானின் கண்ணில் இருந்து மறைக்க, இந்திய அரசு எடுத்து தனித்துவமான முயற்சியை இங்கு விரிவாக காணலாம். 

ஆபரேஷன் சிந்தூர்: ஐபிஎல் நடைபெறுவதில் சிக்கலா? பிசிசிஐ முடிவு என்ன?

IPL Matches After Operation Sindoor: கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரின் பகல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில், வெளிநாட்டினர் உள்பட சுமார் 26 சுற்றுலா பயணிகள் அவர்களின் குடும்பத்தினரின் முன்னிலையிலேயே கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூர் மூலம் தக்க பதிலடி இந்த தாக்குதல் நடந்து சுமார் 15 நாள்களான நிலையில், இன்று (மே 7) நள்ளிரவு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள … Read more