ஆபரேஷன் சிந்தூர்: ரஷிய அரசிடம் கனிமொழி தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு விளக்கம்

மாஸ்கோ, ரஷிய கூட்டாட்சி கவுன்சிலின் வெளிநாட்டு விவகாரங்கள் குழு, அதன் துணைத் தலைவர் ஆண்ட்ரெய் டெனிஸோவின் தலைமையில், திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையிலான எம்.பி.க்கள் குழுவுடன் மாஸ்கோவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த சந்திப்பில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து ரஷ்ய அரசிடம் கனிமொழி கருணாநிதி தலைமையிலான எம்.பி.க்கள் குழு விளக்கம் அளித்தது. மேலும், பயங்கரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்து வருவதை குறித்தும் எடுத்துரைத்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில், … Read more

Shadow Fleet: புதினின் ரகசிய கடல் நகர்வுகள்; ரஷ்யாவின் 'நிழற் கடற்படை' என்பது என்ன?!

ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டனும் ‘ரஷ்யாவின் நிழற் கடற்படை’ யைச் சுட்டிக்காட்டி தடைகளை விதித்துள்ளன. மேற்குலக நாடுகள், உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பைக் கட்டுப்படுத்த ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. உதாரணமாக ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியுள்ளன. தற்போது ரஷ்யாவின் ரகசிய கப்பல்கள், கச்சா எண்ணெய்யை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதை, “ரஷ்யாவின் நிழற்கடற்படை” என அழைக்கின்றனர். இதனைச் சுட்டிக்காட்டி போடப்பட்டுள்ள தடைகள் மேற்குலக நாடுகளின் ஆக்ரோஷமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. எண்ணெய் கப்பல் (File Image) … Read more

“குடும்பத்துடன் இருப்பது போன்ற…” – டெல்லியில் சோனியா, ராகுல் காந்தியை சந்தித்த ஸ்டாலின் நெகிழ்ச்சி

டெல்லி: “சோனியா காந்தி மற்றும் சகோதரர் ராகுல் காந்தி ஆகியோரை சந்திப்பது குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வை தருகிறது. டெல்லியில் அவர்களது இல்லத்தில் ஒவ்வொருமுறை சந்திக்கும்போதும் ஒரு சிறப்பான அரவணைப்பு கிடைக்கிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: டெல்லியில் நாளை (மே 24) நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 23) புதுடெல்லி சென்றடைந்தார். பின்னர், … Read more

குற்ற வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை: ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ பதவி பறிப்பு

ஜெய்ப்பூர்: அரசு அதிகாரியை நோக்கி துப்பாக்கியை நீட்டிய மிரட்டிய வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற கன்வர் லால் மீனாவின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜஸ்தான் சட்டமன்றம் ரத்து செய்தது. சட்டமன்ற செயலகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, மே 1 முதல் கன்வர் லால் மீனாவின் உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு அட்வகேட் ஜெனரல் மற்றும் மூத்த சட்ட நிபுணர்களிடமிருந்து சட்டக் கருத்தைக் கோரினார். ‘இன்று பெறப்பட்ட சட்டக் … Read more

ஹாவர்டு பல்கலை.க்கு ட்ரம்ப் கெடுபிடி: இந்திய மாணவர்கள் நிலை இனி..? – ஒரு பார்வை

வெளிநாடு சென்று கல்வி கற்க வேண்டும் என்று கனவு கொண்ட மாணவர்களின் முதல் இலக்கு பெரும்பாலும் லண்டனின் ஆக்ஸ்ஃபோர்டு, அமெரிக்காவின் ஹாவர்டு என்று தான் வரிசைப்படும். ஆனால், வெளிநாட்டு மாணவர்களின் ஹாவர்டு கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு தடை என்ற ஓர் அதிரடி, ‘அடாவடி’ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். மாணவர்கள், பார்வையாளர்கள் பரிமாற்ற திட்டத்தின் (Student and Exchange Visitor Program – SEVP) மூலம் அமெரிக்காவின் … Read more

தமிழகத்தின் இந்த 2 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் 2 நாட்களுக்கு அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

நீதிமன்றம் சென்ற ப்ரீத்தி ஜிந்தா.. பஞ்சாப் அணியின் பிரச்சனை என்ன?

பிரபல பாலிவுட் நடிகையான ப்ரீத்தி ஜிந்தா, கடந்த 2008ஆம் ஆண்டு முதலே பஞ்சாப் அணியின் கோ-ஓனராக இருந்து வருகிறார். இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் சக உரிமையாளர்கள் மீது ப்ரீத்தி ஜிந்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஏப்ரல் 21ஆம் தேதி நடந்த எக்ஸ்ட்ரா அர்டினரி ஜெனரல் மீட்டிங் சட்டபூர்வமல்ல என கூறி  சக உரிமையாளர்கள் மோகித் பெர்மன் மற்றும் நெஸ் வாடியா ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் ப்ரீத்தி ஜிந்தா.  அக்கூட்டம், நிறுவன சட்டம் … Read more

Tourist Family: `எப்படி விவரிப்பது; நன்றியுணர்வில் அழுகிறேன்..'- சூர்யா சந்திப்பு பற்றி இயக்குநர்!

சசிக்குமார் நடிப்பில் கடந்த மே 1ம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ள 25 வயதேயான இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் வெகுவாகப் பாராட்டப்படுகிறார். சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படத்துக்கு டூரிஸ்ட் ஃபேமிலி கடுமையான போட்டியாக அமைந்தது. எனினும் ரெட்ரோ திரைப்படம் வெற்றிகரமாக வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. Tourist Family படக்குழுவை பாராட்டிய சூர்யா இந்த சூழலில், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநரை … Read more

₹7,765 கோடி டீல் : KTM பைக் நிறுவனத்தை தட்டித் தூக்கிய பஜாஜ் ஆட்டோ நிறுவனம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஆஸ்திரிய மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான KTM நிறுவனத்தை ₹7,765 கோடி ஒப்பந்தத்தில் கையகப்படுத்த உள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முழு உரிமையாளரான பஜாஜ் ஆட்டோ இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் BV (BAIHBV) மூலம் KTM AG நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இது தவிர, KTM பைக்குகளுக்கான சேசிஸ் மற்றும் சஸ்பென்ஷன்களை தயாரிக்கும் உலகின் முதன்மையான இரு சக்கர வாகன சஸ்பென்ஷன் உற்பத்தியாளர்களில் ஒருவரான WP சஸ்பென்ஷன் நிறுவனத்தையும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் … Read more

பாலியல் தொல்லை; ஆட்டோவில் இருந்து குதித்து தப்பிய மாணவி

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் இளம்பெண் நர்சிங் கல்வி பயின்று வருகிறார். இந்த மாணவி கடந்த திங்ட்கிழமை தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு விடுதிக்கு திரும்பியுள்ளார். இதற்காக பர்லிங்டன் பகுதியில் ஷேர் ஆட்டோவில் அந்த மாணவி ஏறியுள்ளார். இதில் டிரைவர் உள்பட 4 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில், நிஷாத்கஞ்ச் என்ற பகுதியில் சென்றபோது ஆட்டோவை ஓட்டிய டிரைவர் கீழே இறங்கி பயணிகள் இருக்கையில் அமர்ந்துள்ளார். மற்றொரு நபர் ஆட்டோவை ஓட்டியுள்ளார். அப்போது திடீரென … Read more