டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மேத்யூஸ் அறிவிப்பு

கொழும்பு , சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவித்துள்ளார் . ஜூன் 17ம் தேதி தொடங்கும் வங்காளதேசத்தத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஏஞ்சலோ மேத்யூஸ் ஓய்வு பெறுகிறார். இலங்கை அணி நிர்வாகம் விரும்பும் பட்சத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடத் தயார் எனவும் விளக்கமளித்துள்ளார். 118 டெஸ்ட் போட்டிகளில், மேத்யூஸ் 44.62 சராசரியுடன் 8,167 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 16 சதங்கள் மற்றும் … Read more

லாட்டரியில் ரூ.230 கோடி பரிசு வென்ற சென்னை என்ஜினீயர்

அபுதாபி, சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற என்ஜினீயர் ஸ்ரீராம் ராஜகோபாலன் ரூ.230 கோடி பரிசு வென்றார். அவர் தனது பிறந்தநாளை ஒட்டி, கடந்த மார்ச் 16ம் தேதி வாங்கிய லாட்டரியில் ஜாக்பாட் அடித்தது. கண்களை மூடிக்கொண்டே செல்போனில் யதார்தமாக தொட்ட ஒரு நம்பருக்கு லாட்டரி விழுந்துள்ளதாக அவர் சிலாகித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “நான் முதலில் அதை நம்பவில்லை. நான் டிரா வீடியோவை மீண்டும் பார்த்தேன், வென்ற எண்களின் ஸ்கிரீன்ஷாட்டையும் எடுத்தேன். முதலில் என் கண்ணையே … Read more

`அபராதம் செலுத்தும் தவறுக்கு ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்வதா?'- சவுக்கு சங்கர் காட்டம்… விவரம் என்ன?

‘புகாரளித்த சவுக்கு சங்கர்!’ சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை சார்புச் செயலாளரை சந்தித்து, தன்னுடைய ஊடக அலுவலகத்தை சேர்ந்த ஊழியர்களை காவல்துறையினர் அழைத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதன்பிறகு பத்திரிகையாளர்களையும் சந்தித்திருந்தார். சவுக்கு சங்கர் ‘குற்றஞசாட்டும் சவுக்கு சங்கர்!’ அவர் பேசியதாவது, ‘சவுக்கு ஊடகத்தை முடக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு சென்னை மாநகராட்சி ஆணையாளர் அருண் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். சவுக்கு மீடியாவை சேர்ந்த கேமரா … Read more

கீழடி ஆய்வு நிதி: தமிழிசை கருத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

மதுரை: கீழடி ஆய்வுக்கு நிதி ஒதுக்கியதே மத்திய அரசுதான் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை கருத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “கீழடி அகழாய்வுக்கு முதல் ஆண்டு நிதி ஒதுக்கிவிட்டு அடுத்த ஆண்டு ஏன் நிறுத்தப்பட்டது. ஆய்வில் எதுவும் கிடைக்கவில்லை என்றால் நிதியை நிறுத்துவது, எல்லாம் கிடைத்தபோது ஏன் நிறுத்தினீர்கள். நீங்கள் ஒதுக்கிய நிதி, நீங்கள் சொல்லிவரும் வரலாற்றுக்கு எதிரான உண்மையை கண்டறிந்ததால் பதற்றம் அடைந்து நிதியை … Read more

“தூதுக் குழுக்கள் நாடு திரும்பியதும் நாடாளுமன்றத்தை கூட்டுக” – மம்தா பானர்ஜி

கொல்கத்தா: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டினை விளக்குவதற்காக பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ள தூதுக் குழுக்கள் நாடு திரும்பியதும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானஜி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளுக்கு பிரதிநிதிகள் குழுக்கள் சென்றிருப்பதை பார்க்கும்போது நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் தொடர்ந்து கூறிவருவது போல, தேசத்தின் நலனுக்காகவும், நமது இறையாண்மையை … Read more

“ஆப்பிள் நிறுவனத்துக்கு 25% வரி விதிக்கப்படும்” – டொனால்டு ட்ரம்ப் மிரட்டல்

வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்கவில்லை என்றால், இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியலில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், “அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று நான் நீண்ட காலமாக ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கிடம் தெரிவித்து வருகிறேன். அவை இந்தியாவிலோ அல்லது வேறு எங்குமோ தயாரிக்கப்படக் கூடாது. இது … Read more

நடிகராக அறிமுகமாகும் தயாரிப்பாளர்! அங்கீகாரம் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்..

Angeekaaram Movie First Look : நடிகராக அறிமுகமாகும் தயாரிப்பாளர்! பா.ரஞ்சித் துணை இயக்குநரின் ‘அங்கீகாரம்’ படம்..  

ஆகக்கடவன விமர்சனம்: பிரச்னையில் மாட்டிக்கொள்ளும் நண்பர்கள்; புதுமுகங்களின் முயற்சி எப்படி?

மூன்று நண்பர்கள் ஒரு மெடிக்கல் கடையில் ஒன்றாக வேலை செய்து வருகிறார்கள். அந்தக் கடையின் உரிமையாளர் கடையை விற்க முடிவெடுக்க, அதை அவர்களே வாங்கிக்கொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால், அதற்காக அவர்கள் சேமித்து வைத்த பணம் திருடப்படுகிறது. இந்த நிலையில், ஊருக்குச் சென்று சொத்தை விற்று பணத்தைத் தயார் செய்ய முடிவெடுக்கிறார் அவர்களில் ஒருவரான ஆதித்யா (ஆதிரன் சுரேஷ்). அவருடன் இரு சக்கர வாகனத்தில் துணையாகச் செல்கிறார் விக்கி (சி.ஆர்.ராகுல்). பயணத்தின்போது அவர்களது வண்டி பஞ்சராகிறது. அதைச் … Read more

ஹார்வர்ட் பல்கலையில் வெளிநாட்டினருக்கு தடை : வலுக்கும் எதிர்ப்பு

ஹார்வர்ட் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்தற்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது, உலகளவில் புகழ்பெற்ற அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர தடைவிதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். பல்கலைக்கழக நிர்வாகம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வன்முறை, யூத எதிர்ப்பு, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய நபர்களை பல்கலை. வளாகத்தில் ஒருங்கிணைப்பது ஆகியவற்றுக்கு நிர்வாகமே … Read more

இந்தியாவிற்கு ராகுல் காந்தி துரோகம் செய்கிறார் – பா.ஜ.க. மூத்த தலைவர் கவுரவ் விமர்சனம்

டெல்லி, பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதனை தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையேயான மோதல் 3 நாட்களுக்குப்பின் முடிவுக்கு வந்தது. இதனிடையே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எத்தனை விமானங்களை நாம் இழந்தோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். அதேபோல், கடந்த சில நாட்களுக்குமுன் கர்நாடகாவில் கட்சி நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாகிஸ்தானுக்கு எதிராக நாம் சிறிய அளவிலான போரை மோற்கொள்கிறோம்’ என்றார். மேலும், … Read more