இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி நாளை அறிவிப்பு

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந்தேதி லீட்சில் தொடங்குகிறது.இந்திய டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் இங்கிலாந்து தொடரில் அவர்களுக்கு பதிலாக யார் இறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அத்துடன் புதிய டெஸ்ட் கேப்டனையும் … Read more

இரட்டை அர்த்தத்தில் பேசி 50 இளம்பெண்களின் கற்பை சூறையாடிய 54 வயது கார் டிரைவர்

டோக்கியோ, ஜப்பானில் 54 வயதான கார் டிரைவர் ஒருவர் போதைபொருட்கள் கொடுத்து 50 இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு இவரது காரில் டோக்கியோவை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் பயணம் செய்தார். அப்போது அவரிடம் நைசாக பேச்சுகொடுத்தார். பின்னர் இரட்டை அர்த்தத்தில் பேசி அந்த பெண்ணிற்கு கார் டிரைவர் தூக்க மாத்திரையுடன் போதைப்பொருளையும் கொடுத்தார். அதை சாப்பிட்ட … Read more

Chhonzin Angmo: எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் 'பார்வை சவால்' கொண்ட இந்தியப் பெண்!

இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான பார்வை சவால் கொண்ட சோன்சின் அங்மோ, மனஉறுதியோடு எவரெஸ்ட்டில் ஏறி இந்தியாவின் மூவர்ணக்கொடியை அதன் சிகரத்தில் நட்டுள்ளார். ‘எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் பார்வை சவால் கொண்ட இந்தியப் பெண்’ என்ற வரலாற்று சாதனையும் இவர் படைத்துள்ளார். சோன்சின் 3 வயது முதல் பார்வை குறைபாட்டால் அவதிப்பட்டு வந்த நிலையில், 8 வயது சிறுமியாக இருந்தபோது பார்வையை முற்றிலும் இழந்திருக்கிறார். மருந்து ஒவ்வாமைக் காரணமாக சோன்சின் பார்வை இழந்ததாக சொல்லப்படுகிறது. … Read more

தமிழகத்துக்கு கல்வி நிதியை ஒதுக்காதது ஏன்? – உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

சென்னை: “புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடவில்லை. இதனால் தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை,” என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ,‘மறுமலர்ச்சி இயக்கம்’ என்ற அமைப்பின் நிர்வாகியான கோவை வே.ஈஸ்வரன் என்பவர், தாக்கல் செய்திருந்த மனுவில், “கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு 25 … Read more

“இந்திய வெளியுறவுக் கொள்கை சரிந்துவிட்டது” – ஜெய்சங்கர் மீது ராகுல் காந்தி கடும் தாக்கு

புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ நடவடிக்கை விவகாரத்தில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சரிந்துவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜேஜே விளக்குவாரா: இந்தியா ஏன் பாகிஸ்தானுடன் இணை வைக்கப்படுகிறது? பாகிஸ்தானைக் கண்டிப்பதில் ஒரு நாடு கூட நம்மை ஆதரிக்கவில்லையே ஏன்? இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் “மத்தியஸ்தம்” செய்ய ட்ரம்பிடம் யார் கேட்டார்கள்?” என்று கேள்விகளை எழுப்பியுள்ளார். தொடர்ந்து, “இந்தியாவின் … Read more

பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் வழங்கியது ஏன்? – சர்வதேச நாணய நிதியம் விளக்கம்

புதுடெல்லி: இந்தியாவின் ஆட்சேபனைகளையும் மீறி, பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் வழங்கியதை சர்வதேச நாணய நிதியம் (IMF) நியாயப்படுத்தியுள்ளது. இந்த கடன் தவணையைப் பெறுவதற்கு தேவையான அனைத்து இலக்குகளையும் பாகிஸ்தான் அடைந்துள்ளது என ஐஎம்எப் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐஎம்எப்-ன் தகவல் தொடர்புத் துறை இயக்குநர் ஜூலி கோசாக், “பாகிஸ்தான் உண்மையில் அனைத்து இலக்குகளையும் அடைந்துவிட்டதாக எங்கள் வாரியம் கண்டறிந்துள்ளது. அது சில சீர்திருத்தங்களில் முன்னேற்றம் கண்டுள்ளது, அதனால்தான், வாரியம் முன்னோக்கிச் சென்று நிதி … Read more

ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி: இனி மைசூர் பாக் இல்ல.. மைசூர் ஸ்ரீ!

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், ஜெய்ப்பூரில் இனிப்புகளின் பெயரில் இருந்து பாக் என்ற சொல்லை நீக்கி உள்ளனர். 

மாலையும் கழுத்துமாக ஜெயம் ரவி..பக்கத்தில் இந்த பொண்ணா? வைரலாகும் புகைப்படம்!

Photo Of Jayam Ravi With Aarti Before Divorce Controversy : நடிகர் ரவி மோகன் (அ) ஜெயம் ரவி, மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்ன புகைப்படம் என்பதை இங்கு பார்ப்பாேம்.  

நாகர்கோவில் அருகே டெய்லர் படுகொலை.. ஒழுங்காக தைக்காததால் கஷ்டமர் வெறிச்செயல்!

நாகர்கோவில் அருகே டெய்லர் சரியாக துணியை தைக்காததால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் அவரை படுகொலை செய்துள்ளார். 

கொரோனாவால் கேரளாவில் இருவர் மரணம் – 182 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் கொரோனா பாதிப்பால் கேரளாவில் இருவர் உயிரிழந்து 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று அவ்வப்போது தலைகாட்டி வருகிறது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இங்கு கடந்த 2 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 59 வயது ஆண் மற்றும் … Read more