அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் ‘டிராகன்’. ஹீரோவாகத் தொடர்ந்து ஹிட் வரிசைகளை அடுக்கி வருகிறார் பிரதீப் ரங்கநாதன்.
‘டிராகன்’ படத்தில் பிரதீப்புடன் கயாடு லோஹர், அனுபாமா பரமேஷ்வரன், மிஷ்கின் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இப்படத்தின் 100-வது நாள் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவருக்கும் சிறப்பு நினைவுப் பரிசு ஒன்று வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், “டிராகன் மாதிரி அர்த்தமுள்ள, அழகான, கமர்ஷியல் திரைப்படம் வருவது ரொம்பக் கடினம்.
அப்படியான படத்தைக் கொடுத்த அஸ்வத் மாரிமுத்துவுக்கும், பிரதீப்புக்கும் நன்றி.
அடுத்த தலைமுறை இயக்குநர்கள் அஸ்வத் மாரிமுத்து போலவும், பிரதீப் ரங்கநாதன் போலவும் இருக்க வேண்டும்.

இங்கு கதைதான் ராஜா. நல்ல கதைகளைச் சொன்னால், உலகமெங்கும் இருக்கும் தமிழ் மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். இளம் இயக்குநர்களுக்கு ரைட்டிங் ரொம்பவே முக்கியம்,” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…