சென்னை: மாணவர்களை கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க பள்ளிக்கல்வித் துறை புதிய வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான முக்கியப் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி அனல் கொதிக்கிறது. மேலும் பல பகுதிகளில் கடுமையாக வெப்ப அலை வீசுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலோர் பகல் நேரங்களில் வீட்டை விட்டுவெளியே வராத […]