பேசின்பாலம் ரயில் நிலையத்தில் பார்க்கிங் ஒப்பந்தம் முடிந்தது: பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்த இடமில்லை

பேசின் பாலம் ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்த முடியாத நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது. அங்கு பராமரிப்பு ஒப்பந்தம்முடிந்ததால், பயணிகள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். இதற்கு விரைவில் தீர்வு காண கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை சென்ட்ரலை அடுத்து அமைந்துள்ள முக்கியமான நிலையம் பேசின்பாலம் ரயில் நிலையம். இந்த நிலையத்தில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி என இரு வழித்தடங்களாக ரயில்கள் பிரிந்து செல்லும். இங்குள்ள ரயில் நிலையத்தில் தினசரி 10,000-க்கும் மேற்பட்டோர் பயணம் … Read more

“பிரதமர் மோடி முழக்கங்களில் நிபுணர்; தீர்வுகளில் அல்ல” – ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, முழக்கங்களை வழங்குவதில் நிபுணராக இருப்பதாகவும், ஆனால் தீர்வுகளில் அல்ல என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், இந்தியாவில் தயாரிப்போம் (Make in India) என்ற மத்திய அரசின் முழக்கம், அதிக அளவில் தொழிற்சாலைகளை ஏற்படுத்தும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும் ஆனால், நாட்டின் பொருளாதாரத்தில் உற்பத்தி 14% ஆக குறைந்துள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார். … Read more

இஸ்ரேல் சிறப்பாக போர் புரிகிறது; நிறுத்தச் சொல்வது கடினம்: டொனால்டு ட்ரம்ப்

வாஷிங்டன்: ஒப்பீட்டளவில் இஸ்ரேல் சிறப்பாக போர் புரிகிறது என்றும், போரை நிறுத்துமாறு அந்நாட்டிடம் கோருவது இப்போதைக்கு கடினம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஐரோப்பிய நாடுகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. இஸ்ரேல் போரை நிறுத்தினால், தானும் நிறுத்திக்கொள்வதாக ஈரான் தெரிவித்துள்ளது. தாக்குதல்களை நிறுத்துமாறு இஸ்ரேலிடம் அமெரிக்கா தெரிவிக்க முடியும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் இந்த கருத்து … Read more

‘iRonCub3’ – இத்தாலியின் பறக்கும் ஹியூமனாய்டு ரோபோ: சோதனை வெற்றி!

ரோம்: இத்தாலியில் வடிவமைக்கப்பட்ட ‘iRonCub3’ என்ற ஹியூமனாய்டு ரோபோவை பறக்க வைக்கும் சோதனை வெற்றி அடைந்துள்ளது. இது ரோபாட்டிக்ஸ் துறையில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இத்தாலிய தொழில்நுட்ப நிறுவனம் இந்த ஹியூமனாய்டு ரோபோவை வடிவமைத்துள்ளது. சவாலான சூழல்களில் செயல்படும் வகையில் இதன் வடிவமைப்பு உள்ளது. இதன் மூலம் வழக்கமான ரோபோக்கள் செய்கின்ற வேலைகளை காட்டிலும் கூடுதல் டாஸ்குகளை செய்யும் நோக்கில் இதற்கு உயிர் கொடுத்துள்ளனர் இதன் வடிவமைப்பாளர்கள். இதில் பயன்படுத்தபட்டுள்ள டைட்டானியம் 800 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையும் … Read more

ஆபரேஷன் சிந்து: ஈரானில் சிக்கிய இந்திய மாணவர்கள்! பத்திரமாக நாடு திரும்பிய 290 பேர்!

What Is the Operation Sindhu: இஸ்ரேல் ஈரான் போரில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக திப்பி அழைத்து வர இந்திய அரசு ஆபரேஷன் சிந்து மிஷனை தொடங்கியுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா..! அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த குட் நியூஸ்

Minister Anbil Mahesh Announcement : அரசுப் பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Yoga: "கரீனா கபூர் வந்த பிறகுதான் யோகா… என் குழந்தைகளுக்கு ஸ்பைடர் மேன் தெரியாது; ஆனா…” – நமீதா

11 ஆவது சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் வேலூரில் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் நமீதா கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “2007-ல் யோகா ஆரம்பமாகவில்லை. அது 5 ஆயிரம் வருடம் பழமையானது. 2007இல் பாலிவுட் நடிகை கரீனா கபூர் யோகா மூலம் உடலைக் கட்டுப்பாட்டோடு வைத்திருந்தது தெரிந்த பின்தான். இங்கு யோகா டிரண்ட் ஆனது. நமீதா ஆனால் இதற்கு முன்பே நம் நாட்டில், நமது கலாசாரத்திலேயே … Read more

ஹேக் ஆன கேமராக்கள், லைவ் ரிலே பார்த்து தாக்கும் ஈரான்: இஸ்ரேலின் பதில் என்ன?

Israel Iran Conflict: இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போர் உச்சத்தில் உள்ளது. இரு நாடுகளும் ஒன்றையொன்று தீவிரமாக தாக்கி வருகின்றன. இதில் தொழில்நுட்பமும் மேம்பட்ட ஆயுதங்களும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இஸ்ரேலில் உள்ள தனியார் பாதுகாப்பு கேமராக்களை ஈரான் ஹேக் செய்து வருவதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் சமீபத்தில் தெரிவித்து வருகின்றனர். எதிரி குறித்த நிகழ்நேர தகவல்களை சேகரிப்பதே இதன் நோக்கமாக உள்ளது. No Security Cameras: மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த இஸ்ரேல் டெல் … Read more

நாளை மதுரையில் நடைபெறு கிறதுபிரமாண்டமான முருக பக்தர்கள் மாநாடு! இன்று இரவு புறப்படுகிறது சிறப்பு ரயில்….

மதுரை: மதுரையில்  நாளை  (ஜூன் 22 ) பிரமாண்டமான முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முருக பக்தர்கள் கலந்துகொள்ளும் வகையில், சென்னை எழும்பூரில் இருந்து  இன்று இரவு  சிறப்பு ரயில் புறப்படுகிறது. மதுரையில் ஜூன் 22 நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான பணிகள்  முடிவடைந்து, மாநாட்டுக்கு வரும் பக்தர்களை வரவேற்க மாநாட்டு குழுவினர் தயாராக உள்ளனர். இந்த . மாநாட்டில் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு கின்னஸ் சாதனை படைக்கவுள்ளதாக ஹிந்து … Read more

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம்; 290 இந்தியர்கள் பாதுகாப்பாக சொந்த நாட்டுக்கு வருகை

புதுடெல்லி, காசா மீது இஸ்ரேல் ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் சூழலில், ஈரான் நாடும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு, 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலும் அதற்கு பதிலடி கொடுத்தது. இதன்பின்னர் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் தணிந்திருந்த சூழலில், திடீரென ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனை … Read more