முருக பக்தர்கள் மாநாட்டிற்கு நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் வாழ்த்து

கோஹிமா, முருக பக்தர்கள் மாநாட்டிற்கு நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; “அன்று ஒரு நாள் அந்நியப் படையால் திருப்பரங்குன்றத்துக்கும் ஒரு சோதனை வந்தது. ஆவியாக வந்தால்தான் அந்நியரைத் தடுக்க முடியும், நம் ஆலயத்தைக் காக்க முடியும் என்ற நம்பிக்கையில் தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டான் முத்து மகன் குட்டி என்ற சிறுவன். இன்றும் கூட நம் ஆலயங்களுக்கு, சமுதாயத்திற்கு, தேசத்திற்கு சோதனை தொடர்கிறது. அந்த நிலையை மாற்றிட … Read more

டி.என்.பி.எல்.: கோவை கிங்ஸ் – நெல்லை அணிகள் இன்று மோதல்

நெல்லை, 8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையிலும், 2வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்திலும் நடந்து முடிந்தன. இதனையடுத்து இந்த தொடரின் 3வது கட்ட லீக் ஆட்டங்கள் … Read more

தைவான் எல்லையில் போர்ப்பதற்றம்.. ஒரே நாளில் 74 சீன போர் விமானங்கள் பறந்ததால் பரபரப்பு

தைபே நகரம், சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனிநாடாக பிரிந்து சென்றது. சமீப காலமாக அதனை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடிக்கிறது. எனவே தைவானுடன் வேறு எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தைவான் எல்லைக்குள் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தைத் தூண்டுகின்றது. அதன்படி கடந்த ஒரு நாளில் சீனாவுக்குச் சொந்தமான 74 போர் விமானங்கள் தைவான் எல்லையில் கண்டறியப்பட்டன. அவற்றில் 60 விமானங்கள் எல்லையைக் … Read more

சென்னை | இயந்திர கோளாறால் தரையிறங்கிய விமானம்

சென்னை: சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், விமானம் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது. சென்னையிலிருந்து நேற்று காலை 8 மணிக்கு 70 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மதுரைக்கு புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்தில் திடீரென்று இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டுபிடித்தார். உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். விமானத்தை சென்னைக்கு திருப்பி கொண்டு வருமாறு உத்தரவு வந்ததைத் தொடர்ந்து, … Read more

‘உலகை இணைத்த யோகா!’ – விசாகையில் யோகா தின பிரமாண்ட நிகழ்வில் பிரதமர் மோடி

விசாகப்பட்டினம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 21) ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் மாபெரும் அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ.க்கள் மற்றும் சினிமா, வர்த்தக பிரமுகர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்று யோகாசனங்கள் செய்தனர். இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, “உள் … Read more

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் பெயரை பரிந்துரைத்த பாகிஸ்தான் – பின்னணி என்ன?

இஸ்லாமாபாத்: அமெரிக்க நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு வரும் 2026-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டுமென சமூக வலைதள பதிவு மூலம் பாகிஸ்தான் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உளள்து. அது குறித்து விரிவாக பார்ப்போம். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பாகிஸ்தான் தரப்பு பதிவிட்டுள்ளதாக உலக செய்திகளை வெளியிட்டு வரும் செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதில் அதிபர் ட்ரம்ப் முக்கிய பங்காற்றியதாகவும், இரு தரப்பிலும் … Read more

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அஸ்வின்… ரெஸ்ட் எடுக்க வந்த இடத்திலும் பஞ்சாயத்து!

Ravichandran Ashwin Controversy: குமரி மாவட்டம் அருவிக்கரையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் நண்பர்களோடு குளித்து மகிழும் படம் இன்ஸ்டாகிராமில் வெளியாகியிருந்தது. இந்த புகைப்படங்கள்தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள அருவிக்கரையில் பரளியாறு ஓடுகிறது. அருவிக்கரையில் பாறைக்கூட்டத்தின் மீது பரளியாற்று தண்ணீர் பாய்ந்தோடும் அழகு, அனைவரின் மனதையும் கொள்ளை கொள்ளும் ஒன்று என்றே கூறலாம்.  Ravichandran Ashwin: கன்னியாகுமரி வந்த அஸ்வின் … Read more

அனைத்து ரயில்களிலும் தானியங்கி கதவுகள் அமைப்பது குறித்து பரிசீலியுங்கள்! உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அனைத்து ரயில்களிலும் ஏன் தானியங்கி கதவுகளை நிறுவ முடியாது?” என கேள்வி எழுப்பிய  மும்பை உயர்நீதிமன்றம் , அதுகுறித்து பரிசிலிக்கும்படி ரயில்வே துறைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புறநகர் ரயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக ரயிலில் தொங்கியபடி சென்ற பயணிகள் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்தனர்.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கீழே விழுந்தவர்களில்  5 பேர் உயிரிழந்த நிலையில் 8 பேர் படுகாயங்களோடு … Read more

போலி தரிசன டிக்கெட்டுகளை பெற்று ஏமாற வேண்டாம்: பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை

திருமலை, பக்தர்கள் போலி தரிசன டிக்கெட்டுகளை பெற்று ஏமாற வேண்டாம், என திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரி முரளிகிருஷ்ணா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மாணவி சங்கமித்ரா. இவர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இருந்தார். அவரை மதனதீபுபாபு என்ற சந்தீப், பவன்குமார் ஆகியோர் தொடர்பு … Read more