தேசிய மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டி: மராட்டியத்தை வீழ்த்திய கர்நாடக மகளிர் அணி

சென்னை, தமிழ்நாடு ஆக்கி சங்கம் சார்பில் முதலாவது தேசிய மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த மகளிர் பிரிவு ஆட்டம் ஒன்றில் கர்நாடக அணி, மராட்டியத்தை எதிர்கொண்டது. அபாரமாக ஆடி கோல் மழை பொழிந்த கர்நாடக அணி 12-0 என்ற கோல் கணக்கில் மராட்டியத்தை துவம்சம் செய்து 2-வது வெற்றியை பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் இமாசலபிரதேச அணி 4-1 என்ற கோல் … Read more

முன்னாள் மாணவனுடன் அடிக்கடி தனிமையில் உல்லாசம்.. ஆசிரியை சஸ்பெண்ட்

கான்பெரா, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் மெல்போர்ன் நகரில் உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் ஆசிரியையாக எலினோர் லூயிஸ் (வயது 34) என்பவர் 2017-ம் ஆண்டு சேர்ந்தார். அப்போது தனது வகுப்பில் உள்ள ஒரு மாணவனுடன் அவர் நன்கு பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் அவன் தனது பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி சேர்ந்த பின்னரும் தொடர்ந்தது. இதனால் ஆன்லைன் மூலம் தினமும் அவர்கள் பேசி மேலும் நெருக்கமாகினர். இதனையடுத்து … Read more

TVK: "நாங்க வந்தாலே கரண்ட் கட் பண்றீங்க; ஏன் பயப்படுறீங்க?" – திமுகவை அட்டாக் செய்த என்.ஆனந்த்

‘விஜய் பிறந்தநாள் பொதுக்கூட்டம்!’ தவெக தலைவர் விஜய்யின் தனது 51 வது பிறந்தநாளை நாளை கொண்டாடவிருக்கிறார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தவெக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னையின் வேளச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் திமுகவைக் கடுமையாக அட்டாக் செய்து பேசியிருக்கிறார். TVK Anand என். ஆனந்த் பேசியதாவது, ”கோவிலம்பாக்கத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு இங்கே வருகிறேன். அங்கே நான் சென்றவுடனேயே மின்சாரத்தைத் துண்டித்துவிட்டார்கள். ஒரு 10 நிமிடம் மீண்டும் மின்சாரம் வந்தது. … Read more

கோரிக்கைகளுக்காக பாதயாத்திரை மேற்கொண்ட அரசு மருத்துவர்கள் கைதுக்கு சங்கங்கள் கண்டனம்

சென்னை: கோரிக்கைகளுக்காக பாதயாத்திரை மேற்கொண்ட அரசு மருத்துவர்களைக் கைது செய்ததற்கு, மருத்துவர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டுவந்த அரசாணை 354-ஐ அமல்படுத்தி, அதன்படி அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்களுக்கான … Read more

காட்டாட்சியை அகற்றியதால் பிஹார் மாநிலம் வளர்கிறது: பிரதமர் மோடி கருத்து

சிவான்: பிஹாரில் காட்டாட்சியை அகற்றிய மக்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்தனர். இதன்காரணமாக பிஹார் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிஹார் மாநிலம், சிவானில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது ரூ.5,200 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பிஹாரின் மர்ஹோராவில் அமைந்துள்ள டீசல் ரயில் இன்ஜின் ஆலையில் கினியா நாட்டுக்கு ஏற்றுமதி … Read more

அணு உலை தகர்ப்புக்கு பதிலடி: இஸ்ரேலின் முக்கிய இடங்களை தாக்கிய ஈரான் ஏவுகணைகள் – 32 பேர் காயம்

டெல் அவிவ்: ஈரானின் அராக் நகரில் உள்ள அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக ஈரான் பெரிய அளவில் ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியுள்ளது. மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலில் நான்கு இடங்களில் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இஸ்ரேலின் பிரபல மருத்துவமனையான சொரோகா மருத்துவமனையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தலைநகர் டெல் அவிவில் உள்ள பங்குச்சந்தை கட்டிடம் தாக்குதலுக்கு உள்ளானது. சொரோகா மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “மருத்துவமனைக்கு பலத்த … Read more

'மோதல்கள் நிறைந்த உலகில்… யோகாவே அமைதியை தரும்' – பிரதமர் மோடி பேச்சு!

PM Narendra Modi Vizag: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி ஆற்றிய உரையை இங்கு விரிவாக பார்க்கலாம். 

ஜன நாயகன் போஸ்டரில் மறைந்திருக்கும் ரகசியம்! விஜய் கையில் ‘இதை’ கவனிச்சீங்களா?

Jana Nayagan Poster TVK Tattoo In Vijay Hand : விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜன நாயகன் படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரில் முக்கியமான ஒரு விஷயமும் இடம் பெற்றிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை வெளியிட்டால் கடும் நடவடிக்கை! உயர்நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை…

சென்னை: பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை வெளியிடக் கூடாது  உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றம் பல முறை அறிவுறுத்தி உள்ள நிலையில்,  தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை வெளியிடக் கூடாது என்ற உச்சநீதிமன்ற ஆணையை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழகக் காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவான சிறுமி மீதான  பாலியல் வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து இறுதி … Read more

மகனுக்கு நிச்சயித்த பெண்ணை மணந்த நபர்.. முதல் மனைவி பரபரப்பு புகார்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் அருகே உள்ள பன்சங்கலி கிராமத்தை சேர்ந்தவர் சகீல் (வயது 55). தொழில் அதிபரான இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 6 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் தனது 17 வயது மகனுக்கு, பக்கத்து ஊரில் பெண் பார்த்து வந்தார் சகீல். பெண் வீட்டார் முதலில் சம்மதிக்கவில்லை. பின்னர் சகீல் பேசி அவர்களை சம்மதிக்க வைத்து திருமண நிச்சயமும் செய்து வைத்தார். நிச்சயதார்த்தம் முடிந்து சில தினங்களில் சகீலின் மகன், தனது தந்தையின் செல்போனை தற்செயலாக … Read more