விபத்​துக்​குள்​ளான ஏர் இந்​தியா விமானத்​தின் கறுப்பு பெட்டி சேதம்: அமெரிக்காவுக்கு அனுப்​ப பரிசீலனை

புதுடெல்லி: குஜராத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில் மீட்கப்பட்ட கருப்பு பெட்டி சேதம் அடைந்துள்ளதால், அதில் இருந்து விமான விபத்துக்கான காரணம் குறித்த தகவல்களை பெறுவதில் சிக்கில் ஏற்பட்டுள்ளது. இதனால் அதை அமெரிக்காவில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்புவது பற்றி மத்திய அரசு முடிவெடுக்கவுள்ளது. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் கடந்த 12-ம் தேதி விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் பயணம் … Read more

‘ஈரானுக்கு நாங்கள் முழு தார்மிக ஆதரவை வழங்குகிறோம்; ஆனால்…’ – பாகிஸ்தான் சொல்வது என்ன? 

இஸ்லாமாபாத்: ஈரானுக்கு நாங்கள் முழு தார்மிக ஆதரவை வழங்குகிறோம். ஆனால் இதுவரை எங்களிடம் ஈரான் எந்த வகையான ராணுவ உதவியையும் கேட்கவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஷஃப்கத் அலி கான் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஈரான் குறித்த பாகிஸ்தானின் நிலைப்பாடு தெளிவானது மற்றும் வெளிப்படையானது. ஈரானுக்கு நாங்கள் முழு தார்மிக ஆதரவை வழங்குகிறோம்; ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். ஈரான் எல்லையில் உள்ள அகதிகளுக்கு பாகிஸ்தானில் … Read more

16 பில்லியனுக்கும் அதிகமான பாஸ்வேர்டுகள் கசிவு: டெக் வல்லுநர்கள் சொல்வது என்ன?

புதுடெல்லி: ஆன்லைனில் சுமார் 16 பில்லியனுக்கும் அதிகமான பாஸ்வேர்டுகள் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது இணைய பாதுகாப்பு சார்ந்த அத்துமீறலில் மிகப்பெரிய தரவு கசிவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கசிவு மில்லியன் கணக்கான இணைய பயனர்களின் தனிப்பட்ட தரவுகளுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக துறை சார்ந்த வல்லுநர்கள் கருதுகின்றனர். இதனால் இணையதள பயனர்களின் கணக்குகளை ஹேக் செய்வது, அவர்களது அடையாளங்களை களவாடுவது, பிஷ்ஷிங் மோசடி போன்ற அச்சுறுத்தல் இருப்பதாக தகவல். இது பல … Read more

Chennai City Gangsters படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

விக்ரம் ராஜேஷ்வர், அருண் கேசவ் இயக்கத்தில் வைபவ், அதுல்யா ரவி நடித்துள்ள சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் (Chennai City Gangsters) படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

நாட்டுக்கோழி பண்ணை : 50 சதவீத மானியம், உடனே விண்ணப்பிக்கவும் – தமிழ்நாடு அரசு லேட்டஸ்ட் அறிவிப்பு

Tamil Nadu Government : நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க பொதுமக்கள் விண்ணப்பிப்பது குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 50 சதவீத மானியம் உண்டு. முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ஐபிஎல் 2025: தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உலகில் மாபெரும் சாதனை!

IPL Record Breaking: ஐபிஎல்லின் 18வது தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த நிலையில், ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. தற்போது இது தொடர்பான புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளன.  2025 ஐபிஎல் தொடர் ஒட்டுமொத்தமாக 100 கோடி பார்வையாளர்கள் தொலைகாட்சி மற்றும் இணைய வழியில் பார்த்துள்ளனர். மொத்தமாக 84000 கோடி நிமிடங்கள் பார்க்கப்பட்டு இருக்கின்றன. ஐபிஎல் வரலாற்றில் இதுவே வரலாற்றில் அதிக பார்வையாளர் எண்ணிக்கை மற்றும் பார்க்கப்பட்ட நேரமாகும். குறிப்பாக … Read more

Vijay: விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் : காத்திருக்கும் 'ஜனநாயகன்' கொண்டாட்டங்கள்; மறுபக்கம் ரீ-ரிலீஸ்!

மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் விஜய்யின் ரசிகர்களும், கட்சி தொண்டர்களும். நாளை மறுநாள் விஜய்யின் 51 வது பிறந்த நாள். அவரது பிறந்த நாளை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படத்தின் அப்டேட் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. விஜய்யின் 69வது படமான ‘ஜனநாயகன்’, அவரது சினிமா பயணத்தின் கடைசி படமாக சொல்லபடுகிறது. அஜித்தின் ‘துணிவு’ படத்தை இயக்கிய ஹெச். வினோத் இயக்கி வரும் இப்படத்தில் விஜய்யின் ஜோடியாக பூஜா ஹெக்டே, வில்லனாக பாபி தியோல், பிரகாஷ் ராஜ், மமிதா பைஜூ, … Read more

Nothing Phone 3: அறிமுக தேதி, அம்சங்கள், விலை விவங்கள் இதோ

Nothing Phone 3: ஜூலை 1 ஆம் தேதி Nothing Phone 3 அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. Carl Pei -இன் Nothing நிறுவனம் அதன் சிறப்பு வடிவமைப்பு மற்றும் தனித்துவமான இடைமுகத்திற்காக ஏற்கனவே மிகவும் பிரபலமானது. மேலும் இப்போது Nothing Phone 3 பற்றியும் மிகப்பெரிய பரபரப்பான செய்தி ஒன்று வந்துள்ளது. அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, இந்த முறை போனில் பல புதிய விஷயங்கள் இருக்கக்கூடும் என்பதைக் காட்டும் டீஸர்களை நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. புதிய … Read more

‘தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன்’ போன வாரம்… ‘ஆங்கிலத்தில் பேசினால் அவமானம்’ இது நேற்று… ‘கன்னடத்தில் பேசத் தெரியாததற்கு மன்னிப்பு’ இது இன்று…

கர்நாடக மாநிலம் நெலமங்கலா தாலுகா, நாகூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிஜிஎஸ் எம்சிஎச் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை உள்துறை அமித் ஷா இன்று திறந்துவைத்தார். ஆதிசுஞ்சனகிரி பல்கலைக்கழகத்தின் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெங்களூரு வளாகத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கல்லூரியை திறந்து வைத்து பேசிய அமித் ஷா, “சிறந்த மொழியான கன்னடத்தில் பேச முடியாமல் போனதற்கு உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார். இதையடுத்து அவரது பேச்சை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கன்னடத்தில் மொழிபெயர்த்தனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மதுரை … Read more

ஹாலே ஓபன் டென்னிஸ்; ஜானிக் சின்னெர் அதிர்ச்சி தோல்வி

பெர்லின், பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள ஹாலெ ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஜானிக் சின்னெர் (இத்தாலி), கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் சின்னெர் கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற அடுத்த செட்களில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்சாண்டர் பப்ளிக் 6-3, 6-4 என்ற … Read more