இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி: எப்போது, எங்கே, எதில் பார்ப்பது? முழு விவரம்!

இந்தியா கிரிக்கெட் அணி இந்த மாத தொடக்கமே இங்கிலாந்து சென்று அங்கு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இந்த தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், நாளை (ஜூன் 20) முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு தொடங்கிறது. எந்த மைதானத்தில் நடைபெறுகிறது. எந்த தொலைக்காட்சி அல்லது ஓடிடியில் … Read more

ஜூலை 2-க்குள் கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றப்பட வேண்டும்! மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை…

சென்னை: ஜூலை 2-க்குள் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள  கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.   அவ்வாறு அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும்  கூறி உள்ளது. மதுரை கொடிக்குளத்தைச் சேர்ந்த அமாவாசை என்பவர் விளாங்குடி உள்ளிட்ட 2 இடங்களில் அதிமுக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், பொது இடங்கள், தேசிய, … Read more

பெண்கள் புரோ ஆக்கி லீக்: இந்தியா தோல்வி

லண்டன், 9 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது பெண்கள் புரோ ஆக்கி லீக் தொடரில் லண்டனில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா- அர்ஜென்டினா அணிகள் மோதின . பரபரப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதையடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் தோல்வியை தழுவியது. 1 More update தினத்தந்தி Related Tags : ஆக்கி  இந்திய அணி  India 

ENG vs IND: `கோலியுடன் விளையாடாதது வருத்தமே..' – இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூன்20) ஹெட்டிங்லியில் தொடங்குகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணி விளையாட உள்ள முதல் வெளிநாட்டு டெஸ்ட் தொடர் என்பதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் கோலி இல்லாதது வருத்தமே என்று இங்கிலாந்து … Read more

நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு மின்சாரம், குடிநீர் இணைப்பு கொடுத்தது எப்படி? – ஐகோர்ட் கேள்வி

சென்னை: நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு கொடுத்தது எப்படி என விளக்கம் அளிக்க தாம்பரம் மாநகராட்சி ஆணையர், மின்சார வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நன்மங்கலம் ஏரியை ஆக்கிரமித்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அந்த பகுதியைச் சேர்ந்த ராமசந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அளித்த கோரிக்கை மனுவுக்கு பதிலளித்த அரசு, … Read more

மத்திய அரசு பணிகளில் நேரடி நியமன கொள்கை கைவிடப்படவில்லை: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

புதுடெல்லி: மத்திய அரசு பணிகளில் நேரடி நியமனக் கொள்கை கைவிடப்படவில்லை என்று மத்திய அறிவியல், பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சமீபத்தில், லேட்டரல் என்ட்ரி எனப்படும் நேரடி நியமனம் மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள் அல்லது துணைச் செயலாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. மத்திய அரசு இவ்வாறு இட ஒதுக்கீடு இல்லாமல் நேரடியாக நியமனம் … Read more

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்கலம் வெடித்துச் சிதறியது – நடந்தது என்ன?

டெக்சாஸ்: டெக்சாஸின் மாஸியில் உள்ள எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் சோதனைத் தளத்தில் ஒரு சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஸ்பேஸ்-எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்கலம் தீ பரிசோதனையின்போது வெடித்துச் சிதறியது. ஸ்டார்ஷிப் விண்கலத்தின் இயந்திரங்களில் இன்று வழக்கமான தீ பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது ராக்கெட்டின் அடிப்பகுதியில் இருந்து ஒரு சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டு, சுற்றியுள்ள பகுதிகள் தீப்பிழம்புகள் மற்றும் புகையால் சூழ்ந்தது. இந்த விபத்தானது ஸ்டார்ஷிப் திட்டத்துக்கு குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதனால் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் தனது … Read more

ஜெயிலர் 2க்கு அடுத்து ரஜினி நடிக்கும் படம்! இயக்குநர் இவர்தான்..யார் தெரியுமா?

Rajinikanth Next Film Director After Jailer 2 : ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிசியாக இருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு அவர் யாருடன் நடிக்க இருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.  

வாக்காளர் பட்டியல் தயாரிப்பு : திமுகவினருக்கு முக்கிய எச்சரிக்கை கொடுத்த கனிமொழி

Kanimozhi : வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் திமுகவினர் மிகுந்த கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டும் என கனிமொழி கருணாநிதி எம்பி தெரிவித்துள்ளார். 

Vairamuthu: "பழி என்மீதே வருகிறது; நான் என்ன செய்ய…" – எதைக் கூறுகிறார் வைரமுத்து?

கவிஞர் வைரமுத்து கடந்த சில நாள்களுக்கு முன்பு, தான் எழுதிய பாடல்களின் பல்லவிகள் பலவற்றை மரியாதைக்குக்கூட தன்னிடம் கேட்காமல் திரைப்பட தலைப்புகளாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். மேலும், ஒரு வார்த்தை தன்னிடம் கேட்டுவிட்டுச் செய்வது அவர்களுக்கு நாகரீகமாகாதா? என்று கேள்வியும் எழுப்பியிருந்தார். இந்த நிலையில், தான் எழுதும் பாடல்களில் திருத்தம் கேட்டால் செய்யமாட்டேன் எனத் தன்மீது உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு வைக்கப்படுவதாக வைரமுத்து தெரிவித்திருக்கிறார். கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வைரமுத்து, “என்மீது … Read more