தமிழ்நாட்டில் 14 தொழிற்பேட்டைகள் – 6லட்சம் பெண் தொழிலாளர்கள்: சென்னையில் 16ஆவது சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 16ஆவது சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். Ambattur Industrial Estate Manufacturer’s Association (AIEMA) சார்பில்  அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி இன்று முதல் (19.06.2025) முதல் 23.06.2025 வரை   நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட உள்ள 16 லட்சம் பெண் தொழிலாளர்களில், 6 லட்சம்  பெண் தொழிலாளர்கள்  தமிழ்நாட்டில் உள்ளனர்”   என்றும், இந்தியாவில் பதிவு … Read more

மனைவி மீது தீராத காதல்.. 93 வயது முதியவருக்கு கிடைத்த இன்ப பரிசு

மும்பை, மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டம் அம்போரா ஜஹாகிர் கிராமத்தில் உள்ள ஒரு எளிய விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் நிவ்ருத்தி ஷிண்டே. இவருக்கு 93 வயது ஆகிறது. இவரது மனைவி சாந்தாபாய். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இருப்பினும் வயதான தம்பதி தனித்தே தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள். முதுமையை அடைந்தாலும் நிவ்ருத்தி ஷிண்டேவுக்கு தனது மனைவி மீதான காதலின் வயது மட்டும் இளமையாகவே இருந்தது. சமீபத்தில் இவர் தனது மனைவிக்கு ஒரு அன்பு பரிசு வழங்க விரும்பி … Read more

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: கில் எந்த வரிசையில் களமிறங்குவார் ?

லண்டன், இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா – இங்கிலாந்து மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை லீட்சில் தொடங்குகிறது.டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் ஓய்வுக்குப்பின் இந்திய அணி விளையாடும் முதல் தொடர் இது என்பதால் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது. சுப்மன் கில்லின் தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் எப்படி விளையாடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு … Read more

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீருடனான சந்திப்பு குறித்து டிரம்ப் கூறியது என்ன..?

வாஷிங்டன், டிசி பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீருடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறுகையில், “நான் அவரை இங்கு அழைத்ததற்கு காரணம், போரில் ஈடுபடாமல் அதை முடிவுக்குக் கொண்டுவந்ததற்கு அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்பினேன்… பிரதமர் மோடி சற்று முன்புதான் வெளியேறினார், நாங்கள் இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளோம்… நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மிகவும் புத்திசாலிகள் இருவரும் போரைத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்தனர். அவர்கள் இரண்டு … Read more

வழிப்பறி செய்து இளைஞரை தள்ளிவிட்டு கொலை செய்தவருக்கு சிறை தண்டனை: ஆய்வாளருக்கு ஆணையர் பாராட்டு

சென்னை: பணத்தை பறித்ததோடு, அரசுப் பேருந்தில் தள்ளிவிட்டு இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வழிப்பறி கொள்ளையனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுக் கொடுத்த காவல் ஆய்வாளரை, காவல் ஆணையர் அருண் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார். எழும்பூர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஓட்டல் கேட்டின் முன்பு கடந்த 2018 அக்டோபர் 14-ம் தேதி சாலையில் 25 வயது இளைஞர் ஒருவர் நடந்து சென்றார். அப்போது, அவரை வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் வழிமறித்து தாக்கி அவரின் … Read more

‘இந்தியா – பாக். போரை நிறுத்தியது யார்?’ – பிரதமர் மோடியை சாடிய ப.சிதம்பரம்

புதுடெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது யார் என எக்ஸ் தளத்தில் வினவியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்க நாடு எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி அண்மையில் தொலைபேசி உரையாடலில் தெளிவுப்படுத்தி இருந்தார். இதன் பின்னர் ‘போரை நிறுத்தியது நான்தான்’ என ட்ரம்ப் கூறி இருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த … Read more

தக் லைஃப் பட ரிலீஸின் போது பாதுகாப்பு வழங்கப்படும்-கர்நாடக அரசு அறிவிப்பு!

Karnataka Government Security For Thug Life Release : கமல்ஹாசன் நடிப்பில் உருவான தக் லைஃப் படம் வெளியானால் பாதுகாப்பு வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

அதிமுகவோடு கூட்டணி சேர்வதில் பிரச்னையில்லை – திருமாவளவன் பேச்சு!

அதிமுகவோடு  கூட்டணி சேர்வதில் பிரச்னையில்லை. ஆனால் அதிமுக வோடு பிஜேபி இருப்பதால் சேர முடியவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் மதுரையில் பேசியுள்ளார்.

ராமாபுரம் விபத்து: மெட்ரோ பணிகளை மேற்கொண்டு வரும் L&T நிறுவனத்திற்கு 1 கோடி அபராதம்….

சென்னை: ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், கவனக்குறைவாக பணி செய்த  L&T நிறுவனத்திற்கு  மெட்ரோ ரயில்நிர்வாகம் ரூ. 1 கோடி அபராதம் விதித்துள்ளது. மேலும்,   கவனக்குறைவாக பணியாற்றிய 4 பொறியாளர்கள் மெட்ரோ திட்ட பணியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், ராமாபுரம்  பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது மவுண்ட்-பூனமல்லி சாலையில் உள்ள … Read more