பாக். பிரச்சினையில் இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்றதில்லை: ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி உறுதி

புது டெல்லி: பாகிஸ்தானுடனான பிரச்சினைகளில் இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொண்டதில்லை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்ற செய்தியை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி உறுதியாகத் தெரிவித்தார் என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார். கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் தொலைபேசியில் உரையாடினார். அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த உரையாடலின் போது, ​​இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து பிரதமர் மோடி … Read more

நாளுக்குநாள் தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் 585 பேர் உயிரிழப்பு; 1326 பேர் காயம்

தெஹ்ரான்: இஸ்ரேலிய தாக்குதல்கள் காரணமாக ஈரான் முழுவதும் 585 பேர் உயிரிழந்ததாகவும், 1,326 பேர் காயமடைந்ததாகவும் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுவரையிலான சேதங்களே அச்சத்தை ஏற்படுத்தும் நிலையில், 6-வது நாளான இன்று இஸ்ரேல் தனது தாக்குதலை இன்னும் அதி தீவிரமாக்கியுள்ளது. 585 பேர் உயிரிழப்பு: ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல்களால் ஈரான் முழுவதும் இதுவரை 585 பேர் உயிரிழந்ததாகவும், 1,326 பேர் காயமடைந்ததாகவும் வாஷிங்டனை மையமாக கொண்டு இயங்கும் மனித உரிமைகள் … Read more

ஜாக்கிரதை! இந்த பரிவர்த்தனைகளை முடிந்தவரை தவிர்க்கவும்! வருமான வரி நோட்டீஸ் வரலாம்!

இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்வதில் ஏதேனும் தவறுகள் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு வருமான வரி நோட்டீஸ் வரலாம். என்ன மாதிரியான பரிவர்த்தனைகளை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

சிம்பு X வெற்றிமாறன் படத்தின் டைட்டில் இதுதான்! லீக் ஆன தகவல்..

Silambarasan Vetrimaaran Movie Title : சிலம்பரசன்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் டைட்டில் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.  

ED வளையத்தில் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்

Bad News For Indian Cricketers: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறிந்துக்கொள்ளுவோம். யுவராஜ் சிங்கிடம் அமலாக்கத்துறை விசாரிக்கும் ஊடகங்களில் வரும் செய்திகளின்படி, அமலாக்க இயக்குநரகம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிடம் விசாரிக்க உள்ளது. இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பந்தய வலைத்தளங்களுடனான (Betting Websites) விளம்பர தொடர்புகள் காரணமாக யுவராஜ் விசாரிக்கப்படுகிறார்.  முன்னாள் சுழற்பந்து வீச்சாளரிடமும் ED … Read more

"நெல் ஜெயராமன் தன் மகனுக்கு என்ன செய்திருப்பாரோ அதை சிவகார்த்திகேயன் செய்கிறார்!"- இரா. சரவணன்

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பதில் முக்கியப் பங்காற்றியவர் நெல் ஜெயராமன். தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 2018-ம் ஆண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு, அவரின் மகன் சீனிவாசனின் படிப்புச் செலவுகளை சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொள்வதாகக் கூறியிருந்தார். நெல் ஜெயராமன் அதை இன்றுவரை அக்கறையுடனும் கவனத்துடனும் தொடர்ந்து வருகிறார் எஸ்.கே. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு சீனிவாசனை கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பிற்குச் சேர்த்திருக்கிறார். அன்பும் அக்கறையுமாக… சிவகார்த்திகேயன், நெல் ஜெயராமனின் குடும்பத்திற்கு செய்யும் உதவிகள் … Read more

மகள் கள்ளக்காதல்: ஒரே குடும்பத்தில் இரு குழந்தைகளுடன் இரு மூதாட்டிகள் உள்பட 4 பேர் தற்கொலை!

மதுரை; கணவரை பிரிந்தும், இரு குழந்தைகளை விட்டுவிட்டும்  கள்ளக்காதலனுடன்  மகள் சென்றதால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் தாயார் மற்றும் அவரின் தாயார் மற்றும் மகளின் இரு குழந்தைகளுடன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்  தற்கொலை செய்துகொண்டனர்.  இந்த சோக சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரங்கேறி உள்ளது. இரண்டு குழந்தைகளை பெற்ற மகள், திருமணம் மீறிய உறவு காரணமாக மற்றொருவருடன் வீட்டை விட்டு ஓடி போனதால் அவமானம் அடைந்த மூதாட்டிகள் இருவர், … Read more

2 வயது குழந்தைக்கு பேய் பிடித்ததாக பூஜை.. ரூ.28 லட்சம் மோசடி செய்த பெண் சாமியார்

பாகல்கோட்டை, கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் தேரதாலா கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி. இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் உடல் நலம் சரியாகவில்லை. இந்தநிலையில் லட்சுமியிடம் அவரது தோழி ஒருவர் மராட்டிய மாநிலம் கொல்லாபுராவை சேர்ந்த சீமா சாம்பவி என்ற பெண் சாமியாரை அறிமுகம் செய்து வைத்தார். 2 பேரும் செல்போனில் பேசி … Read more

கிளப் உலகக் கோப்பை கால்பந்து: செல்சி அணி வெற்றி

அட்லாண்டா, கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறும். நேற்று முன்தினம் 3 லீக் ஆட்டங்கள் நடந்தன. இதில் ‘டி’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்தை சேர்ந்த செல்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் லாஸ் ஏஞ்சல்ஸ் எப்.சி.யை … Read more

ஜி7 நாடுகள் கடும் எதிர்ப்பு: அணு ஆயுதம் தயாரிக்க ஈரானுக்கு மட்டும் தடை ஏன்..?

டெஹ்ரான், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வந்த மோதல் தற்போது முழு அளவிலான போராக வெடித்துள்ளது. இது மத்திய கிழக்கில் இருநாடுகளுக்கிடையே உருவாகும் சண்டைகளைப் போல அல்ல.. அதைவிட பலமடங்கு ஆபத்தான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் – ஈரான் இடையிலான இந்த போர் மத்திய கிழக்கில் மிகவும் பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. தற்போது வரை இருநாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொண்டிருக்கும் சூழலில் இதுவரை நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகியிருக்கின்றன. தற்போது வரை ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளில் கிட்டத்தட்ட … Read more