Modi : 'பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் மத்தியஸ்தம் எதுவும் இல்லை!' – ட்ரம்பிடமே கூறிய மோடி

“இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலில் அமெரிக்கா உடனான வர்த்தகத்தைக் காட்டி ‘நான் தான்’ மத்தியஸ்தம் செய்து வைத்தேன்” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இப்போது நடந்துகொண்டிருக்கும் இஸ்ரேல் – ஈரான் தாக்குதல் பதிவில், “இந்தியா, பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தியது போல…” என்று ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். இது இந்திய அரசுக்கு மிகுந்த நெருக்கடியை தந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் ட்ரம்பின் இந்தக் கூற்று குறித்து மத்திய அரசிடம் கேள்விகளை எழுப்பி வருகிறது. மத்திய வெளியுறவு செயலாளர் … Read more

பாஸ்போர்ட்டை எளிதாக பெற நடமாடும் வேன் சேவை: கிராமப்புற மக்கள் பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தல்

சென்னை: பொதுமக்கள் பாஸ்போர்ட் சேவைகளை எளிதாக பெறுவதற்காக, பாஸ்போர்ட் நடமாடும் வேன் சேவை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. தொலைத்தூர மற்றும் வசதி குறைந்த இடங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாஸ்போர்ட் சேவைகளை எளிதாக பெறுவதற்காக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில், பாஸ்போர்ட் நடமாடும் வேன் சேவை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இச்சேவையை மத்திய வெளியுறவுத்துறையின் கீழ் செயல்படும் பாஸ்போர்ட் சேவை திட்டத்தின் இணை செயலாளரும், தலைமை பாஸ்போர்ட் அதிகாரியுமான கே.ஜெ. ஸ்ரீனிவாசா தொடங்கி வைத்தார். விழாவுக்கு, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி … Read more

அகமதாபாத் விமான விபத்து இடிபாடுகளுக்கு இடையில் 100 பவுன் தங்க நகைகள் மீட்பு

அகம​தா​பாத்: அகமதாபாத்தில் விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் இடிபாடுகளுக்கு இடையிலிருந்து கிடைத்த 100 பவுனுக்கும் மேற்பட்ட தங்க நகைகள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அடுத்த சில நிமிடங்களில் அருகில் இருந்து பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடம் மீது மோதியது. இந்த விபத்தில் விமானம் வெடித்து சிதறியதில் அதில் பயணம் செய்தவர்கள், விடுதியில் இருந்த மாணவர்கள், பொதுமக்கள் என மொத்தம் 279 … Read more

‘இனி இரக்கத்துக்கு இடமில்லை’ – அமெரிக்கா, இஸ்ரேல் மிரட்டலுக்கு கமேனி எதிர்வினை

தெஹ்ரான்: ஈரான் – இஸ்ரேல் போர் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், “போர் தொடங்குகிறது. இனி ஸயோனிஸ்ட்டுகளுக்கு (யூதர்களின் தேசிய இயக்கத்துக்கு) இரக்கம் காட்ட முடியாது. அந்த பயங்கரவாத பிராந்தியத்துக்கு எதிராக நாம் பலத்துடன் இயங்க வேண்டும். சமரசத்துக்கு வாய்ப்பில்லை” என்று ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் மிரட்டல்களைத் தொடர்ந்து கமேனி இவ்வாறு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இதே மிரட்டலை ஆங்கிலம், ஃபார்ஸியில் வெளியிட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, … Read more

குவாட் மாநாடு 2025: பிரதமர் மோடி அழைப்பு.. இந்தியா வருகிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப்

President Donald Trump India Visit: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டு இந்தியா வருகை தர உள்ளார். இந்தியாவில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டிற்கான பிரதமர் மோடியின் அழைப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்றுக்கொண்டார். 

Arya: நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி ரெய்டு?; பரவும் தகவல் உண்மையா? – ஆர்யா சொல்வதென்ன?

ஆர்யா நடித்திருக்கும் ‘Mr.X’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதைத் தாண்டி, பா. இரஞ்சித் இயக்கத்தில் ‘வேட்டுவம்’ படத்திலும், ‘ஆனந்தன் காடு’ படத்திலும் ஆர்யா நடித்து வருகிறார். சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் தயாரிப்பாளரும் ஆர்யாதான். சினிமா நடிகர்கள் பலர் தற்போது பிசினஸ் பக்கமும் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். Arya அப்படி, நடிகர் ஆர்யா சென்னையில் ‘சீ ஷெல்’ என்ற உணவகத்தின் கிளைகளை நடத்தி வந்ததாகத் தகவல் பேசபட்டது. அண்ணா நகர், … Read more

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: பாலிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு U-டர்ன் அடித்தது…

டெல்லியில் இருந்து பாலிக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா AI2145 விமானம், பாலி விமான நிலையத்திற்கு அருகில் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டதாக வந்த தகவலை அடுத்து மீண்டும் டெல்லிக்கு திரும்பி பாதுகாப்பாக தரையிறங்கியது. இந்தோனேசிய தீவுகளின் கிழக்கில் எரிமலை வெடித்ததில், வானத்தில் 10 கி.மீ உயரத்திற்கு கோபுரம் போல் சாம்பல் படர்ந்தது, இதனால் இந்தோனேசிய ரிசார்ட் தீவான பாலிக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்கள், இன்று (ஜூன் 18) ரத்து செய்யப்பட்டன. கிழக்கு சுற்றுலாத் தீவான … Read more

ஜார்கண்ட்: நக்சல் ஒழிப்பு பணியில் மரணம் அடைந்த வீரர் குடும்பத்துக்கு ரூ.1.2 கோடி இழப்பீடு

ராஞ்சி, ஜார்கண்டில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், ஜார்கண்ட் மற்றும் அண்டை மாநிலங்களில் ஒன்றான சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜார்கண்டில் நக்சல் ஒழிப்பு பணியில் ஈடுபட்ட வீரர் சுனில் தான் என்பவர் பணியின்போது, மரணம் அடைந்துள்ளார். அவருடைய குடும்பத்தினரை, முதல்-மந்திரி சோரன் இன்று நேரில் அழைத்து, பேசி ஆறுதல் கூறினார். இந்த கூட்டத்தில் காவல் துறையினர் மற்றும் … Read more

மகளிர் புரோ ஆக்கி லீக்: அர்ஜென்டினாவிடம் வீழ்ந்த இந்தியா

லண்டன், 9 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது பெண்கள் புரோ ஆக்கி லீக் தொடரில் லண்டனில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் பணிந்தது. இந்த தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். அர்ஜென்டினா அணியில் அகஸ்டினா கோர்சிலானி 3 கோலும் (40-வது, 54-வது மற்றும் 59-வது நிமிடங்களில்), விக்டோரியா பலாஸ்கோ (29-வது நிமிடம்) ஒரு கோலும் போட்டனர். இந்தியா தரப்பில் தீபிகா (30-வது நிமிடம்) ஆறுதல் … Read more

டெஹ்ரானில் இருந்து 3 லட்சம் பேர் வெளியேற வேண்டும் – எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் ராணுவம்

டெஹ்ரான், தங்களுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி, ஈரானுக்கு எதிராக கடந்த 13-ந் தேதி இ்ஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. ஈரான் அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதிலுக்கு இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டது. அலை அலையாக ஏவுகணைகள், டிரோன்கள் ஆகியவற்றை ஏவியது. இரு நாடுகளிடையே மோதல் தீவிரம் அடைந்திருப்பதால், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வசிக்கும் இந்தியர்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. … Read more