ஹரியானாவில் மாடல் அழகி சடலமாக மீட்பு

சண்டிகர்: ஹரியானாவில் கடந்த 14-ம் தேதி முதல் காணாமல்போன மாடல் அழகி ஷீத்தல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஹரியானா நாட்டுப்புற இசைத் துறையுடன் தொடர்புடைய மாடல் அழகி ஷீத்தல் என்கிற சிம்மி சவுத்ரி (23). இவரை கடந்த 14-ம் தேதி முதல் காணவில்லை என்று அவரது சகோதரி நேகா கடந்த ஞாயிற்றுக்கிழமை பானிபட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது நேகா, “14-ம் தேதி இரவு ஷீத்தல் என்னை தொலைபேசியில் அழைத்து, பானிபட்டை சேர்ந்த சுனில் என்ற முன்னாள் … Read more

பாதாள அறையில் தஞ்சமடைந்த கொமேனி

டெஹ்ரான்: இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமெனி (86) குடும்பத்துடன் பாதாள அறையில் தஞ்சமடைந்துள்ளார். கடந்த 13-ம் தேதி ஈரானின் பல்வேறு பகுதிகள் மீது இஸ்ரேல் விமானப் படை திடீர் தாக்குதலை நடத்தியது. இதில் ஈரானின் 4 அணு சக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. அந்த நாட்டின் 14 அணு சக்தி விஞ்ஞானிகள், 3 ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வருகிறது. … Read more

விமானிகளுக்கும் ஓய்வு வயது உண்டா? இந்த வயதுக்கு மேல் அனுமதி இல்லை!

உலகம் முழுவதும் விமான போக்குவரத்து முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் விமானிகள் மற்றும் பணிப்பெண்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

5 பந்துகளில் 5 விக்கெட்! விரைவில் இந்திய அணியில் இடம்பெறும் திக்வேஷ் ரதி?

Digvesh Rathi: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு இந்த ஆண்டு எதுவுமே நல்லதாக நடக்கவில்லை. 27 கோடிக்கு ரிஷப் பந்தை ஏலத்தில் எடுத்து இருந்தாலும், இரண்டு போட்டிகள் தவிர வேறு எந்த போட்டியிலும் அவர் ரன்கள் அடிக்கவில்லை. இதனால் லக்னோ அணி பிளேஆப் செல்லும் வாய்ப்பையும் தவறவிட்டது. இருப்பினும் சில வீரர்கள் இந்த ஆண்டு லக்னோ அணிக்காக சிறப்பாக விளையாடி உள்ளார். அவர்களில் ஒருவர் திக்வேஷ் ரதி. கிட்டத்தட்ட சுனில் நரேன் போன்ற பவுலிங் ஆக்சன் கொண்ட இவர் … Read more

15 நொடிகளில் யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை சேவை அறிமுகம்

டெல்லி யுபிஐ 15 நொடிகளில் பண பரிவர்த்தனை செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்படும் எண்ணிக்கை 1,868 கோடியாக உயர்ந்து இதன் மூலம் ரூ.25.14 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. இதுபரை பணப் பரிமாற்றம், நிலை சரிபார்ப்புகள், பணம் உரிய கணக்கிற்கு மாற்றுதல் உள்ளிட்ட பரிவர்த்தனைகள் 30 விநாடிகளில் நடந்தது. இனி 10 முதல் 15 வினாடிகளில் முடிக்கப்படும். நேற்று முதல் இந்த அதிவேக சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. … Read more

கடற்கரைக்கு காதலனுடன் வந்த கல்லூரி மாணவி.. 10 பேர் கும்பல் செய்த வெறிச்செயல்

புவனேஸ்வர், ஒடிசா மாநிலம் பெர்ஹம்பூரில் உள்ள கோபால்பூர் கடற்கரை சுற்றுலா தலமாக விளங்குகிறது. தற்போது, அங்கு நடந்து வரும் உள்ளூர் பண்டிகையையொட்டி அதிகளவில் மக்கள் கடற்கரைக்கு வந்து செல்கிறார்கள். இந்தநிலையில், அங்கு தங்கி படித்து வரும் கல்லூரி மாணவி ஒருவரும் தன்னுடன் அதே கல்லூரியில் படிக்கும் தனது காதனுடன் நேற்றுமுன்தினம் இரவு கடற்கரைக்கு சென்றார். இருவரும் தனிமையான இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு 10 பேர் கும்பல் வந்தனர். திடீரென அவர்கள் மாணவியின் … Read more

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியுடன் கம்பீர் இணைவது எப்போது..?

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. சமீபத்தில் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், புதிய கேப்டனாக 25 வயதான சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கிறார். கேப்டன்ஷிப்பில் போதிய அனுபவம் இல்லாத அவரது தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் எப்படி விளையாடப்போகிறது என்ற … Read more

ஈரான் அரசு வானொலி, தொலைக்காட்சி கட்டிடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் – பத்திரிகையாளர்கள் பலி

டெஹ்ரான் [ஈரான்], இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் நேற்று இரவு ஒரு கட்டிடத்திலிருந்து புகை கிளம்பும் புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டது, மேலும் அதன் அரசு வானொலி மற்றும் தொலைக்காட்சி கட்டிடம் தாக்கப்பட்டதாகவும், இதன் விளைவாக ஏராளமான ஈரானிய பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதள பதிவில் விவரங்களைப் பகிர்ந்து கொண்ட ஈரான் தூதரகம், இஸ்ரேலின் “குற்றச் செயல்” அனைத்து சர்வதேச விதிமுறைகளையும் மீறுவதாக கூறி உள்ளது. மேலும் தனது பதிவில், “சில நிமிடங்களுக்கு முன்பு, … Read more

நமக்குள்ளே…

குழந்தை பெற்றுக்கொள்ளும் இயந்திரங்களாக பெண்களை இந்தச் சமூகம் மாற்றி வைத்திருப்பதில் இருந்து விடுதலை பெற போராடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், ஆட்சி அதிகார மமதையில், மீண்டும் கற்காலத்துக்கே இந்த அரசியல்வாதிகள் இழுத்துச் செல்ல முயற்சி செய்வதுதான் கொடுமை! ஆந்திராவில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை. பெண் அரசு ஊழியர்களுக்கு இரண்டு குழந்தைகள் வரை மட்டுமே மகப்பேறு விடுமுறை என்கிற கட்டுப்பாடுகளையெல்லாம் நீக்கிவிட்டு, ‘எத்தனை குழந்தை பெற்றாலும் போட்டியிடலாம்; அத்தனை குழந்தைக்கும் மகப்பேறு விடுமுறை; … Read more

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பட்டாலியன் எஸ்.பி அருண் திடீர் ராஜினாமா

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பட்டாலியன் எஸ்பி திடீரென ராஜினாமா செய்தார். திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு சிறப்பு காவல்படையில் சூப்பிரண்டு அந்தஸ்தில் கமாண்டராக பணியாற்றி வந்தவர் அருண். இவர் பணியில் இருந்து விலகுவதாக கடந்த மார்ச் மாதம் ஆயுதப்படை பிரிவு கூடுதல் டிஜிபி ஜெயராமை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். அந்த கடிதத்தில் ‘எனக்கு வேலை பிடிக்கவில்லை. அதனால் விலகுகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. பணியிலிருந்து அருண் ராஜினாமா … Read more