நீலகிரியில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை, அவலாஞ்சியில் 292 மில்லி மீட்டர் மழை பதிவு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது அதிகபட்சமாக அவலாஞ்சியில் 292 மில்லி மீட்டர் மழை பதிவானது. கனமழை காரணமாக மாவட்டத்தில் 4 தாலுகாவிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில், சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த, 14 மற்றும் 15-ம் தேதிகள், ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பால், குந்தா, ஊட்டி, கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகா பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அந்தந்த பகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள், … Read more

ரூ.10 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்: பெங்களூருவில் ஆப்பிரிக்க பெண் கைது

பெங்களூரு: பெங்​களூரு​வில் உள்ள ராஜனு குண்டே அருகே ஆப்​பிரிக்க பெண் ஒரு​வர் போதைப் பொருள் விற்​பனை செய்​வ‌​தாக குற்​றப்​பிரிவு போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது. அதன் பேரில் போலீ​ஸார் நடத்​திய சோதனை​யில் ஆப்​பிரிக்க பெண் அகின்​வுமி பிரின்​சஸ் (25) எம்​டிஎம்ஏ எனப்​படும் போதைப் பொருளை வைத்​திருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இதையடுத்து போலீ​ஸார் அந்த பெண்​ணின் வீட்​டில் சோதனை நடத்​தினர். அப்​போது 5.32 கிலோ எம்​டிஎம்ஏ போதைப் பொருள் சிக்​கியது. இதையடுத்து அவரை கைது செய்​து, போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டனர். அதில், … Read more

இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் தீவிரம்: போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான்!

டெல் அவிவ்: இன்று (திங்கள்கிழமை) அதிகாலை இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதனால் இஸ்ரேல் முழுவதும் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்தன. இஸ்ரேலின் வடக்கு மற்றும் மையப் பகுதியில் ஏவுகணைகள் தாக்கியதில் 67 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானில் உள்ள அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவ மையங்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானும் இஸ்ரேலை கடுமையாக தாக்கி வருகிறது. இன்று (திங்கள்கிழமை) அதிகாலையும் ஈரான் பல … Read more

கேப்டன் விஜயகாந்த் வழியில் சின்ன கேப்டன் சண்முகபாண்டியன்!

‘கொம்புசீவி’ படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள், பிரியாணி வழங்கி உள்ளார் படத்தின் கதாநாயகன் சண்முகபாண்டியன்.

நீர்நிலை புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களை தனியார் பெயரில் பதிவு செய்வதை தடுக்க புதிய வழிமுறைகள்! பதிவுத்துறை நடவடிக்கை…

சென்னை:  நீர்நிலை புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களை போன்ற அரசுக்கு சொந்தமான  நிலங்களை தனியார் பெயரில் பதிவு செய்வதை தடுக்க புதிய வழிமுறைகளை தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை மேற்கொண்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசு நிலங்கள், நீர் நிலைகள் போன்றவை ஆட்சியர்கள் அலுவலகம் உள்பட பல்வேறு அரசு  அலுவலகங்க ளுக்காக அரசே ஆக்கிரமிப்பு செய்துகிறது. மற்றொருபுறம், தனியார்களும் அரசு நிலங்களை அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமித்து செய்து வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை நீதிமன்றம் பல … Read more

மராட்டியத்தில் மழைக்கு 8 பேர் பலி

மும்பை, மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மே மாதமே தொடங்கியது. தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களில் மாநிலத்தில் மழைக்கு 8 பேர் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்து உள்ளது. குறிப்பாக மின்னல் தாக்கி அதிகளவில் உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக மாநில பேரிடர் மீட்பு படையினர் கூறியுள்ளனர். இதுதவிர மழை காரணமாக 10 பேர் காயமடைந்து உள்ளனர். இதுகுறித்து மாநில பேரிடர் மீட்பு படை அதிகாரி ஒருவர் கூறுகையில், … Read more

சச்சின் ரதி அசத்தல் பந்துவீச்சு.. சேலம் 126 ரன்கள் சேர்ப்பு

சேலம், டி.என்.பி.எல். தொடரில் இன்றிரவு 7.15 மணிக்கு தொடங்கிய 2-வது ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேலம் அணி ஆரம்பம் முதலே நெல்லை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஆன அபிஷேக் 12 ரன்களிலும், அவரை தொடர்ந்து களமிறங்கிய ராஜேந்திரன் விவேக் டக் அவுட்டிலும், நிதிஷ் … Read more

இந்தியா -பாக் போல இஸ்ரேல் – ஈரான் போரை நிறுத்த வேண்டும் – டிரம்ப்

வாஷிங்டன், மத்திய கிழக்கில் எலியும், பூனையுமாக இருக்கும் ஈரானும், இஸ்ரேலும் பரஸ்பரம் ராணுவ மோதலில் ஈடுபட்டு உள்ளன. தங்களுக்கு எதிராக ஈரான், அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக குற்றம் சாட்டி, கடந்த 13-ந்தேதி அதிகாலையில் அந்த நாடு மீது இஸ்ரேல் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதலை தொடுத்தது. ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் தொடங்கிய இந்த ராணுவ நடவடிக்கை, தங்களை தற்காத்துக்கொள்ள நடத்தப்படும் முன்கூட்டிய தாக்குதல் என இஸ்ரேல் அறிவித்தது. அதன்படி ஈரானின் அணு … Read more

Ahmedabad plane crash: ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் – சாவின் விளிம்புவரை சென்று உயிர் தப்பிய 7 பேர்

அகமதாபாத் விமான விபத்தில் 274 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இக்கொடூரமான விபத்தில் 7 பேர் கடைசி நேரத்தில் தங்களது பயணத்தை ரத்து செய்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கின்றனர். தாய் வைத்த அன்பு கோரிக்கை ஏமன் வியாஸ் என்பவர் லண்டனில் இரண்டு ஆண்டுகளாக வேலை செய்துவிட்டு விடுமுறைக்காக வதோதராவிற்கு வந்திருந்தார். அவர் விடுமுறை முடிந்து 12ம் தேதி லண்டன் புறப்பட அகமதாபாத் விமான நிலையம் கிளம்பி வந்தார். விமான நிலையத்தில் அவரை வழியனுப்பி வைக்க அவரது தாயாரும் … Read more

சுகாதா​ரத்துறை அமைச்சர் மாற்றி பேசுகிறார்: சட்டப்போராட்ட குழு தலைவர் குற்றச்சாட்டு

சென்னை: அரசு மருத்துவர்கள் கோரிக்கை பாதயாத்திரை நடத்தும் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மாற்றி மாற்றி பேசுவதாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்றில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவி திவ்யாவுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை தரும் விவகாரத்தில், கரோனா பேரிடரில் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கி உள்ள நிலையில், … Read more