குரூப்-1, 1 ஏ தேர்வு முடிவுகள் இரண்டு மாதங்களில் வெளியிடப்படும்! டி.என்.பி.எஸ்.சி தலைவர் தகவல்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜூன் 15)  குரூப்-1, 1 ஏ தேர்வுகள் நடைபெற்ற நிலையில், இதன் முடிவுகள் அடுத்த இரண்டு மாதங்களில் வெளியிடப்படும் என  டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர்  தெரிவித்து உள்ளார். இன்று நாடு முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பிரபாகர், “சென்னையில் ஏறத்தாழ 170 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. 72 பணிகளுக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது. … Read more

'தெய்வத்தின் குரல் 8 – ம் பாகம்' உள்ளிட்ட 5 நூல்கள் வெளியீடு- மகாபெரியவர் பக்தர்கள் மகிழ்ச்சி!

நடமாடும் தெய்வமாக இந்த மண்ணுலகில் வாழ்ந்த காலத்தில் மகாபெரியவர் ஆற்றிய அருளுரைகளின் தொகுப்பே, ‘தெய்வத்தின் குரல்.’ 7 தொகுதிகளாக வெளியான இந்த நூல்களை தொகுத்து நமக்கு அளித்தவர் ரா. கணபதி என்னும் தமிழறிஞர். கல்கி முதலான புகழ்பெற்ற இதழ்களில் பணியாற்றிய ரா.கணபதி, தன் வாழ்வில் 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் என்றாலும் தெய்வத்தின் குரல் அவரின் மாபெரும் தொண்டாகக் கருதப்படுகிறது. மகாப்பெரியவரின் அனுமதியோடு இவர் இந்தப் பணியைச்செய்தார். அவர் வாழ்ந்த காலத்தில் 7 தொகுதிகளும் வெளியாயின. … Read more

‘தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான்; எல்லா நாளும் வணங்குவோம்’ – அன்புமணி

சென்னை: உலக தந்தையர் தினம் இன்று (ஜுன். 15) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள வாழ்த்துச் செய்தி கவனம் பெற்றுள்ளது. கடந்த சில மாதங்களாகவே ராமதாஸுக்கும் – அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவிவரும் நிலையில் உலக தந்தையர் தினத்தில் அன்புமணி பகிர்ந்த பதிவில் “தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான்; எல்லா நாளும் வணங்குவோம்” என்று குறிப்பிட்டுள்ளார். அன்புமணி தனது எக்ஸ் பக்க பதிவில், “தந்தையர் எப்போதும் … Read more

“விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை நாங்கள் பராமரிக்கவில்லை” – துருக்கி நிறுவனம்

புது டெல்லி: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் போயிங் விமானத்தை துருக்கி நிறுவனம் பராமரித்ததில் சதி இருக்கலாம் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக, அகமதாபாத் கிளம்பி வந்த துருக்கி நாட்டுக் குழுவினர் சம்பந்தப்பட்ட போயிங் விமானத்தை தாங்கள் பராமரிக்கவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர். அகமதாபாத் விமான விபத்தில் அதில் பயணித்த 241 பேர் உள்பட 270 பேர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான இந்த போயிங் விமானம் துருக்கி நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டதாக சில குற்றச்சாட்டுக்கள் சமீபத்தில் எழுந்தன. இப்பிரச்சனையில், போயிங்கின் … Read more

உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்து: 7 பேர் பலி – 6 வாரங்களில் இது 5வது விபத்து

Kedarnath Plane Crash: உத்தரகாண்டில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் விமானி உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆறு வாரத்தில் இது 5வது விபத்தாகும். 

இளைஞர்களுக்கு குட் நியூஸ்! தமிழ்நாடு அரசு வெளியிட்ட மிகப்பெரிய இலவச அறிவிப்பு

Tamilnadu government : தமிழ்நாடு அரசின் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

கடத்தல் புகார்: ஜெகன்மூர்த்தி உள்பட புரட்சி பாரதம் கட்சி தொண்டர்கள் கைது?

சென்னை:  சிறுவனை கடத்தியதாக புகாரின் பேரில்,  புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி யை போலீசார்  நேற்று (ஜுன் 14ந்தேதி) கைது செய்ய சென்ற நிலையில், அவரது கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மேலும் போலீசார் குவிக்கப்பட்ட நிலையில்,  அவரது கட்சி தொண்டர்களும் சாரை சாரையாக வந்து போராட்டதால் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து,  இன்று போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சி பாரம் கட்சி … Read more

டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

சேலம், டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் சேலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 11-வது ஆட்டத்தில் மதுரை – திண்டுக்கல் அணிகள் இன்று மோதின. இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் திண்டுக்கல் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது. திண்டுக்கல் அணியின் அபார பந்துவீச்சால் மதுரை அணி ரன்கள் குவிக்க திணறியது. அத்துடன், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 … Read more

Israel – Iran Conflict: ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல்; அதிகரிக்கும் பதற்றம்!

ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், மத்திய கிழக்குப் பகுதியில் போர்ப் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆபரேஷன் ரைசிங் லயன் (Operation Rising Lion) எனும் ராணுவ நடவடிக்கை மூலம், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் ராணுவ தளவாடங்கள், ராணுவ அலுவலகங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13 ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் – ஈரான் தாக்குதல் இந்நிலையில் இன்று மீண்டும் ஈரானில் உள்ள எரிசக்தி … Read more

மாநிலங்களவை எம்.பி ஆகியுள்ள நிலையில் கமல்ஹாசனுக்கு கட்சி நிர்வாகிகள் நேரில் வாழ்த்து

மாநிலங்களவை எம்.பி ஆகியுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கட்சி நிர்வாகிகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். மநீம தலைவர் கமல்ஹாசன் திமுக கூட்டணியின் ஆதரவுடன் மாநிலங்களவை எம்.பி.யாகத் தேரவுசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு கமல்ஹாசன் நேற்று காலை வருகை தந்தார். அவருக்கு பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளை கமல்ஹாசன் சந்தித்தார். நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், மண்டல … Read more