தமிழ்நாட்டில் மேலும், 25மாவட்ட மருத்துவமனைகள், 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் விரைவில் திறப்பு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில்  உள்ள 19 மாவட்டங்களில் விரைவில் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள்,  25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் திறக்கப்பட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில், மகப்பேறு மயக்கவியல் தர மேம்பாட்டிற்கான மருத்துவ பயிலரங்கத்தினை தொடங்கி வைத்து, மயக்கவியல் துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி உரையாற்றிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்  கூறியதாவது, மக்கள் நல்வாழ்வுத்துறையில் தொடர்ந்து மகப்பேறு காலங்களில் தாய்மார்கள் மரணங்களை குறைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் … Read more

விமான விபத்து பற்றி முன்கூட்டியே கணித்த சாமியார்; சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

பெலகாவி, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நேற்று முன்தினம் 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் திடீரென்று அருகில் உள்ள மருத்துவக்கல்லூரி கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானி உள்பட 241 பேர் உடல் கருகி பலியானார்கள். விஸ்வாஸ்குமார் ரமேஷ் என்கிற பயணி மட்டும் அதிசயமாக உயிர் தப்பினார். மேலும் விமானம் மருத்துவக்கல்லூரி கட்டிடத்தின் மீது விழுந்ததில் 10-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றி உருக்கமான … Read more

கேட்ச் பிடிக்க முயன்றபோது ஸ்டீவ் ஸ்மித்திற்கு காயம்

லண்டன், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையே உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்துள்ளது. தென் ஆப்பிக்கா வெற்றிபெற இன்னும் 162 ரன்கள் எடுக்க வேண்டும். ஆஸ்திரேலியா வெற்றிபெற இன்னும் 8 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். இந்நிலையில், இப்போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர் … Read more

வடகொரியாவில் அணு ஆயுத கப்பலின் 2-வது கட்ட சோதனை

பியாங்க்யாங், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத சோதனை மூலம் வடகொரியா அவ்வப்போது பதற்றத்தை தூண்டுகிறது. எனவே அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்க வடகொரியாவுக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக வடகொரியா அணு ஆயுத கப்பலை உருவாக்கியது. 5 ஆயிரம் டன் எடை கொண்ட இந்த கப்பலின் சோதனை முயற்சி கடந்த மாதம் 21-ந்தேதி நடைபெற்றது. அப்போது சாய்வில் இருந்து வழுக்கியதால் கப்பல் சேதமடைந்தது. இதனால் … Read more

`திருமாவளவன் பேரணியில் ஹெலிகாப்டரில் பூ தூவ அனுமதி மறுப்பு' – காவல்துறை சொன்ன காரணம்

திருச்சி மாநகரில் இன்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக, ‘மதசார்பின்மை காப்போம்’ என்ற தலைப்பில் பிரம்மாண்ட பேரணி நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் இருந்து திருச்சி மாநகராட்சி அலுவலகம் வரை இந்த பேரணிக்கு மாநகர காவல் துறை அனுமதி கொடுத்துள்ளது. அதேநேரம், பொது மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் இந்த பேரணியை நடத்த வேண்டும். சாலையின் குறுக்கே மேடை அமைத்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கிடையாது. வேண்டுமானால் சிறிய … Read more

பாமக எம்எல்ஏக்களுக்கு வலை..? – போட்டி போட்டு ஆட்களை இழுக்கும் திமுக – தவாக!

பாமக-வில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் அதிகார யுத்தம் நாளுக்கு நாள் வீரியமாகிக் கொண்டே போகிறது. ராமதாஸையும் அன்புமணியையும் சமாதானப்படுத்த பாஜக தரப்பில் ஆடிட்டர் குருமூர்த்தி மூலமாக எடுக்கப்பட்ட முயற்சிகளும் பலனளிக்காத நிலையில், முக்கிய நிர்வாகிகள் உள்பட 45 பேரை பொறுப்புகளில் இருந்து நீக்கினார் ராமதாஸ். அவர்களில் சிலரை மீண்டும் பொறுப்பில் அமர்த்தி அதிரடி காட்டினார் அன்புமணி. கட்சிக்குள் நடக்கும் இந்த ஏட்டிக்குப் போட்டிகளை எல்லாம் பார்த்துவிட்டு, கீழ்மட்ட நிர்வாகிகள் பலரும் மாற்றுக் கட்சி முகாம்களுக்கு தூதுவிட … Read more

அகமதாபாத்: விபத்தில் சிக்கிய விமானத்தின் வீடியோ ரெக்கார்டர் மீட்பு

அகமதாபாத்: அகமதாபாத்தில் நேற்று முன்தினம் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் டிஜிட்டல் வீடியோ ரிக்கார்டர் (டிவிஆர்) சாத னத்தை குஜராத் தீவிர வாத தடுப்புப் பிரிவினர் நேற்று மீட்டனர். அனைத்து விமானங்களிலும் டிஜிட்டல் வீடியோ ரிக்கார்டர் என்ற சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் போன்று இருக்கும் இந்த சாதனத்தில், விமானத்தின் செயல்பாடு, பயணிகள் இருக்கும் பகுதி, விமானத்தின் வெளிப்புற பகுதி ஆகியவற்றின் வீடியோ காட்சிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பதிவாகும். விமான விபத்து நடந்த இடத்தில், … Read more

Vijay Sethupathi: " `வாத்தியார்' கதாபாத்திரம்… பெரிய வரமா நினைக்கிறேன்!" – நெகிழும் விஜய் சேதுபதி

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள். மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வெளியான படைப்புகளில் ஜொலித்திருந்தனர். அப்படியான கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெறும். அந்த வரிசையில், கடந்த 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் சென்னையில் நடைபெற்றது. 2024 ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை மகாராஜா, … Read more

போஸ்ட்பெய்ட் சிம் முதல் ப்ரீபெய்ட் சிம் மாற்றம்: OTP மூலம் மாற்றுவது எப்படி?

Telecom Department News : டெலிகாம் துறை (Telecom Department) ப்ரீபெய்ட் முதல் போஸ்ட்பெய்ட் (Prepaid to Postpaid) மற்றும் போஸ்ட்பெய்ட் முதல் ப்ரீபெய்ட் (Postpaid to Prepaid) சிம் மாற்றத்திற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இப்போது, OTP (One-Time Password) மூலம் உங்கள் மொபைல் கனெக்ஷனை எளிதாக மாற்றலாம். இப்போது வந்திருக்கும் அப்டேட் மொபைல் யூசர்களுக்கு மிக மிக சிம்பிளான செட்டிங்ஸ் ஆகும்.  OTP-அடிப்படையிலான மாற்றம் டெலிகாம் சேவை வழங்குநர்கள் Airtel, Jio, Vi போன்றவை … Read more

நாளை நடைபெறுகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு!

சென்னை: தமிழ்நாட்டில்  டிஎன்பிஎஸ்சி குரூப்1 தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் சுமார்  2.27 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளை … Read more