வெப்பத்தில் தகிக்கும் டெல்லி; சிவப்பு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்

புதுடெல்லி, – தலைநகர் டெல்லி வெப்பத்தில் தகித்துக் கொண்டிருக்கிறது. வெயில் அதிகபட்சமாக 113 டிகிரி வரை சென்றிருக்கிறது. ஆனாலும் காற்றின் ஈரப்பதம் காரணமாக அது 125 டிகிரியை உணர வைக்கிறது. இரவில்கூட பகல் போன்ற வெப்ப சூழலே தென்படுகிறது. ஏ.சி. பயன்படுத்தினாலும் பெரிய அளவில் இதம் இல்லை. ஏ.சி. வசதி இல்லாத மக்களின் நிலைமை பரிதாபமாகவே தெரிகிறது. இந்த நிலையில் வெப்ப அலை காரணமாக டெல்லிக்கு நேற்று சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டது. இன்றும் (வெள்ளிக்கிழமை) எச்சரிக்கை … Read more

அயர்லாந்து – வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்

டப்ளின் , வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இந்த தொடரை முடித்து கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் இன்று தொடங்குகிறது.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்க இருந்தது. இந்த நிலையில், போட்டி நடைபெறும் பகுதியில் தற்போது மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் … Read more

இங்கிலாந்தில் பெண் பலாத்காரம்: தொடர் போராட்டத்தில் வன்முறை; 40 போலீசார் படுகாயம்

லண்டன், இங்கிலாந்தின் பாலிமெனா நகரில் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உறவினர்கள் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வெளிநாட்டைச் சேர்ந்த 3 சிறுவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே புலம்பெயர் தொழிலாளர்களின் வீடு, அலுவலகங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. இதனை கட்டுப்படுத்த முயன்றபோது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இதுவரை 40-க்கும் மேற்பட்ட … Read more

Operation Honeymoon: "சோனம் மீது சந்தேகம் வர இதான் காரணம்…" – மேகாலயா டிஜஜி சொல்வது என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்சியும், அவரது மனைவி சோனமும் கடந்த மாதம் 21ம் மேகாலயாவிற்குத் தேனிலவிற்குச் சென்றனர். சென்ற இடத்தில் அவர்கள் இருவரும் கடந்த 23ம் தேதி திடீரென காணாமல் போய்விட்டார்கள். அவர்களை போலீஸார் தேடி வந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் மலைப்பள்ளத்தாக்கில் ராஜா ரகுவன்சியின் உடல் மட்டும் மீட்கப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ராஜா ரகுவன்சியின் மனைவி சோனமும், அவரது காதலன் ராஜ் என்பவரும் சேர்ந்து கூலிப்படை அமைத்து இக்கொலையைச் செய்திருப்பது … Read more

மத்திய அரசு திட்டங்களை முடக்குவதையே தமிழக அரசு கடமையாக கொண்டுள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை: மத்திய அரசின் திட்டங்களை முடக்குவதையே தமிழக அரசு கடமையாக கொண்டுள்ளது என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டுகால ஆட்சியில் அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். பொது சிவில் சட்டம் மட்டும் நிலுவையில் உள்ளது. ஆனால், திமுக அளித்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 50 வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றவில்லை. பள்ளிகல்வித் துறை சார்ந்த மத்திய அரசின் திட்டத்தில் பயன்பெற ஒப்புதல் … Read more

பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

புதுடெல்லி: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று சந்தித்துப் பேசினார். தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போரில் பிரான்ஸ் ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி கூறினார். வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பெல்ஜியம், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஒருவார கால பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் இருந்து புறப்பட்டார். பஹல்காம் தீவிரவாத தாக்குலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஒரு வாரம் கடந்திருந்த சூழலில் அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். பயணத்தின் முதல் கட்டமாக … Read more

அகமதாபாத் விமான விபத்து : பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட முக்கிய செய்தி

Ahmedabad Plane Crash, PM Narendra Modi : அகமதாபாத் விமான விபத்து நடந்த பகுதிக்கு இன்று நேரில் செல்ல உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

பறந்து போ: "யுவன் ரசிகர்களிடம் இருந்து கெட்ட வார்த்தை மெசேஜ் வருது" – இயக்குநர் ராம்

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பறந்து போ’ திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. மிர்ச்சி சிவா, அஜூ வர்கீஸ், கிரேஸ் ஆண்டனி எனப் பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. Parandhu Po – Sunflower Song இயக்குநர் ராம், “யுவன் ரசிகர்களுக்கு ஒண்ணு சொல்லிக்கிறேன், தினமும் எனக்கு கெட்ட வார்த்தையில் மெசேஜ் வருது. இந்தப் படத்துக்கு யுவன்தான் இசையமைப்பதாக இருந்தது. அவருக்கு முன்பணமும் கொடுத்திருந்தோம். திடீர்னு மதன் … Read more

போக்குவரத்து நெரிசலால் 10 நிமட தாமதம் : விமான விபத்தில் இருந்து தப்பிய பெண்

அகமதாபாத் நேற்று போக்குவரத்து நெரிசலால் 10 நிமிட தாமதம் ஏற்பட்டதால் விமான விபத்தில் இருந்து ஒரு பெண் தப்பியுள்ளார் நேற்று நடந்த அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விமான விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய லண்டன் விமானத்தில் பூமி சவுகான் என்ற பெண் பயணம் செய்ய டிக்கெட் எடுத்திருந்தார். இதற்காக அவர் வாகனத்தில் தனது வீட்டில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் … Read more

நாளை அகமதாபாத் செல்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது. இதில், விமானத்தில் சென்றவர்களில் பயணி ஒருவரை தவிர மற்ற பயணிகள், ஊழியர்கள் என 241 பேரும் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்த பயணிகளில், குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் ஒருவர் ஆவார். அகமதாபாத்தின் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியிருக்கிறது. விமானம் விபத்து குறித்து பிரதமர் … Read more