உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: 138 ரன்னில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா

லார்ட்ஸ், ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக லபுஸ்சேன் மற்றும் கவாஜா களம் கண்டனர். இதில் கவாஜா ரன் எடுக்காமலும், லபுஸ்சேன் 17 ரன்னிலும், அடுத்து வந்த கேமரூன் கிரீன் 4 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் 11 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் … Read more

குஜராத் விமான விபத்து; உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் போயிங் 787-8 டிரீம்லைனர் விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர். விமானத்தில் இருந்த பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் இங்கிலாந்து நாட்டவர்கள், கனடாவை சேர்ந்தவர் ஒருவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர்கள் என ‘ஏர் … Read more

Kashmir: "தீவிரவாதத்தை எதிர்க்கப் பல்லாயிரம் ஆதில் ஷாக்கள் காஷ்மீரில் உண்டு'' – சு.வெங்கடேசன்

“தீவிரவாதத்தை உறுதியோடு எதிர் கொண்ட ஒரு ஆதில்ஷா மட்டுமல்ல, பல்லாயிரம் ஆதில்ஷாக்கள் காஷ்மீர் எங்கும் உண்டு” என்று அவர் தந்தை தங்களிடம் கூறியதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். காஷ்மீர் சென்ற சிபிஎம் குழுவினர் சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி தலைமையிலான குழு இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ளது. இக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அம்ரா ராம், கே.ராதாகிருஷ்ணன், ஜான் பிரிட்டாஸ், பிகாஸ் ரஞ்சன், ஏ.ஏ.ரஹீம் ஆகியோரோடு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் சென்றுள்ளார். ஜம்மு காஷ்மீர் … Read more

கல்லூரிகளில் ​ராகிங் கொடுமையை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்

தஞ்​சாவூர்: தமிழக உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன், தஞ்​சாவூரில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தஞ்​சாவூரில் வரும் 15-ம் தேதி பொது​மக்​கள் மற்​றும் கட்சி நிர்​வாகி​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சந்​தித்​துப் பேசுகிறார். தொடர்ந்​து, கருணாநிதி சிலை​யைத் திறந்து வைக்​கிறார். வரும் 16-ம் தேதி சரபோஜி அரசுக்கல்​லூரி மைதானத்​தில் நடை​பெறும் விழா​வில் 1.5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பயனாளி​களுக்கு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கு​கிறார். மேட்​டூர் அணை​யில் முதல்​வர் தண்​ணீர் திறந்​து​விட்​டுள்ள நிலை​யில், டெல்டா மாவட்​டங்​களில் விதை நெல், இடு​பொருட்​கள் ஆகியவை மானிய … Read more

தீ​விர​வாத நிதி உதவி வழக்கில் பிரி​வினை​வாத தலை​வருக்கு ஜாமீன் மறுப்பு

புதுடெல்லி: தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி செய்த வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. தீவிரவாதத்துக்கு நிதி உதவி செய்த வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷா கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போரை நடத்துவதற்கு சதி செய்ததாகவும், நிதி திரட்டியதாகவும் கூறி ஷபீர் ஷாவுக்கு எதிராக விசாரணை நீதிமன்றம் ஷாவுக்கு எதிராக … Read more

அகமதாபாத் விமான விபத்து : ’ காற்றில் கலந்த கனவுகள்’ மனதை உலுக்கும் விமான பயணிகளின் கதை

Ahmedabad plane crash : அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த விமான பயணிகளின் கதைகள், கனவுகள், குடும்ப பின்னணி மனதை உலுக்குகின்றன. 

அதிமுகவை அதிர வைத்த தமிழக சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து மோடிக்கு அணாணாமலை கடிதம்

சென்னை பிரதமர் மோடிக்கு தமிழக சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், :தமிழகத்தில் பாஜ- அதிமுக கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், கூட்டணி ஆட்சி அமையும் வகையில் அதிமுக 2 தொகுதியில் போட்டியிட்டால், பாஜ ஒரு இடத்தில் போட்டியிடவேண்டும் என்ற வகையில் தொகுதிகளை பிரிக்க வேண்டும்.  ஒரு சில சட்டமன்ற தேர்தலில் பாஜ 2ம் இடம் வந்தது. அதிமுக 3ம் இடத்திற்கு … Read more

தெலுங்கானாவில் கனமழை: மின்னல் தாக்கி 6 விவசாயிகள் பலி

நகரி, தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே காதிகூட மண்டலம் பிப்பிறி என்ற இடத்தில் விவசாயிகள் நேற்று தங்களது நிலங்களில் மக்காச்சோளம் விதைக்க தயாரானார்கள். 14 விவசாயிகள் இந்த பணியில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. உடனே அவர்கள் அருகில் இருந்த குடிசை அருகே மழைக்காக ஒதுங்கி நின்றனர். அப்போது மின்னல் தாக்கி 3 விவசாயிகள் உயிரிழந்தனர். இதே மாவட்டத்தில் வேலமண்டலத்தில் … Read more

அகமதாபாத் விமான விபத்து: விராட் கோலி வருத்தம்

அகமதாபாத், குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமானம் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. விமானத்தில் இருந்த 242 பயணிகளில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், அகமதாபாத் விமான விபத்து … Read more

எல்லையில் ஒலிபரப்பப்படும் வடகொரிய எதிர்ப்பு பிரசாரத்தை நிறுத்திய தென்கொரியா

சியோல், கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை நடத்துகிறது. இதனை தொடர்ந்து தென்கொரிய எல்லைக்குள் ராட்சத குப்பை பலூன்களையும் பறக்க விட்டு மேலும் பதற்றத்தை தூண்டியது. இதற்கு பதிலடியாக பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வடகொரிய எதிர்ப்பு பிரசாரத்தை கடந்த ஆண்டு தென்கொரியா மீண்டும் தொடங்கியது. அதாவது தென்கொரிய எல்லை பகுதியில் வடகொரிய எதிர்ப்பு பிரசாரம் ஒலிப்பெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டு வந்தது. இந்தநிலையில் தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங் வடகொரியா … Read more