விரைவில் ரயிலில் இருக்கை ஒதுக்கீடு குறித்து புதிய நடைமுறை அமல்

டெல்லி இந்திய ரயில்வே விரைவில் ரயிலில் இருக்கை ஒதுக்கீடு குறித்து புதிய நடைமுறையை அமலாக்க உள்ளது/ தற்போதுள்ள நடைமுறையின்படி,இந்திய ரயில்வேயில் ரயில் புறப்படுவதற்கு 4 மணிநேரத்திற்கு முன்னதாக உறுதிப்படுத்தப்பட்ட பயணிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.  தற்போது ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் பட்டியலை வெளியிடும் புதிய திட்டத்தை ரயில்வே நிர்வாகம் சோதனை அடிப்படையில் தொடங்கி உள்ளது. அதன்படி முதற்கட்டமாக, ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் இந்த திட்டத்தின் சோதனை நடைபெறுகிறது. அதில் ஏற்படும் … Read more

குஜராத் விமான விபத்தில் கேரளாவை சேர்ந்த செவிலியர் உயிரிழப்பு

காந்திநகர், இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் ‘போயிங் 787-8 டிரீம்லைனர்’ பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர். விமானத்தில் இருந்த பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் இங்கிலாந்து நாட்டவர்கள், கனடாவை சேர்ந்தவர் ஒருவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர்கள் என ‘ஏர் இந்தியா’ … Read more

தாய்லாந்து முன்னாள் பிரதமர் மரணம்

பாங்காங், தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் சுசிந்தா கிரப்ரயூன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. தலைநகர் பாங்காங்கில் 1933-ம் ஆண்டு அப்போதைய ராணுவ தளபதிக்கு கடைசி மகனாக சுசிந்தா கிரப்ரயூன் பிறந்தார். தொடர்ந்து தந்தையின் அடிச்சுவடுகளை பின்பற்றி சுசிந்தா கிரப்ரயூன் தாய்லாந்து ராணுவத்தில் 1953-ம் ஆண்டு கர்னலாக பதவியேற்றார். பின்னர் தன்னுடைய சீரிய முயற்சியாலும், ஆர்வ மிகுதியால் ராணுவத்தில் உயரிய பதவிகளை அவர் அலங்கரித்தார். 1990-ம் ஆண்டு ராணுவ தளபதியாக சுசிந்தா கிரப்ரயூன் பதவியேற்றார். இந்தநிலையில் … Read more

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர்: 12 மாவட்டங்களில் 17.32 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயனடையும்

மேட்டூர்: ​கா​விரி டெல்டா பாசனத்​துக்​காக, மேட்​டூர் அணையி​லிருந்து முதல்​வர் ஸ்டா​லின் நேற்று தண்​ணீரை திறந்து வைத்​தார். டெல்டா பாசனத்​துக்​காக மேட்​டூர் அணையி​லிருந்து ஜூன் 12-ல் தண்​ணீர் திறக்​கப்​படு​வது வழக்​கம். நடப்​பாண்டு அணை​யில் போதிய தண்​ணீர் இருப்பு உள்​ள​தால், அணையி​லிருந்து ஜூன் 12-ல் தண்​ணீர் திறக்​கப்​படும் என தமிழக அரசு அறி​வித்​திருந்​தது. இதன்​படி, மேட்​டூர் அணை​யில் இருந்து நேற்று காலை 9.45 மணி​யள​வில் டெல்டா பாசனத்​துக்கு மு.க.ஸ்​டா​லின் தண்​ணீரை திறந்​து​வைத்​து, அணையி​லிருந்து சீறிப்​பாய்ந்து வெளி​யேறிய நீரில் மலர்​களைத் தூவி​னார். … Read more

அகமதாபாத் விமான விபத்து: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல்

லாகூர்: அகமதாபாத்தில் இருந்து லண்டன் நகருக்கு இன்று புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இதில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். “அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியதை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன” என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். நடந்தது என்ன? – … Read more

அகமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து வெளியான தகவல்!

Ahmedabad Plane Crash Total Death: அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோது ஏற்பட்ட விமான விபத்தில் இதுவரை 170 பேர் இறந்தனர் என தகவல் வெளியாகி இருக்கிறது.

அகமதாபாத் விமான விபத்து: அவசரகால அழைப்பான ‘MAYDAY‘ அழைப்பு புறக்கணிப்பு?.. விமானம் விபத்து வீடியோ…

அகதாபாத்: அகமதாபாத் விமான விபத்து நடப்பதற்கு சற்று முன்பாக,  விமானி அவசரகால அழைப்பான ‘MAYDAY‘ அழைப்பு  விடுக்கப்பட்ட நிலையில்,  அது புறக்கணிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் விமானம் மேலே எழும்பும்போது,  வீடுகளின்மீது மோதி விபத்துக்குள்ளாகும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 242 பயணிகளுடன சென்ற ஏர் இந்தியா விமானம் குஜராத் மாநிலத்தில் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. , இன்று பிற்பகல் 1.17 மணியளவில், 230 பயணிகள் மற்றும் 12 ஊழியர்கள் என, 242 பேருடன் அகமதாபாத் சர்வதேச … Read more

Ahmedabad Plane Crash: "அந்த ஒருவரைப் பார்த்தேன்; உடல்களை மீட்கும் பணி முடிந்துவிட்டது" – அமித் ஷா

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 1:38 மணிக்கு லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில் மருத்துவ மாணவர்கள் விடுதியின் மீது விமானம் மோதி இந்த விபத்து ஏற்பட்டது. ஏர் இந்தியாவின் கூற்றின்படி இந்த விமானத்தில், 169 இந்தியப் பயணிகள், 61 வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் 2 பைலட்டுகள், விமானப் பணியாளர்கள் 10 பேர் என … Read more

தமிழகத்தில் இன்று முதல் 18-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 14, 15-ம் தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு ஆந்திரா–தெற்கு ஒடிசா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூன் … Read more

உலகையே உலுக்கிய பெரும் சோகம்: குஜராத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழப்பு – முழு விவரம்

அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச … Read more