“குறை சொல்லப் போவதில்லை; ஆனால்…” – மஸ்க் வருத்தம் தெரிவித்த நிலையில் ட்ரம்ப் கருத்து!

வாஷிங்டன்: “மஸ்க் வருத்தம் தெரிவித்திருப்பது நன்று. அவர் மீது நான் எந்தக் குறையும் சொல்லப்போவதில்லை. ஆனால் நான் சற்று ஏமாற்றமடைந்தேன்.” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சரியாக ஒருவார காலத்துக்கு முன் பரஸ்பரம் விமர்சனங்களைத் தெறிக்கவிட்ட ட்ரம்ப் – மஸ்க் தற்போது ஆவேசம் தனிந்த கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். ஏற்கெனவே ட்ரம்ப் – மஸ்க் மோதலில் வார்த்தைகள் தடித்தபோது, பள்ளிக் குழந்தைகள் மோதலைப் போல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், … Read more

அதர்வா நடிக்கும் 'டிஎன்ஏ' (DNA)! மாஸாக வெளியான ட்ரைலர்!

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும்’ டி என் ஏ’ ( DNA)  திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

DIGIPIN: டிஜிட்டல் வடிவம் பெறும் PINCODE…. உங்கள் இடத்தின் டிஜிட்டல் குறியீடு என்ன?

DigiPIN: அஞ்சல் துறை, டிஜிபின் என்ற புதிய டிஜிட்டல் முகவரி அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐஐடி ஹைதராபாத் மற்றும் இஸ்ரோவின் தேசிய தொலைதூர உணர்திறன் மையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த புவியியல் கண்டுபிடிப்பு, புவியியல் இருப்பிடங்களின் துல்லியமான மற்றும் தனித்துவமான அடையாளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் அஞ்சல் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதில் ஒரு முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகின்றது. இந்த அமைப்பு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடங்களுக்கு 10-எழுத்துகள் கொண்ட எண்ணெழுத்து குறியீட்டை ஒதுக்குகிறது. இது 1972 முதல் பயன்பாட்டில் … Read more

ஜாதி சான்றிதழ்களில் ‘இந்து’ நீக்கம் செய்யப்படுவது சந்தேகத்திற்குரியது! பாஜக கடும் கண்டனம்…

சென்னை: தமிழ்நாட்டில் சமீப காலமாக வழங்கப்படும்  ஜாதி சான்றிதழ்களில் ‘இந்து’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டாலின் தலைமையிலான  திமு கஅரசு இந்து மத அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை பாஜக எம்எல்ஏ  வானதி சீனிவாசன் கடுமையாக சாடியுள்ளார். தமிழ்நாட்டில் “பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் ‘இந்து’ என்ற பெயரை நீக்குவது தி.மு.க அரசின், இந்து மத அழிப்பு நடவடிக்கையாகவே … Read more

டிஎன்பிஎல் – கோவையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த மதுரை

கோவை, 9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் – சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற மதுரை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து கோவை அணியின் தொடக்க வீரர்களாக ஜிதேந்திர குமார் மற்றும் சுரேஷ் லோகேஷ்வர் ஆகியோர் களம் … Read more

Doctor Vikatan: பணியிடத்தில் அடிக்கடி கொட்டாவி, நன்றாகத் தூங்கினாலும் தொடர்வது ஏன்?

Doctor Vikatan: அலுவலகத்தில் இருக்கும்போது அடிக்கடி கொட்டாவி வருகிறது.  அடிக்கடி தண்ணீர் குடிப்பது, இரவு 8 மணி நேரம் தூங்குவது உள்ளிட்ட விஷயங்கள் சரியாக இருந்தாலும், கொட்டாவி வந்து கொண்டே இருக்கிறது… என்ன காரணமாக இருக்கும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி முதலில் கொட்டாவி என்பது என்ன என்பதைப் புரிந்துகொள்வோம். அது வாய்வழியே ஆழ்ந்து சுவாசிப்பது போன்றது. அதாவது  வாய்வழியே கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றிவிட்டு, … Read more

நக​ராட்சி நிர்​வாக துறை சார்​பில் ரூ.975 கோடி மதிப்​பிலான திட்​​டங்​களுக்கு துணை முதல்​வர் உதயநிதி அடிக்​கல்

சென்னை: நகராட்சி நிர்வாக துறை சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரூ.399.81 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 102 திட்ட பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.975.63 கோடி மதிப்பீட்டில் 108 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். சென்னை, ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாக துறை சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரூ.399.81 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 102 திட்டப்பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். … Read more

பரூக் அப்துல்லா வைஷ்ணவி தேவி கோயிலில் வழிபாடு

ஜம்மு/ஸ்ரீநகர்: தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கத்ராவில் உள்ள வைஷ்ணவி தேவி ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் தங்கிய பிறகு புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மூலம் ஸ்ரீ நகருக்கு நேற்று திரும்பினார். முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லா இதுகுறித்து கூறுகையில், “வைஷ்ணவி தேவி கோயிலில் சிறந்த தரிசனம் கிடைத்தது. அமைதி, முன்னேற்றம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றுக்கான எங்களின் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால், நாம் மட்டுமின்றி நமது … Read more

Ravi Mohan Line Up: யோகி பாபுவை இயக்கும் ரவி மோகன்; தயாரிப்பாளராக முதல் படம்- ஃபயர் மோடில் ரவி மோகன்

இந்தாண்டு தொடக்கத்திலிருந்து ஃபயர் மோடில் பரபரப்பாக இயங்கி வருகிறார் ரவி மோகன். புத்துணர்ச்சியுடன் இந்தப் புதிய வருடத்தைத் தொடங்க வேண்டும் என்ற நோக்கில் தன்னுடைய ஜெயம் ரவி என்கிற பெயரை ரவி மோகன் என்று மாற்றியிருந்தார். பெயரை மாற்றிய அதே ஜனவரி மாதத்தில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன் நடித்திருந்த ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. Ravi Mohan இத்திரைப்படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு, ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் … Read more

20 நாளாக புதிச்சேரியில் பத்திரப்பதிவு நிறுத்தம் : திமுக கண்டனம்

புதுச்சேரி கடந்த 20 நாட்களாக புதுச்சேரியில் பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.. தி.மு.க இளைஞரணி அமைப்பாளரும் முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் , ”புதுச்சேரியில் கடந்த 20 நாட்களாக பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது சொத்துகளை வாங்கவும், விற்கவும் முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக தங்களின் குடும்ப திருமண நிகழ்ச்சிகள், பள்ளி கல்லூரிகளுக்கு கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட முக்கிய வேலைகள் செய்ய முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் பத்திர பதிவிற்காக … Read more