உக்ரைன் மீது உக்கிரம் காட்டும் ரஷ்யா: ஒரே இரவில் 500 ட்ரோன்களை ஏவி தாக்குதல்!

கீவ்: மூன்று ஆண்டுகளாக தொடரும் போரில் மிகப்பெரிய இரவு நேர ட்ரோன் தாக்குதலாக, உக்ரைன் மீது ரஷ்யா சுமார் 500 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது என உக்ரைன் விமானப்படை கூறியது. உக்ரைன் மீது நேற்று இரவு 479 ட்ரோன்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள் வரை 20 ஏவுகணைகள் பல்வேறு பகுதிகளில் ஏவப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. ரஷ்யா முக்கியமாக மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளை குறிவைத்து தாக்கியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. உக்ரைனின் … Read more

ரவி மோகன் தயாரிப்பில் உருவாகும் முதல் படம்! இயக்குனர் இவர் தான்!

‘டிக்கிலோனா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி ‘ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் ‘ப்ரோகோட்- ( BroCode)’ என்ற படத்தில் நடிக்கும் ரவி மோகன்.

DIGIPIN: இந்திய அரசின் அதிநவீன டிஜிட்டல் முகவரி அமைப்பு, உங்கள் இருப்பிடத்தின் டிஜிட்டல் குறியீடு என்ன?

DigiPIN: இந்திய அரசு DIGIPIN எனப்படும் புதிய மற்றும் அதிநவீன டிஜிட்டல் முகவரி அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களுக்கும் துல்லியமான புவியியல் இருப்பிட முகவரியை வழங்கும் திறன் கொண்ட 10-எழுத்து எண்ணெழுத்து குறியீடாகும். இந்த புதிய அமைப்பு சுமார் 4×4 சதுர மீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய கிரிட்டை கவர் செய்கிறது. இதன் மூலம் இது பாரம்பரிய முகவரி அமைப்பு சீராக இல்லாத அல்லது அதிகம் அறியப்படாத பகுதிகளில் குறிப்பாக உதவியாக இருக்கும். DIGIPIN-ஐ … Read more

இந்தியாவில் ஒரு மாதம் இலவச இணைய சேவை வழங்க எலன் மஸ்க் திட்டம்…

டெல்லி:  பிரபல அமெரிக்க தொழிலதிபரான எலன் மஸ்க் நிறுவனத்தின்  ஸ்டார்லிங்க் இணைய சேவை வழங்க மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ள நிலையிலி, அந்நிறுவனம்  இந்தியாவில்  ஒரு மாதம் இலவச சேவை வழங்க  திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஸ்டார்லிங்க் அறிமுகம் செய்யபட இருப்பதால், தற்போது  இணைய சேவையை வழங்கி வரும்,   ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன. இதனால் இணைய போட்டி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் (Elon Musk) … Read more

டி.என்.பி.எல் – நெல்லையை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

கோவை, 9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதற்கட்ட லீக் சுற்று ஆட்டங்கள் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து சேப்பாக் அணியின் தொடக்க வீரர்களாக கே ஆஷிக் மற்றும் மொஹித் ஹரிஹரன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் … Read more

Los Angeles riots: படைகளை அனுப்பிய ட்ரம்ப்; `அரசியலமைப்பை மீறும் செயல்' -கலிபோர்னியா ஆளுநர் வழக்கு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அப்போது இருந்து இப்போது வரை, அவர் கொண்டுவந்திருக்கும் பல சட்டங்கள் சர்ச்சைகளைக் கிளப்பி உள்ளன. ஆனால், முதன்முதலாக பூதாகரமாக வெடித்த சர்ச்சை, ‘ஆவணம் செய்யப்படாமல் அமெரிக்காவில் குடியேறியவர்களை முறையில்லாமல் வெளியேற்றியது’ ஆகும். இப்போது இவர்களை வெளியேற்றுவதில் ட்ரம்ப் மேற்கொண்டுள்ள ஒரு நடவடிக்கை அமெரிக்காவிற்குள்ளேயே பெரும் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது. ட்ரம்ப் என்ன நடந்தது? அமெரிக்காவில் ஆவணம் செய்யாமல் குடியேறி இருப்பவர்களை வெளியேற்ற ட்ரம்ப் அரசு ரெய்டுகளைத் தொடர்ந்து … Read more

எம்ஜிஆர் பங்களா பட்டாவில் வில்லங்கம்: சட்டவிரோத பெயர் மாற்றத்தை ரத்து செய்து வாரிசுகளின் பெயருக்கு மாற்ற வேண்டி மனு

திருச்சி: ‘திருச்சியில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பங்களாவின் பட்டாவில் சட்டவிரோதமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை மாற்றி, எம்ஜிஆரின் வாரிசுகள் பெயரில் பட்டாவை மாற்றித்தர வேண்டும்’ என திருச்சி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி ஆட்சியர் மா.பிரதீப்குமாரிடம் திருச்சி வடக்கு காட்டூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சர்வேயர் சார்லஸ் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி உறையூர் திருத்தாந்தோணி சாலையில், மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆருக்கு சொந்தமான பங்களா மற்றும் காலியிடம் 80,000 … Read more

மகாராஷ்டிர தேர்தல் விவரங்கள்: தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு ராகுல் காந்தி பாராட்டு

மும்பை: மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பான ஆவணங்களை வெளியிடுவதாக அறிவித்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்று முடிந்த மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றது என்றும், தற்போது, அதே உத்தியைப் பின்பற்றி, பிஹார் தேர்தலில் முறைகேடு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து அடிப்படை ஆதாரமில்லாமல் ராகுல் காந்தி இவ்வாறு … Read more

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா நாளை பயணம்

வாஷிங்டன்: இந்​திய விண்​வெளி ஆய்வு நிறு​வனம் (இஸ்​ரோ) ககன்​யான் என்ற திட்​டத்தை 2027-ம் ஆண்டு செயல்​படுத்த திட்​ட​மிட்​டுள்​ளது. மனிதர்​களை விண்​வெளிக்கு அனுப்பி அவர்​களை மீண்​டும் பத்​திர​மாக பூமிக்கு அழைத்து வரு​வது​தான் இதன் நோக்​கம். அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனமும் இணைந்து கடந்த 2022-ல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்கலத்தை அனுப்பின. இது உலகின் முதல் தனியார் விண்கலம் ஆகும். அந்த வகையில் ஆக்சியம் 4 என்ற பெயரில் 4-வது விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டது. … Read more

ICC Hall Of Fame பட்டியலில் தல தோனி! கௌரவப்படுத்திய ஐசிசி!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் (ICC Hall of Fame) இணைந்துள்ளார். அவருடன் இணைந்து மேத்யூ ஹைடன், ஆஸிம் அம்லா, ஸ்மித் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றுள்ளது. திங்கட்கிழமை ஐசிசி வெளியிட்ட அறிவிப்பில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளது. “இந்திய அணியின் முக்கிய கேப்டன்களில் ஒருவராக இருந்த தோனி சர்வதேச போட்டியில் 17266 ரன்கள் அடித்துள்ளார். விக்கெட் கீப்பிங் மூலம் 829 முறை அவுட் ஆக்கியுள்ளார். 538 சர்வதேச போட்டியில் … Read more