கோவா அரசு மருத்துவமனையில் அமைச்சரின் அடாவடி : மருத்துவர்கள் போராட்டம்

பனாஜி கோவா அர்சு மருத்துவமனையில் அமைச்சர் அடாவடி செய்ததை எதிர்து மருத்துவர்கள் போராட்டம் நடத்துகின்றனர் கோவா மாநில சுகாதார துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திடீர் சோதனை நடத்திய போது கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி ருத்ரேஷ் குட்டிக்கர் நோயாளிகளிடம் கடுமையாக நடந்து கொண்டதாக கூறி, திட்டியதோடு அவரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் உத்தரவிட்டார். பத்திரிகையாளர் ஒருவரின் தாய்க்கு அவசர சிகிச்சை பிரிவில் வைட்டமின் பி 12 ஊசி … Read more

பிரியங்கா 14-ந் தேதி கேரளா வருகை

மலப்புரம், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முன்னணி சார்பில் ஆரியாடன் சவுகத் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா எம்.பி. வருகிற 14-ந் தேதி நிலம்பூர் வருகிறார். அவர் நிலம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற … Read more

பும்ரா அல்ல… இங்கிலாந்து தொடரில் இந்த இந்திய பவுலர்தான் அசத்துவார் – மேத்யூ ஹைடன் கணிப்பு

லார்ட்ஸ், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும், துணை கேப்டனாக ரிஷப் பண்டும் செயல்பட உள்ளனர். இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி கடந்த 6-ம் தேதி இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது. தற்போது அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. வேகப்பந்து … Read more

மலேசியாவில் கல்லூரி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 15 பேர் பலி – பிரதமர் இரங்கல்

கோலாலம்பூர், மலேசியாவில் சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 15 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த 30 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மலேசியாவின் பேராக் மாகாணத்தில் சுல்தான் இட்ரிஸ் என்ற தனியார் கல்லூரி அமைந்துள்ளது. அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிக்குச் சொந்தமான ஒரு வளாகம் ஜெர்டேவிலும் செயல்படுகிறது. அங்குள்ள மாணவர்கள் சிலர் பேராக்கில் உள்ள பிரதான வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பஸ்சில் புறப்பட்டனர்.தாய்லாந்து எல்லையில் உள்ள கெரிக் … Read more

Lion: 'இது என்னடா சிங்கங்களுக்கு வந்த சோதனை’ சஃபாரி வாகனங்களைத் தாக்காமல் இருப்பதன் காரணம் தெரியுமா?

சஃபாரி வாகனங்களைத் தாக்காமல் இருப்பதன் காரணம் தெரியுமா? ஆப்பிரிக்க காடுகளுக்குள்ள ‘லயன் சஃபாரி’ போறவங்க, ‘முழுசா மூடப்படாத ஜீப்’கள்ல செல்கிற ரீல்ஸ் அடிக்கடி கண்கள்லபட்டுக்கிட்டே இருக்கு. சில ரீல்ஸ்ல, ரிசார்ட் வெளியே புல்வெளியில சில டூரிஸ்ட்டுகள் டீ குடிச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்க, சிங்கங்கள் அவங்களை கண்டுக்காம கடந்து போகுது. இது என்னடா சிங்கங்களுக்கு வந்த சோதனை..? அடிக்கடி தங்களைப் பார்க்க வர்ற மனுஷங்களைப் பார்த்து பார்த்து சிங்கங்கள் ‘நார்மலைஸ்’ ஆயிடுச்சா? சிங்கங்களோட இந்த அமைதிக்குப் பின்னாடி வேற ஏதாவது … Read more

மாநிலங்களவை தேர்தலில் 13 பேர் வேட்புமனு தாக்கல்

சென்னை: தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 6 பேர் மற்றும் சுயேச்சைகள் 7 பேர் என 13 பேர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட, வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அந்த 6 இடங்களுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. … Read more

படியில் தொங்கி சென்றதால் விபரீதம்: ஓடும் ரயிலில் இருந்து விழுந்து மும்பையில் 5 பேர் உயிரிழப்பு

மும்பை: மும்பை அருகே இரு புறநகர் ரயில்கள் கடந்து சென்றபோது, படியில் தொங்கி சென்ற பயணிகள் மோதிக்கொண்டு கீழே விழுந்ததில் ரயில்வே காவலர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்தில் (சிஎஸ்எம்டி) இருந்து தானே மாவட்டம் கசரா நோக்கி நேற்று காலை 9 மணிக்கு புறநகர் ரயில் புறப்பட்டு சென்றது. முதல் வேலை நாள், அலுவலக நேரம் என்பதால் ரயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. ஏராளமானோர் … Read more

சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு: அமெரிக்காவில் கலவரம் பரவுவதால் பதற்றம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ட்ரம்ப் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் பெரும் கலவரம் வெடித்துள்ளது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள், கடைகள் சூறையாடப்பட்டன. அமெரிக்காவில் சுமார் 1.20 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அதிக பட்சமாக மெக்ஸிகோவை சேர்ந்த 40 லட்சம் பேர் அங்கு சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். இந்தியாவை சேர்ந்த 7.25 லட்சம் பேர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக … Read more

ஏழை பெண்கள் திருமணத்திற்கு உதவித்தொகை! எப்படி விண்ணப்பிப்பது?

தமிழ்நாட்டில் உள்ள ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களின் படிப்பிற்காகவும், திருமண செலவிற்காகவும் தமிழக அரசு கொண்டு வந்த திட்டம் தான் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம். 

ரோகித் சர்மாவால் பிசிசிஐக்கு ஏற்பட்ட தலைவலி! என்ன செய்யப்போகிறது நிர்வாகம்?

இந்தியாவில் சிறந்த ஓப்பனிங் வீரர்களில் ஒருவராக ரோகித் சர்மா இருந்து வருகிறார். வீரேந்திர சேவாக்கிற்கு பிறகு நீண்ட நாட்களாக இருந்த வெற்றிடத்தை ரோஹித் சர்மா நிரப்பி உள்ளார். தற்போது 38 வயதாகும் அவர் அதிரடியாக ஆடுவதில் சிறந்த விலங்குகிறார். கிட்டத்தட்ட ஒரு நாள் போட்டிகளில் 11 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ளார் ரோஹித். கடந்த ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து டி20 உலக கோப்பையை பெற்று கொடுத்தார், அதன் பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை … Read more