ஐபிஎல் 2025 தொடரில்… பதிவான 5 தனித்துவமான சாதனைகள்

IPL 2025 Five Records: 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதிவரை நடைபெற்றது. 10 அணிகள் மோதிய இந்த தொடரில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டனஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆப் தொடருக்கு தகுதிபெற்றன.  IPL 2025: 18 ஆண்டுகளுக்கு பின் ஆர்சிபிக்கு கோப்பை… இந்த ஐபிஎல் 2025 தொடர் பல்வேறு விஷயங்களில் சிறப்பானதாகும். குறிப்பாக, 18 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு … Read more

சென்னை குடிநீர் வாரியத்தில் ரூ.90 கோடி ஊழல்! அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழியர் சம்பளத்தில், ஆண்டுதோறும் 90 கோடி ரூபாய் ஊழல் நடப்பதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை குடிநீர் வாரியத்தில்,  ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை பாதியாக குறைத்து வழங்கி ரூ.90 கோடி ஊழலில் ஈடுபட்டது குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ம.க., செயல் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   தமிழக குடிசை மாற்று வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய … Read more

கர்நாடகா; தனிநபர் நீதிபதி ஆணையத்தின் காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

பெங்களூரு, கர்நாடகத்தில் கடந்த பா.ஜனதா ஆட்சியில் கொரோனா உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறினார்கள். பின்னர் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், கொரோனா முறைகேடுகள் குறித்து விசாரிக்க முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டார். இதற்காக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா தலைமையில் தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. நீதிபதியும் விசாரணை நடத்தி பா.ஜனதா ஆட்சியில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி அரசிடம் அறிக்கைகள் வழங்கினார். அந்த அறிக்கையின்படி விதானசவுதா போலீஸ் நிலையத்தில் பா.ஜனதா தலைவர்கள் … Read more

5 ரூபாய் மதிப்புள்ள பார்லே-ஜி பிஸ்கட் ரூ.2,300 -க்கு விற்பனை : காசாவில் அதிர்ச்சி

ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே யுத்தம் நடைபெற்று வருகிறது.கடந்த 20 மாதங்களாக காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடந்து வருகிறது. இதனால், பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகிறார்கள். காசாவில் அத்தியாவசிய பொருட்களுக்கான உணவு, குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. சர்வதேச நாடுகள் மனிதாபிமான உதவிகள் வழங்க முன் வந்த நிலையில் அதற்கு இஸ்ரேல் தடை விதித்தது. கடந்த இரு வாரங்களாக மட்டுமே அந்த தடை நீக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில், … Read more

பாமகவில் ஒற்றுமை திரும்ப வேண்டி கிருஷ்ணகிரி கோயிலில் அங்கப்பிரதட்சணம்!

கிருஷ்ணகிரி: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், பாமகவில் ஒற்றுமை திரும்ப வேண்டியும், சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற வேண்டியும், கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட பாமக சார்பில, காட்டுவீர ஆஞ்ச்நேயர் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடந்தன. மாவட்டச் செயலாளர் மோகன்ராம் தலைமையில், கட்சியினர் கோயிலை 11 முறை வலம் வந்து, வேண்டுதல் தேங்காய் உடைத்தனர். பின்னர், மாவட்ட செயலாளர் மோகன்ராம், ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் அங்கப்பிரதட்சணம் … Read more

பெங்களூரு கூட்ட நெரிசல்: கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர், பொருளாளர் ராஜினாமா

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 11 பேர் உயிரிழந்ததை அடுத்து, கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய இருவரும் தாங்களாக முன்வந்து பதவி விலகி உள்ளனர். குஜராத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த 3-ம் தேதி நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, … Read more

ரோஹித் சர்மா ஓய்வு பெற்றால்… இந்திய ஓடிஐ அணியின் அடுத்த கேப்டன் யார்…?

Shreyas Iyer: இந்திய அணியில் தற்போது சுக்கிரன் யாருக்கு உச்சத்தில் இருக்கிறது என கேட்டால் கோடிக்கணக்கானவர்கள் ஒரே விதமாக சொல்வது ஒருவரின் பெயரைதான்… அது ஷ்ரேயாஸ் ஐயர்தான். இவர் தனது கிரிக்கெட் வாழ்வின் 2வது உச்சத்தை அனுபவித்து வருகிறார் எனலாம். Shreyas Iyer: உச்சத்தில் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் ஷ்ரேயாஸ் ஐயர் 2014ஆம் ஆண்டிலேயே முதல்தர போட்டிகளில் விளையாடத் தொடங்கிவிட்டார். 2015ஆம் ஆண்டில் இருந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். 2017ஆம் ஆண்டில் … Read more

தகுதியே இல்லாமல் 50 பேருக்கு ஆபரேஷன்…

தகுதியே இல்லாமல் 50 பேருக்கு ஆபரேஷன். உண்மையான பெயர் பங்கஜ் மோகன். உண்மையிலேயே எம்பிபிஎஸ் பட்டம் வாங்கியவர். ஆனால் சொல்லிக் கொண்டதோ தன்னுடைய முழுப்பெயர், பங்கஜ் மோகன் சர்மா. முதுநிலை படிப்பான எம்டி மற்றும் DNP (Cardiology) ஆகிய மேற்படிப்புகளை முடித்ததாகவும் சொல்லிக்கொண்டு தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்து இருக்கிறார். 50க்கும் மேற்பட்டோருக்கு இருதய அறுவை சிகிச்சைகளையும் செய்து வந்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் தான் ஒரு வழக்கறிஞருக்கும் சமூக ஆர்வலருக்கும் டாக்டர் மோகன் சர்மா மீது சந்தேகம். … Read more

Pad Girl: "கல்வியை மேம்படுத்த முதல் அடி அரசியல்தான்" -ராகுல் காந்தி பாராட்டிய பீகார் பெண்ணின் பேச்சு

ராகுல் காந்தியின் சமீபத்திய பீகார் பயணம் சுவாரஸ்யமான உரையாடல்களுக்கு வழிவகுத்துள்ளது. கயாவில் மகிளா சம்வாத் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், சமூக வலைத்தளங்களில் ‘Pad Girl’ என அறியப்படும் ரியா பஸ்வான் என்ற பெண்ணிடம் பேசினார். அந்தப் பெண் ராகுல் காந்தியிடம், அவரை முன்மாதிரியாகக் கொண்டே அரசியலில் நுழைந்ததாகவும், அவரைப் போலவே திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். Ragul Gandhi ட்விட்டரில் வைரலாகிவரும் வீடியோவின்படி, ரியா அரசியலில் பெண்களை ஈடுபடுத்துவதற்கான காங்கிரஸின் முன்னெடுப்பான சக்தி அபியான் மூலமே … Read more